ஸியோமி எம்.ஐ. 4 விலை குறைப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2015
00:00

சீன நிறுவனமான ஸியோமி டெக்னாலஜி, இந்தியாவில் இயங்கும் மொபைல் போன் சந்தையில் பலமாகத் தன்னை ஊன்றிக் கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில், தன் புகழ்பெற்ற ஸ்மார்ட் போன் ஸியோமி எம்.ஐ. 4, 64 ஜி.பி. மாடல் போனின் விலையைக் குறைத்துள்ளது. முன்பு இதன் விலை ரூ. 23,999 ஆக இருந்தது. தற்போது ரூ. 19,999 எனக் குறைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இணையாக 16 ஜி.பி. மாடல் போன் ரூ.17,999 என விலையிடப்பட்டுள்ளது.
16 மற்றும் 64 ஜி.பி. மாடல்களில், 5 அங்குல எல்.சி.டி. டச் ஸ்கிரீன் 1920 x 1080 ரெசல்யூசனில், 441 பிக்ஸெல் திறனுடன் தரப்பட்டுள்ளது. இவற்றின் பரிமாணம் 139.2 x 68.5 x 8.9 மிமீ. எடை 149 கிராம். குவால்காம் ஸ்நாப்ட்ரேகன் 801 ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இவற்றின் ராம் மெமரி 3 ஜி.பி. என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். மெமரியை அதிகப்படுத்த கார்ட் ஸ்லாட் எதுவும் தரப்படவில்லை. இதன் பேட்டரி 3080 mAh திறன் கொண்டது.
13 மெகா பிக்ஸெல் கேமரா பின்புறமாகவும், 8 மெகா பிக்ஸெல் கேமரா முன்புறமாகவும் தரப்பட்டுள்ளன. இங்கு அறிமுகப்படுத்தப்படும் இந்த மாடல்கள் எல்.டி.இ. அலைவரிசைப் பயன்பாட்டினை சப்போர்ட் செய்வதில்லை. ஆண்ட்ராய்ட் லாலி பாப் சிஸ்டமும் தரப்படவில்லை. வெள்ளை வண்ணத்தில் மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், இந்தியச் சந்தையில் பயனாளர்களிடையே அதிகம் இடம் பெற்றுள்ள போன்களாக இவை இருக்கின்றன. தற்போது விலை குறைக்கப்படுவதால், இன்னும் அதிகமான அளவில் சந்தையில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ளிப் கார்ட் வர்த்தக தளத்தில், ஸியோமி எம்.ஐ.4 விற்பனை செய்யப்படுகிறது. பழைய ஸ்மார்ட் போன்களைக் கொடுத்து வாங்கினால், மேலும் ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆப்பிள் தற்போது அமெரிக்க சந்தையுடன், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளிலும் தன் ஐபோன்களைப் பெரிய அளவில் விற்பனை செய்திடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், ஸியோமி மற்றும் ஒன் ப்ளஸ் போன்ற சீன நிறுவனங்களுடன் இது போட்டியிட வேண்டியதிருக்கும். ஒன் ப்ளஸ் ஒன் ஸ்மார்ட் போன் அண்மையில், மற்ற நாடுகளில் நிரந்தர விலை குறைப்பினை மேற்கொண்டது. இந்தியாவிலும் இது ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றை எதிர்த்த போட்டியில், ஆப்பிள் தன் நிறுவன சாதனங்களுக்கான புகழின் அடிப்படையிலும், ஐபோன்களில் தரப்படும் உயர் தொழில் நுட்ப அடிப்படையில் மட்டுமே இடம் பெற முடியும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X