வாட்ஸ் அப் அழைப்பு முற்றிலும் இலவசம் இல்லை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2015
00:00

அண்மையில் வாட்ஸ் அப் செயலி மூலம் அழைப்புகளை ஏற்படுத்திப் பேசுவது, இதன் பயனாளர்கள் இடையே அதிகரித்து வருகிறது. “இது முற்றிலும் இலவசம். மொபைல் போன் அழைப்புகள் போல் இல்லை” என மக்கள் கருதுகின்றனர். சற்று தீவிரமாகப் பார்த்தால், இந்த வகை அழைப்பு முற்றிலும் இலவசம் இல்லை என்பது புரியும். இதனைத் தெரிந்து கொண்டால், நிச்சயம் வாட்ஸ் அப் வழி அழைப்புகளை மேற்கொள்ளும் முன் சற்று யோசிப்பீர்கள். இதோ இங்கு விவரங்களைப் பார்க்கலாம்.
வாட்ஸ் அப் அழைப்பு என்பது, நம் மொபைல் போன் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும் என்பது கட்டாய அடிப்படை. இணைய இணைப்பிற்கு நம் திட்டத்திற்கு ஏற்ப பணம் செலுத்துகிறோம். வை பி இணைப்பு இருந்தால், இதன் சுமை குறையும். இல்லையேல், நம் இணைய இணைப்பின் திறன், பணம் குறையும்.
வாட்ஸ் அப் அழைப்பின் போது, 60 விநாடிகளில் ஏறத்தாழ 1.3 எம்.பி. டேட்டாவினைப் பயன்படுத்துகிறது. இது உங்கள் இணைப்பின் வேகத்தைப் பொறுத்து, சற்று குறையலாம் அல்லது அதிகரிக்கலாம்.
இந்தியாவில், ஒரு சராசரி 3ஜி டேட்டா திட்டம் மாதத்திற்குக் குறைந்தது ரூ.200 முதல் ரூ.350 வரை செலவாகிறது. இது குறைந்த அளவு தான். இதன் அடிப்படையில் பார்த்தால், நிமிடம் ஒன்றுக்குக் குறைந்தது 20 பைசா செலவாகும். வழக்கமான மொபைல் போன் பயன்பாட்டிற்கு நாம் 30 முதல் 80 பைசா வரை செலவழிக்கிறோம்.
500 எம்.பி. டேட்டா திட்டம் கொண்டிருந்தால், வாட்ஸ் அப் அழைப்பு 6 மணி நேரம் பேசும் அளவைக் கொடுக்கும்.
3ஜி அல்லது 4ஜி வகையில், நிமிடத்திற்கு 1.3 எம்.பி. என எடுத்துக் கொண்டால், நாள் ஒன்றுக்கு 11 நிமிடம் பேசும் காலம் கிடைக்கும்.
இது அழைப்பவருக்கானது மட்டும் என எண்ணிவிடாதீர்கள். அழைப்பினைப் பெறுபவரும் இதே அளவிற்கு டேட்டா செலவு அமையும். ஆனால், வழக்கமான மொபைல் அழைப்பில், அழைப்பினைப் பெறுபவருக்கு எந்த செலவும் இல்லை. எனவே, அழைப்பை ஏற்படுத்துபவர் மற்றும் அழைப்பினைப் பெறுபவருக்கான இரு வழி செலவினையும் பார்த்தால், வழக்கமான மொபைல் அழைப்பே குறைவானது என்ற முடிவை நாம் எடுக்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
navin - Chennai,இந்தியா
05-ஜூன்-201500:08:06 IST Report Abuse
navin அது மட்டும் அல்லை . மொபைல் வழியாக பேசும்போது உடனுக்குடன் கேட்கிறது . இன்டர்நெட் வழியாக பேசினால் 2 வினாடி கழித்து நாம் பேசுவது எதிர் தரப்பிற்கும் அவர்கள் பேசுவது நமக்கும் கேட்கிறது . அதிலும் 3G இணைப்போ அல்லது வைபை இணைப்போ இருந்தால் ஒழிய இதை பயன்படுத்தவே முடியாது . இந்தியாவில் 2G சிக்னல்களே இன்னும் நிறைய இடத்தில் சுத்தமாக கிடைக்கவில்லை . மொபைல் வழியாக பேசுவது போல் துல்லியமான Voice Clarity ஐ நிச்சயமாக internet Calling தரமுடியாது. Whatsapp போன்ற செயலிகள் வரவால் SMS பயன்பாடு முற்றிலும் ஒழிந்தது போல் Mobile Calling ஐ ஒழிக்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X