பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 ஏப்
2015
00:00

''வரையறையற்ற நடுநிலை இணையம்” கட்டுரையைப் படித்த பின்னர், நம்மை இணைய நிறுவனங்கள், எப்படி எல்லாம் தங்கள் விருப்பத்திற்கு ஆட்டுவிக்க முயற்சி செய்கின்றனர் என்பது விளங்கியது. மிக எளிமையான முறையில், அவற்றின் 'தில்லுமுல்லுகளை' வெளிப்படுத்தியமைக்கு நன்றி. நாம் உஷாராகத்தான் இருக்க வேண்டும்.
என். ஜனார்த்தனன், திருச்சி.

இணையப் பயன்பாட்டில் சமநிலை இல்லை என்றால், எப்படி எதிர்காலம் இருக்கும் என்பதனை, மின்சாரப் பயன்பாடு குறித்து எழுதித் தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள். என் பயம் என்னவென்றால், இன்றைக்கு இருக்கின்ற, மின் பற்றாக் குறையில், நம் அரசாங்கமும், அதிகாரிகளும் இதையே பின்பற்றத் தொடங்கிவிடுவார்களோ என்பதே. மிக அருமையான கட்டுரை. வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்.
டாக்டர் பேரா ஆ. சக்திநாதன், கோவை.

இன்டர்நெட் என்ற சொல் மற்றும் சார்ந்த குறிப்புகள் அனைத்தும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். நம்மை பண்பாடு மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற வைக்கக் கூடிய இணையத்தை, ஒரு சிலர் வளைத்துக் கொள்ள முயற்சிப்பதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
பேரா. பழ. அண்ணாமலை, சிதம்பரம்.

கூகுள் எதனையும் மாற்றி அமைக்க வல்ல தொழில் நுட்பத்தினை உருவாக்க முடியும். அந்நிறுவனம் தயாரிக்க இருக்கும் பேட்டரி குறித்த தகவல்கள், அதிசயத்தக்க வகையில் உள்ளன. அதன் முயற்சிகள் வெற்றி பெற்றால், நிச்சயம் சிறிய டிஜிட்டல் சாதனங்கள் இயக்கத்தில் மாறுதல்கள் ஏற்படும்.
எம்.புனிதா, கும்பகோணம்.

வீட்டில் உள்ளோர் அவசரமாகக் கேட்டார்கள் என மோடம் மற்றும் ரெளட்டராகச் செயல்படும் சாதனம் ஒன்றை வாங்கி இணைத்தேன். அதன் பயன்பாடு முழுமையாகச் சரியாகத் தெரியாத நிலையில், உங்கள் ”வை பி வேகம் குறைகிறதா?” என்ற கட்டுரை பல பயனுள்ள தகவல்களைத் தந்தது. நன்றி.
செ. ஊர்காவலன், மேலூர்.

4ஜி அலைவரிசை பயன்பாடு இந்தியாவில் நிச்சயம் வெற்றி பெறும். இணைய இணைப்பின் பயன்களை மக்கள் அறிந்து கொள்ளத் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது கிராமப் புறத்திலும் இது பரவி வருகிறது. டேட்டா பிளான்களுக்கான கட்டணம் மட்டும், மக்கள் நிதி நிலைக்கேற்ற வகையில் இருந்தால், 4ஜி மக்களின் சிறந்த நண்பனாக இயங்கும்.
ஆர். கதிர்வேல், சென்னை.

4ஜி போன்ற புதிய தொழில் நுட்பத்தினை அரசு அனுமதிக்கையில், மக்களுக்கேற்ற வகையில்
கட்டணத்தையும் நிச்சயம் செய்து அறிவித்தால், பயன் உள்ளதாக இருக்கும். இல்லை எனில், இடையே இருக்கும் நிறுவனங்கள் தான் காசு பார்க்கத் தொடங்கிவிடுவார்கள்.
மா.சி. தமிழ்ச்செல்வி. தாயில்பட்டி.

இந்த உலகை சாப்ட்வேர் மூலம் மாற்ற முடியும், இயக்க முடியும் என்பதைக் கூறி அப்படியே செய்து காட்டிய பில் கேட்ஸ் ஒரு தீர்க்கதரிசி. அவரைப் பற்றிய கட்டுரை பல தகவல்களைத் தருவதாக அமைந்துள்ளது. நம் மாணவர்கள் அனைவரும் அவர் வாழ்க்கை சரித்திரத்தைக் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
என். ஜெயச்சந்திரன், சென்னை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X