விண்டோஸ் 10 க்குப் பின் எதுவுமில்லை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 மே
2015
00:00

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 10 விரைவில் வெளியிடப்படும் நிலையில், அதுவே இறுதியான விண்டோஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து விண்டோஸ் 11 என எதுவும் வராது. ஒரு எண்ணுடன் தரப்படும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக, விண்டோஸ் 10 இருக்கும். விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கும், தேவைப்படும் போதெல்லாம் அதற்கான சப்போர்ட் பைல்கள் தரப்படும். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை அன்று சப்போர்ட் பைல்கள் வெளியிடப்பட்டு வந்த பழக்கமும் கைவிடப் படுகிறது. ஆனால், தொடர்ந்து புதிய வசதிகள் அவ்வப்போது தரப்படும். புதிய வசதிகளை, அடுத்த விண்டோஸ் பதிப்பிற்கென தனியே ஒதுக்கி வைக்கும் பழக்கம் இனி இருக்காது என, மைக்ரோசாப்ட் நிறுவன பொறியாளர் பிரிவின் இயக்குநர் ஜெர்ரி நிக்ஸன், அண்மையில் சிகாகோ நகரில் நடந்த கருத்தரங்கில் தெரிவித்துள்ளார். இதுவரை அப்டேட் பைல்கள், பாதுகாப்பு குறித்தவையாகவே இருந்து வந்துள்ளன. இனி, புதிய வசதிகளும் அது போலவே அப்டேட் பைல்களாகத் தரப்படும். விண்டோஸ் 10, மைக்ரோசாப்ட் தரும் விண்டோஸ் ஓ.எஸ். எக்ஸ் (Windows OS X) இருக்கும். அதாவது, ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போல இதுவும் தொடரும்.
இது நல்லதொரு பழக்கம் தான். எங்கும் பிராட்பேண்ட் இணைய இணைப்பு கிடைக்கும் சூழ்நிலையில், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை சி.டி.யில் அதற்கான பதிவு எண்ணுடன் டப்பாவில் அடைத்து விற்பனை செய்திட வேண்டியதில்லை. இணையத்திலிருந்து அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான். வருங்காலத்தில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒரு சேவையாகத்தான் கருதப்படும். புதிய வசதிகள் மற்றும் தேவைப்படும் மாற்றங்கள், அவை தேவைப்படும்போதெல்லாம் வழங்கப்படும்.
ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போல, சிறிய அளவில், இலவச அப்டேட் வசதிகள் மட்டுமே விண்டோஸ் 10 சிஸ்டத்திற்குத் தரப்படும். விண்டோஸ் 10 சிஸ்டம் பைல்களும், விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டத்துடன் இணைக்கப்படும் சிறிய அளவிலான அப்டேட் பைல்களாகவே கிடைக்கும். விண்டோஸ் 10 வெளியிடப்பட்டு, ஓர் ஆண்டுக்குள், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்டிருப்பவர்கள் தங்கள் சிஸ்டத்தினை “அப்டேட்” செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் தனியே விலை கொடுத்துத்தான் அதற்கான உரிமம் பெற்றுக் கொள்ள முடியும்.
பெரிய அளவிலும் மாற்றங்கள் மற்றும் வசதிகள் தரப்பட வேண்டும் என மைக்ரோசாப்ட் விரும்பினால், அவையும் தரப்படும். ஆனால், அனைத்தும், டெஸ்க்டாப் மற்றும் மொபைல் சாதனங்களுக்குப் பொதுவானவையாகவே இருக்கும். ஆனால், சில விஷயங்கள் இன்னும் தெளிவாக்கப்படவில்லை. விண்டோஸ் 10 அப்டேட் செய்து கொண்டவர்கள், கம்ப்யூட்டரில் நுழைந்து பதிந்து கொண்ட வைரஸ் புரோகிராம்களை நீக்க, ரீ இன்ஸ்டால் செய்வது குறித்து எந்த குறிப்பும் இதுவரை தரப்படவில்லை. இப்போது விண்டோஸ் 7 அல்லது 8 சிஸ்டம் கொண்டு இயக்கி வருபவர்கள், மீண்டும் விண்டோஸ் சிஸ்டத்தினைத் தங்களிடம் உள்ள சிஸ்டம் சி.டி. அல்லது தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் மூலம் உருவாக்கப்பட்ட, ப்ளாஷ் ட்ரைவ் இன்ஸ்டலேஷன் செயலிகள் மூலம், ரீ இன்ஸ்டால் செய்து கொள்கின்றனர். இது விண்டோஸ் 10க்கு எப்படி இருக்கும் என இன்னும் அறியப்படவில்லை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X