மொபைல் இணைய இணைப்பை வேகமாக்க
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2015
00:00

மொபைல் போனில் இணைய இணைப்பினை மேற்கொள்கையில், பல வேளைகளில், தேவைப்படும் இணைய தளம் இறங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இந்தியாவில், 20 கோடி மக்கள், இணைய இணைப்பினை, மொபைல் போன் வழியாக மேற்கொள்கின்றனர். ஒருவருக்கு ஒரு நொடி தாமதம் எனக் கணக்கிட்டாலும், அது பல ஆண்டுகள் வீணாவதற்குச் சமமாக இருக்கும். இதே நிலையே, வளர்ந்து வரும் நாடுகள் அனைத்திலும் இருக்கும் என கூகுள் கணக்கிட்டுள்ளது. இந்தியாவுடன், பிரேசில், இந்தோனேஷியா ஆகிய நாடுகளையும் கூகுள் கணக்கில் கொண்டுள்ளது. எனவே, இணைய இணைப்பின் வேகத்தை அதிகப்படுத்தக் கூடிய செயலி ஒன்றை விரைவில், இன்னும் சில நாட்களில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதனை கூகுள் நிறுவனத்தின் புதிய திட்டங்களை வடிவமைக்கும் பிரிவின் நிர்வாகி, ஹிராட்டோ டொகுசே தன் வலைமனைப் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த செயலியைத் தங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் பதிவு செய்துவிட்ட பின்னர், இணைய இணைப்பு செயல்பாட்டில் புதிய வேகத்தினைப் பயனாளர்கள் உணர்வார்கள் என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை ஏற்கனவே சோதனை செய்து பார்த்ததில், 2ஜி இணைப்பில் கூட, இந்த செயலி, இணைய வேகத்தை 4 மடங்கு அதிகம் தந்ததாகத் தெரிகிறது.
வேகத்தை அதிகப்படுத்துவது மட்டுமின்றி, இணைய இணைப்பு கிடைக்காத இடங்களில் வாழும் மக்களுக்கு, இணைப்பினைத் தரும் முயற்சிகளையும் கூகுள் எடுத்து வருகிறது. இதன் Project Loon என்னும் திட்டத்தின் கீழ், மிக அதிக உயரத்தில், இணைய இணைப்பு தரும் சர்வர்கள் கொண்டுள்ள பலூன்கள் பறக்கவிடப்பட்டு, அதன் வழியாக, இணைப்பு தரப்படும். இந்த பலூன்கள் ஒரு நெட்வொர்க்காகச் செயல்படும். பூமிக்கு மேலே 20 கிலோ மீட்டர் உயரத்தில், stratosphere என அழைக்கப்படும் வளி மண்டலத்தில் இவை அமைக்கப்படும். அடுத்த ஆண்டு வாக்கில் இவை இந்தியாவில் அமைக்கப்படலாம் என கசிந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணைய இணைப்பினை வேகமாகத் தரும் முயற்சியில் ஏற்கனவே, பேஸ்புக் நிறுவனம், பேஸ்புக் லைட் என்ற செயலியைத் தந்துள்ளது. அத்துடன் கூகுள் நிறுவனமும் தற்போது புதியதாக இந்த திட்டத்தினை அறிமுகப்படுத்துகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X