பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 மே
2015
00:00

பி.எஸ்.என்.எல். தரும் இலவச அழைப்பு உண்மையிலேயே நன்மை தருவதாகும். ஆனால், ஏர்டெல் நிறுவனம் எப்படியாவது, நம் போனில் உள்ள கட்டணத்தை எடுத்துவிடும் என்பதால், நம்பி இந்த திட்டத்தில் இறங்க யோசிக்க வேண்டியதுள்ளது.
ஆ.மாயவன், தஞ்சாவூர்.

சீனாவின் ஸியாமி நிறுவனம் செல்லும் வேகத்தைப் பார்த்தால், அனைத்து முன்னணி நிறுவனங்களையும் பின்னுக்குத் தள்ளிவிடும் போலத் தெரிகிறது. விற்பனைக்குப் பின் சேவை என்பதில் நல்ல கவனம் செலுத்தினால், நிச்சயம் எந்த நிறுவனமும் வெற்றி பெறும். அதுதான், அனைத்து மொபைல் நிறுவனங்களும் கவனம் செலுத்தாத ஒன்றாக உள்ளது.
எஸ்.கே. அண்ணாமலை, இராமநாதபுரம்.

எக்ஸ்பியை விட்டு வந்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு நாம் இன்னும் சில மாதங்களில் தள்ளப்பட்டு விடுவோம். ஒவ்வொரு பிரிவின் சப்போர்ட்டும் விலக்கப்பட்டுக் கொண்டிருப்பது இதற்கான அறிகுறியே.
பா.மதிராணி, திருப்பூர்.

நாம் இனி தொடர்ந்து பயன்படுத்த இருக்கின்ற “எட்ஜ்” பிரவுசர் குறித்து, இன்னும் கூடுதலாகக் குறிப்புகள் தரவும். இதுவரை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பக்கமே செல்லாமல் இருக்கிறோம். இனி, மைக்ரோசாப்ட் தரும் இந்த 'எட்ஜ்' பிரவுசரைப் பயன்படுத்திப் பார்க்க முடிவு செய்துள்ளோம். விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் இது தரப்படும் நாளை எதிர்பார்க்கிறோம்.
என். தேவசகாயம், புதுச்சேரி.

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் எப்படி அஞ்சல்களைக் கையாள வேண்டும் எனப் படிப்படியாகப் பாடம் நடத்துவது போல தந்திருப்பது மிக அருமை. மிக்க நன்றி. ஆண்ட்ராய்ட் மொபைல் ஸ்மார்ட் போன்களைப் புதியதாகப் பயன்படுத்துவோருக்கு சரியான வழிகாட்டி இந்தக் கட்டுரை.
பேரா. மா. சிவகுருமூர்த்தி, மதுரை.

இன்டெல் தரும் “விரல் நீளக் கம்ப்யூட்டர்”, இன்றைய கணினி உலகைக் கைக்குள் கொண்டு வரும் வியப்பைத் தரும் ஒரு சாதனம். விரைவில் இந்தியாவிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். அடிக்கடி பயணங்களில் ஈடுபடுவோருக்கும் மிகவும் உதவியாக இது இருக்கும்.
எஸ். கார்த்திகேயன், சிதம்பரம்.

'நெட் நியூட்ராலிட்டி” திட்டத்தினை அரசு கடுமையாக அமல்படுத்தினால், இணைய இணைப்பு நிறுவனங்கள், அதிக லாபம் பார்க்க, இணைப்புக் கட்டணத்தை உயர்த்தலாம். அரசு இதனையும் கட்டுப்படுத்த வேண்டும். எந்த இணைய சேவை நிறுவனமும் குறைந்த லாபம் ஈட்டியதாகக் கணக்கே இல்லை. மக்களுக்கு உதவி செய்திட ஏன் இந்த நிறுவனங்கள் இவ்வளவு தயங்குகின்றன எனத் தெரியவில்லை.
எஸ். அகஸ்டின்,சென்னை.

யு ட்யூப் தொடங்கி பத்தாண்டு நிறைவுற்றதா? ஆச்சரியமாய் இருக்கிறது. இன்னும் நம்மோடு புதியதாய் இருப்பதாகத்தான் தெரிகிறது. எது குறித்து வேண்டுமானாலும், விளக்கப் படங்களைக் கொண்டிருப்பதுடன், மற்றவர்களுக்குத் தேவைப்படும் என நாம் நம்புபவற்றை, பதிப்பதற்கும் அனுமதி தரும் யு ட்யூப்பினைச் சரியாக அறிவாற்றலுக்குப் பயன்படுத்த வேண்டியது நமது கடமை.
டாக்டர். எஸ். சச்சிதானந்தம், நாகர்கோவில்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலக்கு நூறு கோடி சாதனங்கள் என்பது இன்றைக்குக் கேள்விக்குறியாக இருக்கலாம். ஆனால், நிச்சயம் தான் நினைத்ததைச் சாதிக்கும். இல்லாமலா, தனக்கு வருமானம் தரும், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையே இலவசமாகத் தருகிறது. ஆனால், இந்த நடவடிக்கைகள் அனைத்துமே நமக்கு பயன் அளிப்பவையாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
எஸ். திருமலை, ஆசிரியர், திண்டுக்கல்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X