வேர்ட் டிப்ஸ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 மே
2015
00:00

இணைக்கப்பட்ட டேபிள்களில் செல்களின் அகலம்: வேர்ட் புரோகிராமில், இரண்டு டேபிள்களை மிக எளிதாக இணைக்கலாம். இரண்டுக்கும் இடையே உள்ள டெக்ஸ்ட்டை நீக்கி, இரண்டையும் இணைப்பது எளிது. ஆனால், இந்த இரண்டு டேபிள்களும், வெவ்வேறான எண்ணிக்கையில் நெட்டு வரிசைகளைக் கொண்டிருந்தால், இணைப்பது கடினம். மேலும், இந்த நெட்டு வரிசைகளின் அகலம் வெவ்வேறாக இருந்தாலும்,இது சிரமமான காரியமாக இருக்கும்.
இதற்கு விரைவான தீர்வு ஒன்றைனை வேர்ட் கொண்டுள்ளது. அது, வேர்ட் புரோகிராமினையே இந்த நெட்டு வரிசைகளை பார்மட் செய்திட விட்டுவிடுவதுதான். இதற்குக் கீழ்க்கண்ட செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
1. புதிதாக இணைக்கப்பட்ட டேபிளில் ஏதேனும் ஓர் இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும்.
2. ரிப்பனில் Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Select | Select Table எனச் செல்லவும். இப்போது முழு டேபிளும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இங்கு Cell Size குரூப்பில் தரப்பட்டுள்ள கண்ட்ரோல்களைப் பார்க்கவும். உயரம் மற்றும் அகலம் அமைப்பதற்கான கண்ட்ரோல்கள் தரப்பட்டுள்ளதனைக் காணலாம். உங்களுக்கு இப்போதைக்கு அகலத்தைச் சரி செய்வதுதான் வேலை. கண்ட்ரோலின் வலது புறம் உள்ள மேல் நோக்கிய அம்புக் குறியினைக் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட், நெட்டு வரிசையின் அகலத்தைச் சற்றுக் குறைப்பதனைக் காணலாம். இருப்பினும் அனைத்து நெட்டு வரிசையின் அகலமும் ஒரே அளவில் அமைந்திருப்பதனைப் பார்க்கலாம்.
இப்போது முழு டேபிளுக்கும் நெட்டு வரிசை ஒரே அகலத்தில் அமைந்திருப்பதனைக் காணலாம்.
இனி Cell Size குரூப்பில் AutoFit என்னும் டூலினைக் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது துணை மெனு ஒன்றைக் காட்டும். அதிலிருந்து AutoFit Window என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது டேபிளின் மொத்த அகலமும், கிடைக்கின்ற மார்ஜின் அகலம் மற்றும் நெட்டு வரிசை அனைத்திற்கும் ஒரே அளவில் அகலம் அமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். இந்த நேரத்தில், நீங்கள் கூடுதலாக மாற்றங்கள் ஏதேனும் ஏற்படுத்த விரும்பினால், ஏற்படுத்திக் கொள்ளலாம்.

மாறுதலாகப் பக்க எண்கள்: வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்களில் பக்க எண்களை எளிதாக இடுகிறோம். மெனு பாரில் சென்று இன்ஸெர்ட் கிளிக் செய்து Page Numbers தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் மெனுவில் நம் விருப்பப்பட்ட இடத்தில் பக்க எண்கள் தோன்றும்படி செய்துவிடலாம். இந்த பக்க எண்கள் இலக்கங்களாகத் தான் இருக்கும். இவற்றை எண்களுக்கான சொற்களாக வைத்துக் கொள்ளச் சிலருக்கு ஆவலாக இருக்கும். அந்த ஆசையைப் பூர்த்தி செய்திட கீழ்க்கண்டபடி செயல்படவும்.
1. வழக்கம்போல பக்க எண்களை இணைக்கவும்.
2. அதன் பின் பக்க எண்ணுக்குரிய பீல்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு பக்க எண் அருகே கர்சரைக் கொண்டு சென்று இருமுறை கிளிக் செய்திடவும். பக்க எண் பேஜ் ஹெடர் அல்லது புட்டரில் தான் இருக்கும். இப்போது அந்த இடம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டு புள்ளிகள் கொண்ட கோடுகளால் கட்டம் கட்டப்பட்டு காட்டப்படும். இதில் எண் இருக்கும்.
3. இனி இந்த எண்ணுக்கான பீல்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இந்த எண் அருகே கர்சரைக் கொண்டு சென்று ஷிப்ட்+எப்9 அழுத்தவும். எண்ணுக்கான பீல்டு கிடைக்கும். பீல்டு தேர்ந்தெடுக்கப்பட்டு கிரே கலரில் காட்டப்படும். பீல்டில் PAGE என்று தெரியும். இது தான் அதனுடைய குறியீடு.
4. இனி இந்த குறியீட்டிற்குப் பதிலாக \* CardText என டைப் செய்திடவும்.
5. பின் மீண்டும் எப்9 கீ அழுத்தினால் எண் இலக்கமாக இருப்பது மாற்றம் பெற்று எழுத்தில் கிடைக்கும். எடுத்துக் காட்டாக முதல் பக்கத்தில் 1 - என்பதற்குப் பதிலாக One என இருக்கும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X