வர்த்தக நிறுவனங்களுக்கு கூகுள் செயலி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2015
00:00

கூகுள் நிறுவனம், இந்தியாவில் இயங்கும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில், செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்த நிறுவனங்கள் குறித்த தகவல்கள் டிஜிட்டல் வடிவம் பெறும். அவை இணையத்தில் இடம் பெறும். இதனால், கூகுள் தளத்தில் தேடுபவர்களுக்கு, இந்த நிறுவனங்கள் குறித்த குறிப்புகள் காட்டப்படும். இந்த அப்ளிகேஷனுக்கு 'Google My Business' என்று பெயர் தரப்பட்டுள்ளது. வரும் 2017 ஆம் ஆண்டிற்குள், இரண்டு கோடி நிறுவனங்கள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்துவார்கள் என்று கூகுள் இலக்கு வைத்துள்ளது.
இந்த அப்ளிகேஷன் மொபைல் போன் இயக்க அடிப்படையில் இயங்கும். இதன் மூலம், ஒரு நிறுவனம் பற்றிய தகவல்களை உருவாக்கி, பராமரிக்க முடியும். தற்போதைக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இதனைப் பயன்படுத்தலாம்.
ஏற்கனவே 30 கோடி பேர் இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 60 லட்சம் பேர் புதியவர்களாக, இணையப் பயன்பாட்டினை மேற்கொள்பவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கும், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கிடையே, மிகப் பெரிய அளவில் தகவல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 5.1 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் இணையத்தில் தங்களுக்கென ஓர் இடம் கொண்டுள்ளவர்கள், 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன.
கூகுள் தன் புதிய 'Google My Business' அப்ளிகேஷன் திட்டத்தின் மூலம், இந்த இடைவெளியைக் குறைக்க முயற்சிக்கிறது. வரும் மூன்று ஆண்டுகளில், இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 50 கோடியாக உயர இருக்கிறது. இவர்கள், தங்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் இணையத்திலிருந்து தங்கள் மொழியில் பெறவே விரும்புவார்கள். அவர்களுக்கு தங்களைப் பற்றிய தகவல்களை இணையம் வழி தர முடியாமல், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் தடுமாறுகின்றன. இவர்களுக்கு இந்த அப்ளிகேஷன் மிகவும் உதவியாக இருக்கும் என கூகுள் நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியப் பிரிவின் துணைத் தலைவர் ராஜன் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் மிக ஆர்வத்துடன் நிறுவனங்களால் வரவேற்கப்பட்டுள்ளது. தொடங்கப்பட்டுள்ள ஐந்து மாதங்களில், பத்து லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள், இதன் மூலம் தங்களுக்கென ஓர் இணைய அடையாளத்தைப் பெற்று, அதன் மூலம் தங்கள் வர்த்தகத்தினைப் பெருக்கி வருவதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
வரும் மூன்று ஆண்டுகளுக்குள்ளாக, இத்தகைய நிறுவனங்களின் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்தவும் கூகுள் திட்டமிட்டு வருகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X