அண்மையில் வெளியான பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 மே
2015
00:00

ஸ்மார்ட் போன்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்கின்ற ஆவல், பலரிடம், குறிப்பாக கிராமப்புற மக்களிடம் பெருகி வருகிறது. இதை உணர்ந்து கொண்ட பல பிரபல நிறுவனங்கள், ஸ்மார்ட் போனுக்குரிய சில அடிப்படை வசதிகளைக் குறைக்காமல், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப, ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம்.
1. Moto E (2nd Gen): மோட்டாரோலாவின் இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ. 6,999. ரப்பரிலான சுற்றுப் புறம், கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் கூடிய திரை, நீர் உள்ளே புக முடியாத அளவிற்கு மேல் பூச்சு எனப் பலரையும் கவர்ந்திழுக்கும் அம்சங்கள் கொண்டது.
2. Huawei Honor 4X: ரூ. 10,499 விலையிடப்பட்டு இருந்தாலும், இந்த போன் தரும் வசதிகளை நோக்குகையில், இது ஒரு பட்ஜெட் விலை போன்தான். இதில் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டாலும், லேமினேட் செய்யப்பட்ட திரை தரப்பட்டுள்ளது. இதில் இரண்டு சிம்கள் இயங்குகின்றன. இது ஒரு 4ஜி நெட்வொர்க் போன்.
3. InFocus M2 : ரூ. 4,999 என விலையிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், Moto E போனைப் போல சற்றுப் பெரிய அளவில் உள்ளதாகும். இதனை அழுத்திப் பிடித்துப் பயன்படுத்தும் வகையில், மேட் பினிஷ் தரப்பட்டுள்ளது. இதன் ஹை டெபனிஷன் டச் ஸ்கிரீன் மற்ற போன்களைப் பின்னுக்குத் தள்ளுகிறது. இதன் இரண்டு கேமராக்களும் 8 எம்.பி. திறன் கொண்டவை என்பதனால், செல்பி படங்களையும் அதே தெளிவுடன் எடுக்க முடியும்.
4. Xiaomi Redmi 2: ரூ. 6,999 விலையிடப்பட்டு, மே முதல் வாரத்தில் விற்பனைக்கு வெளியான போன் இது. மிக உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக, இந்த போனைப் பற்றிய குறிப்பு தெரிவிக்கிறது. கீறல் விழ முடியாத, ட்ரேகன் ட்ரெயில் கிளாஸ் இதில் தரப்பட்டுள்ளது. இதன் 4.7 அங்குல திரை மிகத் துல்லியமாகக் காட்சிகளைத் தருவதால், திரைப்படங்கள் பார்க்க இது சரியான ஸ்மார்ட் போன். மொபைல் போட்டோ எடுக்க மிகவும் உகந்தது. இதன் யூசர் இன்டர்பேஸ் சற்று மாறுதலுடன் உள்ளதால், இதனைப் பயன்படுத்தி, டெக்ஸ்ட்டின் அளவை பெரிதாக்கிக் கொள்ளலாம்.
5. Karbonn Titanium MachTwo: இதன் விலை சற்று அதிகம் தான். ரூ. 10,490. இருப்பினும் விலைக்கேற்ற வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன். ஆப்பிள் ஐ போன் போலவே தோற்றமளிக்கும் இந்த போனில் கொரில்லா கிளாஸ் திரை தரப்பட்டுள்ளது. இதன் மெட்டல் கவரின் கீழாக, இரு ஸ்பீக்கர்கள் இயங்குகின்றன. இங்கு பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து போன்களில், இதன் ப்ராசசரின் வேகம் தான் மிக அதிகம். இதனால், டாகுமெண்ட் எடிட்டிங், மூவி பார்த்தல், அழைப்புகளைக் கையாளுதல் மற்றும் கேம்ஸ் விளையாடுதல் போன்றவை அதிக மகிழ்ச்சி அளிக்கும் செயல்பாடாக உள்ளன.
6. Lava Iris X8: ரூ. 8,999 விலையிடப்பட்டுள்ள இந்த போன், முழுக்க பிளாஸ்டிக்கினால் ஆனது. இதனால், இதனைக் கையாள்வது சற்றுக் கடினமாக இருக்கும். இதனுடைய ஆண்ட்ராய்ட் இன்டர்பேஸ் மூலம் சைகை, கண்களால் உற்று நோக்குதல் ஆகியவற்றின் மூலம் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். இதன் ப்ராசசரும் மிக வேகமாக இயங்கக் கூடியது ஆகும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X