பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 மே
2015
00:00

விண்டோஸ் 10 சிஸ்டம் அறிமுகத்துடன், தன் வர்த்தக அணுகுமுறை அனைத்தையும் மைக்ரோசாப்ட் மாற்றிக் கொள்ளும் எனத் தெரிகிறது. இதன் ஒரு படி தான், ஒருங்கிணைந்த விண்டோஸ் ஸ்டோர். தகவல் தொழில் நுட்பப் பிரிவில் இயங்கும் நிறுவனங்கள், மக்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப, எளிய முறையில் பயன்படுத்தும் வகையில் தங்கள் அப்ளிகேஷன்களைத் தர வேண்டும் என்பதை அனைத்து நிறுவனங்களும் உணர வேண்டும்.

என். சொக்கநாதன், திருச்சி.

“மாறாத மூர் விதி” என்ற தலைப்பைப் பார்த்தவுடன், இதில் என்ன இருக்கப் போகிறது என்ற எண்ணத்துடன் படிக்கத் தொடங்கி, இந்த விதி இன்றைய டிஜிட்டல் உலகின் அடிப்படையை விளக்கும் எளிமையான விதி என்பதைத் தெரிந்து கொண்டேன். எளிமையாக விளக்கம் அளித்தமைக்கு நன்றி.
கே.எம்.ஷண்முகநாதன், விழுப்புரம்.

மூர் விதி, அது கூறும் பொருள் ஆகியனவற்றை மிகத் தெளிவாக, நல்ல எடுத்துக் காட்டுகளுடன் விளக்கம் தந்தது மிகச் சிறப்பு. என் பெரியப்பாவிடம் வால்வ் ரேடியோ குறித்து கேட்டு, அவரும் நீங்கள் எழுதியது போலவே கூறினார். ஆச்சரியமாக இருந்தது. மூர் விதியின் தாக்கம் எப்படி இந்த டிஜிட்டல் சாதனங்களில் காண முடிகிறது என்பதுவும் தெரிந்தது. அனைவரும் படித்து அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று இந்த மூர் விதி என்பதனை எனக்குத் தெரிந்த மாணவர்கள் படிக்க வேண்டும் எனக் கூறி வருகிறேன். கட்டுரை எழுதியவருக்கு என் பாராட்டுதல்கள்.
என். கைலாச நாதன், சீர்காழி.

மைக்ரோசாப்ட் 40 கட்டுரையைக் காட்டிலும் 'இவர்தான் பில் கேட்ஸ்' என அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சில குறிப்புகளைத் தந்தது மிகச் சிறப்பாக உள்ளது.
அ. அகிலா, திருநெல்வேலி.

மைக்ரோசாப்ட் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான், உலகில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற பெயரை விட்டுக் கொடுக்காது. நீங்கள் குறிப்பிடும் விண்டோஸ் 10க்கான காரணங்களும் நமக்கு கூடுதல் வசதிகளைத் தருபவையாகவே உள்ளன. கூட்டத்தோடு ஒத்துப் போக வேண்டும் என்றால், விண்டோஸ் 10க்கு மாறுவதுதான் நல்லது. இந்த வர்த்தக நோக்கிலும் பிரச்னையை ஆய்வு செய்து கட்டுரை ஒன்று தரவும்.
என். கோகிலம், திருப்பூர்.

ஆப்பிள் வாட்ச் மட்டுமல்ல, ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் தரப்படும் விளம்பரங்களும், மக்களிடம், குறிப்பாக அமெரிக்க மக்களிடம் உள்ள கண்மூடித்தனமான நம்பிக்கையுமே ஆப்பிள் வெற்றிக்குக் காரணம். மற்றபடி சந்தையில் ஆப்பிள் சாதனங்களைக் காட்டிலும் நல்ல சாதனங்கள் கிடைக்கத்தான் செய்கின்றன. நீங்களும் இது குறித்த செய்திகளை மூளைச் சலவை செய்வது போலத் தருகிறீர்கள்.
டாக்டர் கோ. பெரியசாமி, மதுரை.

கூகுள் தேடல்கள் தொகுப்பு ஒன்றை நாம் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. அப்போதுதான் நம் தேடல்கள் குறித்து பிற்காலத்தில் தேவைப்படுகையில் பயன்படுத்திக் கொள்ளலாம். கூகுள் தரும் இந்த வசதி சிறப்பானதாகும். இதனைக் கவனத்திற்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி.
எஸ். ஞானப்பிரகாசம், திருநெல்வேலி.

யூனிநார் நிறுவனம் போல, அனைத்து மொபைல் சேவை நிறுவனங்களும், தங்கள் திட்டம், மொபைல் பயன்பாடு குறித்து வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற வாடிக்கையாளர்களுக்குக் கற்றுக் கொடுப்பது பெரிய மாற்றத்தினை
மக்களிடம் ஏற்படுத்தும்.
சி.கே. நாராயணன், சென்னை

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X