விண்டோஸ் 10 எத்தனை வகைகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 மே
2015
00:00

விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இலவசமாக வெளியிடப்பட இருக்கும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 எத்தனை வகைகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் ஆய்வுப் பிரிவின் துணைத் தலைவர் Tony Prophet இது குறித்து வலைமனைச் செய்தியில் (http://blogs.windows.com/bloggingwindows/2015/05/13/introducingwindows10editions/) குறிப்புகளைத் தந்துள்ளார். விண்டோஸ் 10 இயக்க முறைமை, இன்னும் ஓரிரு மாதங்களில், பெரும்பாலும் ஜூலையில், 190 நாடுகளில், 111 மொழிகளில் வெளியாக உள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டர்கள், டேப்ளட் பி.சி.க்கள், மொபைல் போன்கள், எக்ஸ் பாக்ஸ் ஒன் சாதனங்கள், ஹோலோ லென்ஸ் மற்றும் சர்பேஸ் ஹப் ஆகிய அனைத்திலும் இயங்கும் தன்மையைக் கொண்டதாக விண்டோஸ் 10 இருக்கும். அத்துடன், நாம் இந்த உலகில் பயன்படுத்தும் டிஜிட்டல் சாதனங்களிலும் இது இயங்கும். ஏ.டி.எம். சாதனங்களிலிருந்து நம் இதயத் துடிப்பினை அளக்கும் கருவி வரையிலும், பல்வேறு சாதனங்களிலும் இது இயங்கும்.“ எந்த சாதனத்தைப் பயன்படுத்தினாலும், மக்களுக்கு அது தரும் அனுபவம், புதியதாகவும், இனிமையானதாகவும் இருக்கும்' என டோனி ப்ராபட் கூறியுள்ளார். மொத்தம் ஏழு வகையான விண்டோஸ் 10 இயக்க முறைமை வெளியாகவுள்ளது.
அவை:
விண்டோஸ் 10 ஹோம்: நுகர்வோரை மையப்படுத்திய டெஸ்க் டாப் பதிப்பு. இதில் விண்டோஸ் இயக்க முறைமையின் அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கும். எட்ஜ் பிரவுசர், தொடு உணர் திரை உள்ள டேப்ளட் பி.சிக்கான Continuum டூல். கார்டனா இணைப்பு, போட்டோ, வீடியோ, மேப், மெயில், காலண்டர் மற்றும் மியூசிக் பைல்களை இயக்க செயலிகள், விண்டோஸ் ஹலோ எனப்படும் முகம் பார்த்து அனுமதி வழங்கும் டூல் ஆகியவை கிடைக்கும். ஆபீஸ் அப்ளிகேஷன் வெளியாகும்போது, இலவச அப்டேட் ஆகத் தரப்படும்.

விண்டோஸ் 10 மொபைல்: விண்டோஸ் போன்கள், மற்றும் சிறிய அளவிலான (3 முதல் 7.99 அங்குல அளவிலான திரை கொண்ட ) டேப்ளட் சாதனங்களுக்கானது.

விண்டோஸ் மொபைல் எண்டர்பிரைஸ்: இது விண்டோஸ் 10 மொபைல் சாதனங்களுக்கென, மொத்த எண்ணிக்கையில் உரிமங்களை வாங்குவோருக்கு மட்டும்.

விண்டோஸ் 10 ப்ரோ: மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக் கூடிய விண்டோஸ் 10 டெஸ்க் டாப் பதிப்பு. தொழில் நுட்ப ரீதியாகப் பயன்படுத்துவோருக்கு இது பொருந்தும்.

விண்டோஸ் 10 எண்டர்பிரைஸ்: நிறுவனங்களுக்கான விண்டோஸ் 10. அதிக எண்ணிக்கையில் உரிமங்கள் வேண்டுவோருக்கானது. இந்த பதிப்பு, முதல் ஆண்டு இலவச பதிப்பினை நாடுவோருக்கானது அல்ல. இதற்கென தனியே உரிம ஒப்பந்தம் உண்டு.

விண்டோஸ் 10 கல்விக்கானது: கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கானது. கல்வி நிலையங்களுக்கென மொத்தமாக உரிமம் பெற விரும்புவோருக்கானது. பள்ளிகளும் மாணவர்களும், தங்கள் விண்டோஸ் 10 ஹோம் மற்றும் ப்ரோ பதிப்புகளிலிருந்து, இந்த பதிப்பிற்கு மாறிக் கொள்ள வழிகள் தரப்படும்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளபடி, விண்டோஸ் 10 எண்டர்பிரைஸ் மற்றும் விண்டோஸ் 10 மொபைல் எண்டர்பிரைஸ் ஆகிய பதிப்புகள், ஏ.டி.எம். மையங்களில் உள்ள சாதனங்கள், வர்த்தக மையங்களில் இயங்கும் விற்பனை கையாளும் சிறிய சாதனங்கள், கைகளில் வைத்துப் பயன்படுத்தும் சிறிய டெர்மினல்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சிறிய அளவில் பயன்படுத்தப்படும் ரோபோக்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும்.

விண்டோஸ் ஐ.ஓ.டி. கோர்: இந்த பதிப்பு, விலை குறைந்த, அதிகப் பயன் இல்லாத சாதனங்களில் பயன்படுத்தவென வடிவமைக்கப்பட்டது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X