பெர்சனல் பிரேக்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 மே
2015
00:00

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் குறித்த கட்டுரை மிக அருமையாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. அவரின் வாழ்வில் அவர் மேற்கொண்டிருக்கும் எளிமை, நம் ஜி.டி. நாயுடுவை நினைவு படுத்துகின்றன. நம் இலக்குகளில் ஆர்வம் கொண்டு, மற்றவற்றை மறந்து செயலாற்றினால் தான், உலகளாவிய வெற்றியை அடைய முடியும். இதனை மார்க் அவர்களின் வாழ்வு உணர்த்துகிறது. பிறந்த நாள் என்றில்லாமல், இது போன்ற விஞ்ஞானிகளின் வாழ்க்கைக் குறிப்பைப் போடலாமே!
தெ. சிவமூர்த்தி, ஆசிரியர், கல்லுப்பட்டி.

மிகப் பெரிய கோடீஸ்வரராக இருந்தும், தன் திருமணத்தை எளிமையாக நூறு நண்பர்களுக்குள்ளாக வரவேற்று, தன் வீட்டின் பின்புறத் தோட்டத்தில் நடத்திய மார்க் அவர்களின் வாழ்க்கையை, திருமணம் என்ற பெயரில், போலி ஆடம்பரங்களில் வீண் செலவு செய்து, பணத்தை வீணாக்கும் நம் ஊர் ஆட்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கட்டுரைக்கு பாராட்டுதல்களும் நன்றியும்.
என். கேசவன், கோயமுத்தூர்.

மார்க் ஸக்கர்பெர்க் வாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் காண வேண்டிய பரிமாணங்களை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள். இது போன்ற சமுதாயச் சிற்பிகளின் வாழ்க்கை வரலாறு பாடமாக அமைய வேண்டியவை ஆகும்.
கா. சந்திரா மணி, திருச்சி.

நம் குழந்தைகளின் போட்டோக்களை அமைத்திட, பேஸ்புக்கில் தனியாக உள்ள ஆல்பம் குறித்த கட்டுரை மிக அழகாக எழுதப்பட்டுள்ளது. எழுதியவருக்கு வாழ்த்துகள். நன்றி.
டி. கார்த்திகா, சென்னை

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வகைகள் குறித்த தகவல்களுக்கு நன்றி. நாம் கொண்டிருக்கும் விண்டோஸ் சிஸடத்தின் ஒவ்வொரு வகைக்கும், என்ன இலவசமாகத் தரப்படும் என்பதனை விளக்கும் கட்டுரை ஒன்று தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தா. உதயமூர்த்தி, மேட்டுப்பாளையம்.

“ஆர்வத்தினால் அதிகரிக்கும் இணையப் பயன்பாடு” என்ற கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள, சாதாரண மக்களின் இணைய ஈடுபாடு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இது போன்ற சாதாரண மக்களின் உள்ளக் கிடக்கையினை அரசு கவனத்தில் கொண்டு, தன் கொள்கைகளை விளக்க வேண்டும்.
கா. சூரியகுமார், திண்டுக்கல்.

இணைய தளம் வழியே பொருட்களை வாங்குவது எளிதான ஒன்றாகும். இதனை நம் மக்கள் உணர்ந்து கொண்டால், நிச்சயம் மக்கள் வாழ்க்கை முறையில் சிறந்த மாற்றம் ஏற்படும்.
பா. தண்டபாணி, மேலூர்.

எப்போதும் தனக்குப் பிரியமானவர்களுடன் தொடர்பில் இருப்பது என்பது நமக்குக் கிடைத்த பெரிய வரப் பிரசாதமாகும். இதனை இன்றைய இணையமும் அதில் இயங்கும் செயலிகளும் உறுதிப் படுத்தி வருகின்றன. மக்களும் இந்த மாற்றத்தினை ஏற்று வருகின்றனர். இது அவர்களின் வாழ்க்கையில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தும் என உறுதியாக நம்பலாம். “ஆர்வத்தினால் அதிகரிக்கும் இணையப் பயன்பாடு” கட்டுரை இந்த மையக் கருத்தினை மிகச் சரியாக ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துகள்.
டாக்டர் என். தெய்வேந்திரன், தஞ்சாவூர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X