லெனோவா ஏ 5000, லெனோவா பி 70 அறிமுகம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 மே
2015
00:00

லெனோவா நிறுவனம், அண்மையில், இந்தியாவில் தன்னுடைய இரண்டு ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அவை ~ Lenovo A5000 மற்றும் P70. இவை இரண்டும் 1280 x 720 பிக்ஸெல் திறனுடன் கூடிய 5 அங்குல எல்.சி.டி. கெபாசிடிவ் தொடு உணர் திரையினைக் கொண்டுள்ளன. இதில் ஹை டெபனிஷன் டிஸ்பிளே கிடைக்கிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட். இந்த இரண்டு போன்களிலும் 4000 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்படுகிறது. ஏ 5000 ஸ்மார்ட் போனில், 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் மீடியா டெக் குவாட் கோர் ப்ராசசர் தரப்படுகிறது. பி70 போனில், 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் மீடியே டெக் ப்ராசசர் இயங்குகிறது.
லெனோவா ஏ 5000 போனில், ராம் மெமரி 1 ஜி.பி. இதன் ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு, 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். ஒரு மினி மற்றும் ஒரு மைக்ரோ என இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம். பின்புறமாக, ஆட்டோ போகஸ் திறன் கொண்ட 8 எம்.பி. திறன் கொண்ட, எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த கேமரா இயங்குகிறது. முன்புறமாக 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. இதன் பரிமாணம் 140x 71.4 x 9.98 மிமீ. எடை 160 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு, 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. அக்ஸிலரோ மீட்டர், ப்ராக்ஸிமிட்டி சென்சார் இயங்குகின்றன. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 9,999.
லெனோவா பி 70 ஸ்மார்ட் போனில், இரண்டு மைக்ரோ சிம்களை இயக்கலாம். இதன் பரிமாணம் 142 x 71.8 x 8.9 மிமீ. எடை 149 கிராம். இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. மைக்ரோ எஸ்.டி.கார்ட் மூலம் இதனை 32 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். பின்புறமாக, ஆட்டோ போகஸ் மற்றும் எல்.சி.டி. திரை கொண்ட 13 எம்.பி. திறனுடன் கூடிய கேமரா இயங்குகிறது. முன்புறமாக 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ, லவுட்ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. A2DP இணைந்த புளுடூத் செயல்பாடு கிடைக்கிறது. வை பி மற்றும் ஜி.பி.எஸ். இயங்குகின்றன. அக்ஸிலரோ மீட்டர், ப்ராக்ஸிமிட்டி சென்சார் இயங்குகின்றன. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. இதன் பேட்டரி 4,000 mAh திறன் கொண்டது. இள நீல வண்ணத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் அதிக பட்ச விலை ரூ. 15,999.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X