இணைய இணைப்புக் கட்டணத்தை ஆறு மடங்கு உயர்த்துவோம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 மே
2015
00:00

இணையம் வழி போன் அழைப்புகளையும், விடியோ அழைப்புகளையும் வழங்கி வரும் ஸ்கைப் மற்றும் வாட்ஸ் அப் போன்ற நிறுவனங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவில்லை என்றால், இணைய இணைப்பு தரும் தகவல் தொடர்பு நிறுவனங்கள், இணைய இணைப்பிற்கான கட்டணத்தை ஆறு மடங்காக உயர்த்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அனைவருக்கும் “சமமான” இணையப் பயன்பாட்டினைத் தாங்களும் ஆதரிப்பதாக, இப்போது அறிவித்துள்ள இந்த நிறுவனங்கள், இதுவரை இணைய இணைப்பு கிடைக்காதவர்களுக்கென சில திட்டங்களையும் அறிவித்தன. ஆனாலும், தகவல்களை இணையத்திலிருந்து பெற்றுத் தருவதில், தங்களுக்கு அதிக செலவாகிறது என்றும், இதனால் பலருக்கு இணையம் எட்டாக் கனியாகிவிடும் எனக் கூறத் தொடங்கியுள்ளனர்.
ஒரே மாதிரியான சட்ட திட்டங்கள், இணைய சேவையில் இயங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இல்லை என்றால், இணைய இணைப்பிற்கான கட்டணம், தற்போது இருப்பதைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிகமாக உயர்த்தப்பட வேண்டியதிருக்கும் என இந்த இந்திய தகவல் தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அப்படி உயர்த்தப்படும் பட்சத்தில், இந்தியாவில் மேலும் பலர் இணைய இணைப்பில்லாத வாழ்க்கையினை மேற்கொள்ள வேண்டியதிருக்கும் என பார்தி ஏர்டெல் இந்தியா நிறுவனத்தின் தலைவர் கோபால் விட்டல் தெரிவித்துள்ளார். இதே கருத்தினை ”இந்திய மொபைல் சேவை நிறுவனங்களுக்கான அமைப்பாகிய COAI --~~Cellular Operators Association of India'' அமைப்பும் அறிவித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், “டிஜிட்டல் இந்தியா” உருவாக வேண்டும் என்றால், தொலை தொடர்பு கட்டமைப்பில், மேலும் ரூ. 5 லட்சம் கோடி முதலீடு செய்திட வேண்டும் எனவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு சென்ற வாரம் ”சப்கா
இன்டர்நெட் (Sabka Internet)” என்னும் இயக்கத்தைத் தொடங்கி யுள்ளது. இதற்கென sabkainternet.in என்ற முகவரியில் ஓர் இணைய தளமும் தொடங்கப்பட்டுள்ளது. இதனுடைய நோக்கங்களாகக் கீழே தரப்பட்டுள்ளவை
அறிவிக்கப்பட்டுள்ளன.
1. இணையத்தில் எதனை அணுக வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை,
2. எனக்குக் கட்டுப்படியாகும் செலவில் இணையம்,
3. என் பட்ஜெட்டிற்குள் கிடைக்கக் கூடிய இணைய இணைப்பிற்கான தீர்வுகளைப் பெறும் உரிமை, மற்றும்
4. ஒரே மாதிரியான சேவைக்கு, ஒரே மாதிரியான சட்ட திட்ட வரையறைகள். இந்த இலக்குகளைக் கொண்டு இந்த சப்கா இன் டர்நெட் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இதனை ஆதரிக்க விரும்புபவர்கள், கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 270 6899 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், இந்த இலக்குகளை அறிவிக்கும் எஸ்.எம்.எஸ். ஒன்று அனுப்பப்படுகிறது.
இணையம் வழி தொலைபேசி அழைப்புகளை வழங்கும் நிறுவனங்களும், மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கான சட்ட திட்ட வரையறைக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என ஏர்டெல் நிறுவனத் தலைவர் கூறியுள்ளார்.

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X