சுருங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஏப்
2015
00:00

சென்ற 2014 ஆம் ஆண்டு, பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரித்து விற்பனை செய்தவர்களுக்கு, நல்லதொரு ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டில் தான், மைக்ரோசாப்ட் தான் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான சப்போர்ட்டினை முழுமையாக நிறுத்திவிட்டதாக அறிவித்தது. இதனால் பல லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்கள் உலகம் முழுவதும், ஹேக்கர்களால் தாக்கப்படும் அபாயத்தை எதிர் நோக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டன. இதனால், பல நிறுவனங்களும் தனி நபர்களும், தங்களின் விண்டோஸ் எக்ஸ்பி கம்ப்யூட்டருக்குப் பதிலாக, விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர்களை வாங்கினார்கள்.
ஆனால், தற்போது கம்ப்யூட்டர்கள் விற்பனையில் சற்று மந்தநிலை ஏற்பட்டுள்ளது. புதிய கம்ப்யூட்டர்களை மக்களிடம் விற்பனை செய்திட இயலவில்லை என டெல் மற்றும் ஏசர் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மொத்தத்தில், 2014 ஆம் ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு இதுவரை 7% விற்பனை குறைந்துள்ளது.
2014ன் முதல் காலாண்டில், 7 கோடியே 33 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டில், இது 6 கோடியே 85 லட்சம் கம்ப்யூட்டராகக் குறைந்துள்ளது. இது, 2009 ஆம் ஆண்டுக்குப் பின், கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைவானதாகும். இதற்கான முதன்மைக் காரணம், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர்களை வைத்திருப்பவர்கள், அடுத்த நிலைக்கு மாறாததுதான்.
அடுத்த காரணம் விரைவில் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாக இருப்பதுதான். மக்கள் அனைவரும், தாங்கள் வாங்கத் திட்டமிடும் கம்ப்யூட்டர் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இருக்கட்டுமே என்ற எண்ணத்தில் உள்ளனர். நிச்சயமாக, இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், இழந்த பெர்சனல் கம்ப்யூட்டர் சந்தையைச் சரிப்படுத்தும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால், விண்டோஸ் 10, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆகியவற்றின் சிறந்த அம்சங்களோடு, புதிய பல வசதிகளையும் கொண்டிருக்கும் எனக் கருதப்படுகிறது.
விண்டோஸ் 10 எப்போது வரும் எனச் சரியான நாளை, மைக்ரோசாப்ட் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், பல கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில், அல்லது அதற்கும் முன்னதாகவே, தங்களின் டேப்ளட் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வெளிவரும் என அறிவித்துள்ளனர்.
விற்பனை குறைவு குறித்து ஆய்வு மேற்கொண்ட நிறுவனங்கள் அனைத்தும் இந்த எதிர்பார்ப்பினை அறிவித்துள்ளனர்.
சென்ற காலாண்டில், லெனோவா நிறுவனம் ஒரு கோடியே 33 லட்சத்து 90 ஆயிரம் கம்ப்யூட்டர்களை விற்பனை செய்து முதல் இடம் பிடித்தது. ஹ்யூலெட் பேக்கார்ட் இரண்டாவது இடத்தில், ஒரு கோடியே 29 லட்சத்து 90 ஆயிரம் கம்ப்யூட்டர்களுடன் இருந்தது. டெல் நிறுவனம் 92 லட்சத்து 40 ஆயிரம் கம்ப்யூட்டர்களை விற்பனை செய்தது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X