"இலவச” அழைப்புகளைத் தரும் பி.எஸ்.என்.எல் மற்றும் ஏர்டெல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 மே
2015
00:00

ஸ்கைப், கூகுள், வைபர், பேஸ்புக் என இணைய நிறுவனங்கள் பல, இலவச அழைப்புகளை இணையம் வழியே தர அறிவித்த போது, ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற, மொபைல் சேவை நிறுவனங்கள் அதனை எதிர்த்து, தகவல் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (ட்ராய்) புகார் செய்தன. தற்போது பி.எஸ்.என்.எல். நிறுவனம், தன்னிடம் தரைவழி தொலைபேசி இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள், இரவு 9 மணி முதல், காலை 7 மணி வரை, இந்தியாவில் எந்த நிறுவனத்தின் போனுக்கும், தரைவழி மற்றும் மொபைல் இணைப்புகளுக்கு, இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ளலாம் என அறிவித்தது. தன் வாடிக்கையாளர்களில் பலர், லட்சக்கணக்கானவர்கள், தங்கள் தொலைபேசி இணைப்பை வேண்டாம் என அளித்ததால், இந்த இலவச அழைப்பு திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மே மாதம் முதல் நாள் முதல் அமல்படுத்தப்படுகிறது. கிராமம் மற்றும் நகர்ப்புறம் உள்ள அனைத்து தரைவழி இணைப்புகள் அனைத்திற்கும் இது பொருந்தும். தனியாகவோ, அல்லது பிராட்பேண்ட் இணைப்புடனோ, தரை வழி இணைப்பு பெற்றிருந்தால் இந்த சலுகை கிடைக்கும்.
தற்போது, இந்தியாவில் தரைவழி பிராட்பேண்ட் இணைப்பு வழங்குவதில் இரண்டாவது இடத்தைக் கொண்டிருக்கும் பாரதி ஏர்டெல் நிறுவனம், தன்னிடம் இணைய இணைப்பு பெற்றவர்கள், நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க் போனுக்கும் இலவசமாகப் பேசிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இது இணைய வழி அழைப்பு தரும் சேவையாக இருக்கும். இதற்கு, உள்ளூர் அழைப்புகளுக்கு மாதம் ரூ.49, வெளியூர் மற்றும் உள்ளூர் அழைப்புகளுக்கு மாதம் ரூ.99 என இரண்டு வகைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தனி நபர் பயன்பாட்டிற்கு மட்டுமே. வர்த்தக ரீதியான தொடர்புகளுக்கு அல்ல.
ரூ.49 திட்டத்தை மேற்கொள்ள விரும்பும் ஏர்டெல் இணைய சந்தாதாரர்கள் <UNL49> என டைப் செய்து , அதனை எஸ்.எம்.எஸ். ஆக 53636 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். ரூ.99 திட்டத்தில் இணைப்பு கொள்ள விரும்புபவர்கள், <UNL99> என டைப் செய்து, அதனை எஸ்.எம்.எஸ். ஆக 53636 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதனை, ஏற்கனவே ஏர்டெல் இணைப்பில் இருக்கும் மொபைல் போன் வழியாக அனுப்ப வேண்டும். ஏர்டெல் நிறுவனம், இந்தியாவில் 87 நகரங்களில், தரைவழி இணைய இணைப்பினை வழங்கி வருகிறது.

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X