பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 மே
2015
00:00

வாட்ஸ் அப் செயலியின் மூலம் அழைப்புகளை ஏற்படுத்தலாம் என்பது புதிய தகவலாய் இருந்தது. என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தந்து, தற்போது அதன் மூலமாகவே தொடர்பு கொள்கிறோம். அது மட்டுமின்றி வெளிநாட்டு நண்பர்களுடனும் எளிதாக, தங்கு தடையின்றி பேச முடிகிறது. தகவலுக்கு நன்றி.
பேரா. ஆர். சிவப்பிரகாசம், பள்ளிக்கரணை, சென்னை.

எட்ஜ் பிரவுசர் குறித்த கூடுதல் தகவல்களை அளித்தமைக்கு நன்றி. இதில் மரபு வழித் தொடர்பில்லை என்ற பொருள் நன்கு விளக்கப்பட்டுள்ளது. அதே போல, படத்துடன் எப்படி பிரவுசர் இணைய தளப் பக்கங்கள் மீது நம் குறிப்புகளை எழுதி வைக்க உதவுகிறது என்பதை விளக்கியதும் சிறப்பாக இருந்தது. எட்ஜ் பிரவுசரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
டாக்டர் என். சீனிவாசன், மதுரை.

நம்மைச் சுற்றியுள்ள அனைத்து சாதனங்களும், இன்டர்நெட் இணைப்பில் இயங்குபவையாகவே வரும் என்ற தகவல் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையாக உள்ளது. இனி, குக்கர், மைக்ரோவேவ் அடுப்பு என எது வாங்கினாலும், இது இணையத்தில் இணையுமா என்பதை, இது “ஸ்மார்ட்” சாதனமா என்று கேட்டு வாங்க வேண்டும். இப்போதே, அனைத்து டிவிகளும், ஸ்மார்ட் டிவிகளாகவே வரத் தொடங்கியுள்ளது இதற்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு.
பேரா. டி. திருமாறன், போடி.

எந்த ஒரு புதிய டிஜிட்டல் வசதியும், அதனுடன் சமுதாயத்திற்கான ஆபத்தினையும் உடன் கொண்டேதான் வருகிறது. அமெரிக்கா இந்திய இணைய வளர்ச்சி குறித்து காட்டும் கவலை இதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. மக்களாகிய நம்மிடம் தான், இதனைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தும் சக்தி உள்ளது.
நா. சந்தியா, சென்னை.

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், ஆவரேஜ், கவுண்ட், சம் போன்றவற்றை அதன் டாஸ்க் பாரில் காட்டும்படி அமைக்கும் டிப்ஸ் மிகப் பயனுள்ளது. நன்றி.
என். சுப்ரமணியம், கோவை.

2ஜிக்கும் 3ஜிக்கும் வேறுபாடு தெரியவில்லை என்பது, அனைத்து மொபைல் சேவை நிறுவனங்களுக்கும் பொருந்தும். 3ஜி என்று முதலில் சொல்லிவிட்டு, நாள் போக்கில் 2ஜி வேகத்தில் தான் இணைய இணைப்பும், தகவலும் கிடைக்கின்றன. 3ஜி சில நாட்களே செயல்படுகிறது. அத்துடன், நம் பயனாளர்கள் பலருக்கும், இரண்டிற்கும் இடையேயான டேட்டா வேறுபாடு தெரியவில்லை. நீங்கள் இந்த வேறுபாடு குறித்து ஒரு கட்டுரை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கா. நீதிதேவன், மதுரை.

வை பி இணைப்பு என்பது அனைத்து ஊர்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் வந்துவிட்டால், நிச்சயம் அது நம் வாழ்க்கையில் உதவிடும் ஒரு சிறந்த துணைவனாகத்தான் இருக்கும். மேல் நாடுகளில், அதிவேக இணைய இணைப்பினை எங்கும் பார்க்க முடிகிறது. இந்தியாவிலும் இது வர வேண்டும்.
ஆர். நயினார், தேனி.

பேஸ்புக்கில் விடியோ அரட்டை வந்துவிட்டால், அதனை வெட்டிப் பொழுது போக்கும் வகையில் நாம் பயன்படுத்தக் கூடாது. இப்போதே பேஸ்புக் மக்களின் மனதைக் கெடுத்து, தனிமைப் படுத்துகிறது என ஆய்வுகள் தெரிவிப்பதாகக் கட்டுரைகள் வந்து கொண்டிருக்கின்றன.
எஸ். இசபெல்லா, திருச்சி.

வை பி ரெளட்டர் சாதனத்திற்கேற்ற ரிபீட்டர் வாங்க வேண்டுமா? அல்லது எந்த ரிபீட்டரும் எந்த ரெளட்டருடனும் இணைந்து செயல்படுமா? என்பது குறித்துச் சற்றுத் தெளிவாக விளக்க வேண்டுகிறேன். தங்களின் கட்டுரை மிக அருமையாக உள்ளது.
பெ.வ. பாண்டியன், மதுரை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X