இணையம் இணைக்கும் சாதனங்கள் 30 கோடி விற்பனையாகும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 மே
2015
00:00

இந்தியாவில் இணையப் பயன்பாடு மற்றும் மக்களின் போன்கள் வாங்கும் திறன் குறித்து இரு ஆய்வு அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அவற்றின்படி, இந்த ஆண்டில், இணையத்தை இணைக்கும் திறன் கொண்ட மொபைல் போன்கள் உட்பட்ட சாதனங்கள் 30 கோடி விற்பனையாகும். ஆனால், 44% இந்திய மக்கள், இணைய இணைப்பினைப் பணம் செலுத்தி வாங்கும் பொருளாதார வசதி கொண்டிருக்கவில்லை. கார்ட்னர் (Gartner) ஆய்வு மையம் அறிவித்தபடி, இணையத்தை இணைக்கும் பெர்சனல் கம்ப்யூட்டர், டேப்ளட் பி.சி., நவீன மொபைல் போன்கள் மற்றும் ஸ்மார்ட் போன்கள் ஆகியவற்றின் விற்பனை இந்த ஆண்டில், 30 கோடியை எட்டும். சென்ற 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 4.5% கூடுதலாகும். வழக்கமான பெர்சனல் கம்ப்யூட்டர் வளர்ச்சி 2%. லேப்டாப் மற்றும் நோட்புக் விற்பனை கூடுதல் 9%. டேப்ளட் பி.சி. விற்பனை 3% குறையும். மொபைல் போன்கள் விற்பனை 5% உயரும்.
இந்த ஆய்வில், கார்ட்னர், அதி நவீன மொபைல் போன் எனப் புதிய பிரிவினைத் தனியே அமைத்து கணக்கெடுத்துள்ளது. இந்த பிரிவில், மைக்ரோசாப் விண்டோஸ் 8 சாதனங்கள். ஆப்பிள் மேக்புக் ஏர், ஐபேட், ஐபேட் மினி, சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்., நெக்சஸ் 7 மற்றும் ஏசர் ஐகோனியா டேப் 8 மற்றும் லெனோவா சாதனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆனால், எத்தனை இந்திய குடிமக்கள், கட்டணம் செலுத்தி இணைய இணைப்பினைப் பெறும் நிலையில் உள்ளனர். 44% பேர், இணைய இணைப்பினைக் கட்டணம் செலுத்திப் பெற இயலா நிலையில் உள்ளனர். பாஸ்டன் கன்சல்டன்ஸி குரூப் என்ற ஆய்வு நிறுவனமும் இதே கருத்தை வெளியிட்டுள்ளது. இந்நிறுவன அறிக்கையின்படி, இந்தியக் குடும்பங்களில், இணைய இணைப்பினைப் பெற, ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் அல்லது அதற்கு மேல் வருமானம் உள்ள குடும்பமாக இருக்க வேண்டும். 2013 குறித்த அறிக்கையின்படி, இந்த வருமான எல்லைக்கு மேலாக உள்ளவர்கள் 56% பேர் மட்டுமே. 44% பேர், இணைய இணைப்பினைப் பெற இயலா நிலையிலேயே உள்ளனர். 2018 ஆம் ஆண்டில், இணைய இணைப்பு பெறத் தகுதியான வருமானம் உள்ளவர்களாக 67% பேர் இருப்பார்கள்.
இந்த இரு அறிக்கைகளும், ஒன்றை மிகத் தெளிவாக வலியுறுத்தியுள்ளனர். கிராமப் புறங்களில், இணையப் பயன்பாடு அதிகரிக்க வேண்டுமாயின், மொபைல் போன் மற்றும் பிற சாதனங்களின் விலை குறைக்கப்பட வேண்டும். இந்தியாவில் விற்பனையாகும் மொபைல் போன்களில், 65% போன்கள் இணைய இணைப்பு தருவன ஆகவே உள்ளன. ஆனால், மிகக் குறைந்த விலை கொண்ட போன் ரூ.4000 என்ற அளவில் இருப்பதால், மக்கள் ஸ்மார்ட் போன் வாங்குவதில் ஆர்வம் குறைந்துள்ளனர்.
குறைவான வருமானம் உள்ளவர்களிடம் இணையப் பயன்பாடு பெருக வேண்டும் என எதிர்பார்த்தால், அதற்கான சாதனங்கள் குறைந்த விலையில் வர வேண்டும். மேலும் நெட்வொர்க் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு, இணைய இணைப்பின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும்.

பாஸ்டன் அறிக்கையில் தரப்பட்டுள்ள சில முக்கிய கணிப்புகள்
2018 ஆம் ஆண்டில், மொத்த இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 55 கோடியாக உயரும். தற்போது இது 20 கோடியாக உள்ளது. வரும் மூன்று ஆண்டுகளில், 40% இந்திய மக்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருப்பார்கள்.
2020 ஆம் ஆண்டில், இணையமானது இந்திய தேசிய பொருள் உற்பத்தியில், 5% பங்கினைத் தரும். இது ரூ. 12 லட்சம் கோடிக்கு இணையானதாகும்.
2018ல், 54% இணையப் பயனாளர்களின் வயது 25க்கும் அதிகமாக இருக்கும். தற்போது இவர்கள் 40% ஆக உள்ளனர்.
2019 ஆம் ஆண்டில், 50% இணையப் பயனாளர்களில், பாதிப்பேர், கிராமப் புறங்களில் வசிப்பவர்களாக இருப்பார்கள். தற்போது இது 29% மட்டுமே.
இந்தியக் குடும்பம் ஒன்றின் செலவினங்களைக் கட்டுப்படுத்துபவர், 44% அந்த குடும்பத்தின் தலைவியாக இருந்தாலும், அவர்களில் 25% பேர் மட்டுமே, இணையத்தைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களாக உள்ளனர். 2018ல் இது 30% ஆகவும், 2025ல், இது 40% ஆகவும் உயரும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மாநில மொழிகளில், இணையத் தளத்தில் காணப்படும் தகவல்கள் 25% ஆக உள்ளன. இது வரும் 2018ல், 60% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு, https://www.bcgperspectives.com/content/articles/centerconsumercustomerinsightmarketingchangingconnectedconsumerindia/ என்ற முகவரியில் உள்ள தளத்தினைப் பார்க்கவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X