பெர்சனல் பிரேக்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2015
00:00

இணைய வழி அழைப்புகளும், மொபைல் வழி அழைப்புகளும் ஒன்றல்ல என்பதை அரசு புரிந்து கொண்டு, மொபைல் சேவை நிறுவனங்கள் வருமானப் பங்கு கேட்கும் வேண்டுகோளை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். நெட் நியூட்ராலிட்டி அமல்படுத்த, உங்கள் கட்டுரை நல்ல அடிப்படையைத் தருகிறது. இதனை மொழி பெயர்த்து மத்திய அரசுக்கு அனுப்புங்கள்.
டி. கருணாமூர்த்தி, சேலம்.

இந்தியாவில் ஐபோன் தயாரிக்கப்படும் என்ற செய்தி வரவேற்கத்தக்கதாகும். நல்ல தொழில் நுட்பத்தில் இயங்கும் ஐபோன்கள், விலை அதிகம் என்பதால், மக்களிடையே அதிக வரவேற்பினைப் பெறவில்லை. இந்தியாவில் ஐபோன்கள் தயாரிக்கப்பட்டால், ஆப்பிள் நிறுவனம் தன் போன்களின் விலையை இங்கு குறைக்க வேண்டும் என்ற வேண்டுகோளைத் தரலாம். அதுவும் செவி சாய்க்கலாம்.
பேரா. நா. மகராஜன், சென்னை.

”ஸீரோ ரேட்டிங் ” குறித்த தங்கள் பதில் மிக விரிவாகவும் எளிய முறையில் விளக்கத்தைக் கொண்டதாகவும் உள்ளது. இதனைச் சொல்லி மக்களை இனி நிறுவனங்கள் ஏமாற்ற முடியாது. இதனால் தான், கூகுள் நிறுவனம் இது போன்ற திட்டம் கொண்டு வர வேண்டும் என நினைத்ததை ஒத்தி போட்டுள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தினமலர் நாளிதழுக்கு இணை எதுவுமில்லை.
ஏ. பிருந்தா தேவி, சென்னை.

கூகுள் நிறுவனத்தின் புதிய திட்டங்கள், பயனாளர்களுக்கு அளிக்க இருக்கும் புதிய வசதிகள், அதிக எதிர்பார்ப்பினை மேற்கொள்ள வைக்கின்றன. இது போல, அனைத்து அப்ளிகேஷன்களுக்கும், இது தெரிவிக்கப்பட வேன்டும்.
ஆர். விஜய ராணி, திருச்சி.

கூகுள் நவ், ஆண்ட்ராய்ட் அணிகலன்கள் ஆகியன மற்றும் பல கூகுள் தகவல்கள் குறித்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இவற்றைப் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு இன்னும் விரிவாகத் தகவல் தந்தால் மகிழ்ச்சி அடைவோம்.
எஸ். ஆர். திரவியம், மதுரை.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் என்னதான் கட்டண நோக்கில் பல திட்டங்களை அறிவித்தாலும், நம்ம மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் உங்களைப் போன்ற பத்திரிக்கைகளே தகவல்களைக் கொண்டு செல்கின்றன. விரிவான கட்டுரைக்கு மிகவும் நன்றி.
ஆர். வினோதா மூர்த்தி, பல்லாவரம் சென்னை.

ஒரு வழியாக விண்டோஸ் 10 வர இருக்கும் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இருப்பினும், வந்த பின்னர், மற்றவர்கள் சொல்வதனைக் கேட்டு முடிவெடுப்பதுதான் சிலருடைய வழக்கமாகும். நல்ல நேரத்தில், இந்த சிஸ்டத்தின் பலன்களை எழுதிய உங்களுக்கு நன்றி.
டி. வடிவேல் முருகன்,பெங்களூரு.

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்னும் பசு, செல்வத்தை வாரிக் கொடுக்கும் விதத்தினை சரியான படத்துடன் விளக்கி உள்ளீர்கள்.
நல்ல அருமையான கட்டுரை. நன்றி.
எப். சிரஞ்சீவிநாதன், சென்னை.

ஆக்டா கோர் மற்றும் குவாட் கோர் குறித்த கட்டுரை ஒரு தகவல் களஞ்சியம். இந்த வகையில் இதனை எழுதியவரை பாராட்ட வேண்டும். வயது வந்தவர்களுக்கு நாம் ஏமாற்றப் பட்டு வருகிறோமோ என்ற பயம் உருவாகிறது. நல்ல தகவல்களுக்கு நன்றி.
எப். எம். தமிழ் ராஜன், செங்கை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X