பேஸ்புக் இன்டர்நெட் வலையில் 8 லட்சம் பேர்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2015
00:00

இணைய இணைப்பினை இதுவரை பெறாத அனைவரும், அதனைப் பெறும் வகையில், பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துடன் இணைந்து, இண்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. என்னும் திட்டத்தினை இந்தியாவில், சென்ற பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த திட்டத்தில், இந்தியாவில் ஏழு மொபைல் சேவை மண்டலங்களிலிருந்து (சென்னை, தமிழ்நாடு, மும்பை, மஹாராஷ்ட்ரா, குஜராத், ஆந்திர மாநிலம் மற்றும் கேரளா), 8 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மொபைல் சேவை நிறுவனம் வழங்கும் இணைப்பினைப் பெற்றவர்களுக்கு, 30 இணைய தளங்களுக்கான இணைப்பு, இந்த திட்டத்தில் இணைபவர்களுக்கு, இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி, மேலும் எட்டு நாடுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பன்னாட்டளவில், இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. திட்டத்தில், 80 கோடி பேர் இணைந்து பயன் பெற்று வருகின்றனர். இவ்வாறு இலவச இணைய தளங்களை பார்த்துப் பயன் பெறும் மக்கள், தொடர்ந்து கட்டணம் செலுத்தி இவற்றைப் பார்க்கத் தொடங்குவார்கள் என பேஸ்புக் நிறுவன அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதே நேரத்தில், இந்த திட்டம், அனைவருக்கும் சமமான இணைய சேவை என்னும் (நெட் நியூட்ராலிட்டி) என்ற கொள்கைக்கு எதிரானது என்று பலத்த எதிர்ப்பு இந்தியாவில் எழுந்துள்ளது. ஒரு சில நிறுவனங்களின் இணைய தளங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தருவது, சலுகை அடிப்படையில் அணுகுதலை வழங்குவது சரியல்ல என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுவும், குறிப்பிட்ட மொபைல் சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருப்பவர்களுக்கு மட்டும், அதாவது கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டும், இணைய இணைப்பினை இலவசமாக வழங்குவது சரியல்ல என்ற எதிர்ப்பு வலுத்து வருகிறது.
அதே நேரத்தில், பன்னாட்டளவில், சாம்சங் மற்றும் குவால்காம் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, 500 கோடி மக்களை இணைத்திட இந்த திட்டம் முயற்சிக்கும் என இதற்கான அலுவலர் தெரிவித்துள்ளார்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X