எக்ஸெல் டிப்ஸ்...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஏப்
2015
00:00

அலகுகளை மாற்ற பார்முலா தேவையா?: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் வெகு காலத்திற்கு (?) முன்பு அடிக் கணக்கில் டேட்டா அமைத்ததாகவும், அதனை ஒரே கட்டளையில் பார்முலா கொடுத்து மீட்டர் அலகில் மாற்ற என்ன செய்திட வேண்டும் என வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். இது போல அலகுகள் மாற்றத்திற்கு பொதுவான கட்டளை என்னவென்று பார்க்கலாம்.
எக்ஸெல் தொகுப்பில் CONVERT என்ற பங்சனைக் கட்டளை வரியில் கொண்டு வந்து, எந்த அலகுகளையும் மாற்றலாம். இந்த பங்சனை அமைக்கையில் நீங்கள் பார்முலா எதனையும் அறிந்திருக்கத் தேவையில்லை. எடுத்துக்காட்டாக Column B -யில் வரிசையாக அடிக் கணக்கில் டேட்டா கொடுத்து வைத்திருக்கிறீர்கள். இதனை மீட்டர் கணக்கில் Column C யில் கொண்டு வர ஆசைப்படுகிறீர்கள். இனி Column B -யில் டேட்டா உள்ள செல்களைத் தேர்ந்தெடுக்கவும். இது B2 முதல் B8 வரை இருப்பதாக வைத்துக் கொள்வோம். முதலில் B2:B8 வரையிலான செல்களைத் தேர்ந்தெடுங்கள். அடுத்து C2:C8 தேர்ந்தெடுங்கள். இப்போது =CONVERT(B2,”ft”,”m”) என பார்முலாவினை டைப் செய்திடவும். அடுத்து Ctrl + Enter என்ற இரு கீகளையும் அழுத்தவும். இவ்வகைக் கட்டளை மூலம் பல வகையான அலகுகளை மாற்றி அமைக்கலாம். மைல்- கி.மீ, காலன் - லிட்டர் என பல கிடைக்கின்றன. பாரன்ஹீட் - செல்சியஸ் மாற்றத்திற்கான பார்முலா இப்படி இருக்கும். =CONVERT(68, “F”, “C”) செல்சியஸ் - பாரன்ஹீட் பார்முலா =CONVERT(68, “C”, “F”) என அமையும். எக்ஸெல் ஹெல்ப் மெனு சென்று மற்றவற்றிற்கான பார்முலாக்களை அமைக்கவும். உங்களிடம் பதியப்பட்டுள்ள எக்ஸெல் CONVERT பார்முலாவினை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள எக்ஸெல் தொகுப்பு எடுத்துக் கொள்ளவில்லை என்றால், Analysis ToolPak - னை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பின்னர் பயன்படுத்தவும்.

பல ஒர்க்புக்குகளை உடன் மூடிட: எக்ஸெல் புரோகிராமில் செயலாற்றுகையில், ஒர்க்புக் ஒன்றினை மூடுவதற்குப் பல வழிகளை நாம் பின்பற்றுகிறோம். ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க் புக்குகளை மூடுவதற்கு என்ன செய்கிறோம்? ஒவ்வொன்றாகத்தான் மூடுகிறோம். இதற்கு ஒரு சுருக்கு வழியினை எக்ஸெல் கொண்டுள்ளது. அது வெளிப்படையாகத் தெரியாததால், நாம் அதனை அறியாமல் இருக்கிறோம். பல ஒர்க்புக்குகளை, ஒரே கீ அழுத்தத்தில் மூட, ஷிப்ட் கீ அழுத்திக் கொண்டு பைல் மெனுவினைத் திறக்கவும். இப்போது Close என்பது Close All எனக் காட்டப்படும். இதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், அனைத்து ஒர்க் புக்குகளும் மூடப்படும். ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ஷிப்ட் கீ அழுத்திக் கொண்டு பைல் மெனு திறந்தால் தான், Close All என்பது காட்டப்படும். இல்லையேல் அது காட்சி அளிக்காது.

பிரிண்ட் பிரிவியூ: எக்ஸெல் புரோகிராமில் டயலாக் பாக்ஸினைப் பயன்படுத்துகையில், நீங்கள் டயலாக் பாக்ஸில் காண்பதனை செட் செய்து அமைக்கலாம். இதில் ஒன்று, நீங்கள் பார்க்கும் எக்ஸெல் ஒர்க்புக்கின் பிரிவியூ காட்சியினை டயலாக் பாக்ஸின் இட து பக்கம் காட்டும்படி அமைக்கலாம். Views டூலினை அடுத்துள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்து, கிடைக்கும் பட்டியலில் Preview என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த Open டயலாக் பாக்ஸ் திறக்கப்படுகையில், சில ஒர்க்புக்குகளுக்கு பிரிவியூ எனப்படும் முன் தோற்றக் காட்சி தரப்படவில்லை என்பதை உணர்ந்திருப்பீர்கள். அனைத்து ஒர்க்புக்குகளுக்கும் பிரிவியூ காட்சி இருக்க வேண்டும் என முடிவு செய்தால், கீழே தந்துள்ளபடி செட் செய்திடவும்.
1. Office பட்டன் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Prepare மற்றும் Properties கிளிக் செய்திடவும். எக்ஸெல், உங்களுடைய ஒர்க்ஷீட் மேலாக, சுருக்காமாக properties காட்டும்.
2. அடுத்து Document Properties ஐ அடுத்துள்ள அம்புக் குறியின் மீது கிளிக் செய்திடவும். இங்கு Advanced Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் இப்போது Properties டயலாக் பாக்ஸைத் திறக்கும்.
3. இங்கு Summary டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
4. இந்த டயலாக் பாக்ஸின் கீழாக உள்ள Save Thumbnails for All Excel Documents என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. அடுத்து Properties டயலாக் பாக்ஸை மூட ஓகே கிளிக் செய்திடுவோம்.
6. இப்போது ஒர்க்புக்கினை சேவ் செய்திடவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X