ஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 நவ
2010
00:00

 அப்டேட்டிங் என்ற சொல்லுக்கு நீங்கள் தந்துள்ள அற்றைப் படுத்துதல்  என்ற தமிழ்ச் சொல் அருமையிலும் அருமை.
- சி.தமிழரசன், திண்டுக்கல்
பி.டி.எப். கோப்புகளில் சில செயல்பாடு நடைபெறாத போது, கோப்பில் பிரச்னை என்று எண்ணி இருந்தேன். இப்போதுதான் விபரம் புரிந்தது.
- கா. சிவக்குமார், விருதுநகர்.
ஆங்கிலத்தில் எழுத கூகுள் தந்திடும் உதவி நல்ல பயனுள்ள ஒரு யுடிலிட்டி ஆகும். விளக்கமாக எடுத்துரைத் தலுக்கும் நன்றி.
- கே. எம். ஆரோக்கியநாதன், காரைக்கால்.
கவனத்திற்கு மற்றும் தெரிந்து கொள்ளுங்கள் ஆகியவற்றில் தரப்படும் செய்திகள் ஒரு டிக்ஷனரியில் இருப்பதைப் போல் உள்ளன. விட்டுவிடாமல் தொடரவும்.
- கே. வெங்கடாசலம்,  ஓய்வு பெற்ற பேராசிரியர், திருப்பூர்.
பிளாக்குகள் தயாரிப்பில் வேர்ட் ப்ரெஸ் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இது குறித்து இன்னும் எழுதவும்.
- கே. தமிழ்ச் செல்வன், சென்னை.
கீ ஸ்க்ராம்பளர் பெர்சனல் புரோகிராமினை அனைவருமே இறக்கிப் பதிந்து பயன்படுத்துவது நல்லது. அப்போதுதான் ஸ்பைவேர் மற்றும் மால்வேர்களின் தாக்குதல்களிலிருந்து ஓரளவாவது தப்பிக்க முடியும்.
- மா. ஊரப்பன், செஞ்சி.
 கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்க நீங்கள் தந்திருக்கும் டிப்ஸ் நல்ல மருந்து.  அசட்டையாக இல்லாமல் பின்பற்ற வேண்டிய வழிகள்.
- பேரா  தி.வளவன், திண்டுக்கல்.
 கிளிப் போர்டுகள் சார்ந்த விளக்கம் பல நாள் குழப்பத்தினை நீக்கியது.
- டி.ஜோஸப்பின் நிர்மலா, சென்னை.
 புதிது புதிதாய் எக்ஸெல் டிப்ஸ், எங்கள் வேலைக்கு உதவும் சிரஞ்சீவியாக உள்ளது. நன்றி
- காஞ்சி எம். சுப்ரமணி, திருநின்றவூர்.
 எக்ஸெல் டிப்ஸில் எண்களை ரவுண்ட் செய்வதற்கான விளக்கம் மிக மிகத் தெளிவாக உள்ளது. எங்களுக்கு வகுப்பு எடுக்கையில் இது புரியாமல் இருந்தது. நன்றி.
- எஸ். சாந்தா தினேஷ், மதுரை
இந்த என் டேஷ், எம் டேஷ் என்று ஏன் பெயர் உள்ளது என்று குழம்பிப் போய் இருந்தேன். நன்றாக விளக்கி உள்ளீர்கள்.
- கி. பூங்கோதை, சென்னை
பிரவுசரில் ரீட் ஒன்லி பைலாகத்தான் கிடைக்கிறதே என்று வழி தெரியாமல் இருந்ததற்கு தங்கள் குறிப்பு உதவி செய்தது.
- சி.டேவிட் நாதன், திண்டிவனம்
 நீங்கள் வழி காட்டியபடி ஸ்கிரிப்ட் டிபக்கிங் செயல்பாட்டினை நிறுத்திவிட்டேன். தகவலுக்கு நன்றி.
- எம். கோவிந்தராஜ், திண்டுக்கல்.
தினந்தோறும் வரும் புதிய வரவுகளில், தேர்ந்தெடுத்துத் தரும் மொபைல் மாடல்கள் செய்தி பயனுள்ள வை யாகவும், நம் பணத்திற்கு ஏற்ற பொருள் வாங்க வழி நடத்துபவை யாகவும் உள்ளன.  
- என். சீத்தாராமன், மதுரை.
ஹைபர்னேஷன் நம் கம்ப்யூட்டரில் மட்டும் இல்லையே என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு, அது குறித்த தகவல் உதவியாகவும் பயன் தருவதாகவும் அமைந்தது.
- சா. உதயமூர்த்தி, புதுச்சேரி
பைல்களை அடுத்தடுத்து வைத்துப் பார்க்கும் வசதி, வேர்டில் மட்டுமே உள்ளது என்று பயன்படுத்தி வந்தோம். எக்ஸெல் தொகுப்பிலும் மேற்கொள்ளலாம் என்ற தகவல் தந்தது மிகவும் உபயோகமாய் இருக்கிறது.
- கா. சிவநேசன், தேனி. 

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X