திருப்புமுனையாக பிரவுசர் "எட்ஜ்”
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 மே
2015
00:00

விண்டோஸ் 10 இயக்க முறைமையுடன், புதிய நவீன தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்ட, மிகக் குறைந்த அளவிலான பிரவுசர் ஒன்றின் சோதனைப் பதிப்பை, மைக்ரோசாப்ட் வெளியிட்டிருந்தது. இதனை "ஸ்பார்டன்” என்ற குறியீட்டுப் பெயரால் அழைத்து வந்தது. அண்மையில் நடந்த அதன் டெவலப்பர்கள் ஆய்வரங்கில், அதனை "எட்ஜ்” (உஈஎஉ) எனப் பெயரிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது. ”நம் வேலைகளை முடிப்பதற்காக உருவாக்கப்பட்ட பிரவுசர்” என்ற விளம்பர வாசகத்தோடு இது வெளிவரும்.
ஏற்கனவே, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக, மைக்ரோசாப்ட் தன் பிரவுசரை வளர்த்து வந்தது. "ஞு” என்ற எழுத்தின் மீது கிளிக் செய்து, பயனாளர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பெற்று வந்தனர். இனி 'எட்ஜ்' பிரவுசருக்கும் அதே "ஞு” எழுத்து ஐகானாகத் தரப்படுமா என்பது இனிமேல் தான் தெரியும்.
விண்டோஸ் 10 இயக்க முறைமை இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 மற்றும் எட்ஜ்
பிரவுசர்கள் வழங்கப்படும். இவை இரண்டும் சற்றுப் பெரிய டேப்ளட் பி.சி. மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் இருக்கும். ஆனால், மொபைல் சாதனங்களில், எட்ஜ் மட்டுமே கிடைக்கும்.
நம்முடைய பெர்சனல் உதவியாளர் என அழைக்கப்படும் கார்டனாவுடன் (இணிணூtச்ணச்) இணைந்து வழங்கப்படும். பிரவுசர் ஒன்றில் இவ்வாறு இன்னொரு செயலி இணைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். பிரவுசரில் தேடுகையில், சிக்கலான நேரத்தில், இந்த அசிஸ்டண்ட் தலையை நீட்டி, நமக்கு உதவிடும். இது ஒரு யுனிவர்சல் செயலியாக இருக்கும். இதனைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். விண்டோஸ் ஸ்டோரிலிருந்து பெறலாம்.
இந்த எட்ஜ் பிரவுசரில் இன்னும் சில மேம்பாட்டு வசதிகள் தரப்பட்டவுடன், குரோம் எக்ஸ்டன்சன் புரோகிராம்களை இதில் பயன்படுத்தலாம் என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஆனால், அவை மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் சோதனை செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
இந்த பிரவுசர் நாம் "செயல்படுவதற்கு” என வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நாம் குறிப்புகளை எழுத முடியும். தொடு திரை எனில், கவனத்தில் இருத்தி வைக்க, இணைய தளப் பக்கங்களில், கோடுகள் இட முடியும். வட்டங்களால் டெக்ஸ்ட்டைத் தனியே காட்ட முடியும்.
எட்ஜ் பிரவுசர் தரப்படுவதும், அதற்காக இதுவரை வளர்த்து வந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரரை அப்புறப்படுத்துவதும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தைரியமிக்க செயல் என அனைவராலும் கருதப்படுகிறது. ஆண்டுகள் செல்லச் செல்ல, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், மெதுவாகச் செயல்படத் தொடங்கியது. பிழைக் குறியீடுகள் தொடர்ந்து கண்டறியப்பட்டன. அதன் வழி ஹேக்கர்கள் நுழைந்த சம்பங்களும் மிகுதியாக இருந்தன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எக்ஸ்புளோரர் பதிப்பு 11, இது போன்ற குறைகள் எதுவுமில்லாமல் இருந்தாலும், வாடிக்கையாளர்களை அது மிகத் தாமதமாகவே வந்தடைந்தது. இந்த பிரவுசர் தந்த பிரச்னைகளால், பல வாடிக்கையாளர்கள், பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர் பக்கம் சென்றுவிட்டனர்.
விண்டோஸ் 10 மற்றும் எட்ஜ் பிரவுசர் மூலம், விண்டோஸ் 8 மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரிலிருந்து விலகிச் சென்ற வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் இழுக்க முடியும் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது.
விண்டோஸ் 10 சிஸ்டத்துடன், இரண்டு பிரவுசர்களும் தரப்பட்டாலும், எதிர்காலத்தில், எட்ஜ் பிரவுசர் மட்டுமே நிலையாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் வருமானம்
பேஸ்புக் 2015 ஆம் ஆண்டின், மார்ச் 31 உடன் முடிந்த முதல் காலாண்டில் 350 கோடி டாலர் (ரூ. 2,23,22,63,25,000.00) ரூ. 2.23 லட்சம் கோடி வருமானமாகப் பெற்றுள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டியதைக் காட்டிலும் ரூ 100 கோடி டாலர் அதிகமாகும். தினந்தோறும் பயன்படுத்திய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சராசரியாக 93.6 கோடி பேர். மொபைல் வழியாகப் பேஸ்புக் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 79.8 கோடி. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டைக் காட்டிலும் 24% அதிகமாகும்.

டாக்டர் பெ.சந்திர போஸ்

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X