ஆப்பிள் மியூசிக் அறிமுகம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2015
00:00

ஆப்பிள் நிறுவனத்தின் கருத்தரங்கில், புதியதாக “ஆப்பிள் மியூசிக்” (Apple Music) என்ற செயல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐ.ஓ.எஸ். 9 கட்டமைப்பு குறித்து வெகுநேரம் உரையாற்றிய பின்னர், இறுதியில், டிம் குக், “ அடுத்து ஓர் ஆர்வமூட்டும் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இது செயலிகளை உருவாக்குபவர்களுக்கல்ல; நம் பயனாளர்களுக்கு” என்ற அறிமுகத்துடன், 'ஆப்பிள் மியூசிக்' திட்டம் குறித்து அறிவித்தார். சென்ற ஆண்டு, ஆப்பிள் நிறுவனம் விலைக்கு வாங்கிய (300 கோடி டாலர் செலவில்) Beats Music, திட்டமே தற்போது பல மேம்பாடுகளுடன் அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது இசை வழங்கும் துறை மிகக் குழப்பமான நிலையில் உள்ளது என்றும், அதனைச் சீர்படுத்தி அழகான ஓர் அமைப்பை வழங்க இருப்பதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.
மாதந்தோறும் பத்து டாலர் கட்டணம் செலுத்தி 'ஆப்பிள் மியூசிக்' சேவையைப் பெறலாம். இந்த ஒரு செயலியைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர் ஒருவர் தன் இசை ஆல்பங்கள், மற்றும் சார்ந்த கோப்புகள் அனைத்தையும் பதிந்து வைக்கலாம். இசை வல்லுநர் ஒருவரும் தன் ஆக்கங்களை இதில் பதிந்து வைக்கலாம். தன் பதிவுகள் மட்டுமின்றி, இசைக் கடலென உள்ள அனைத்தையும் அணுகிப் பெறலாம். ஆறு பேர் வரை அதிகபட்சமாக உள்ள குடும்பத்திற்கு 15 டாலர் கட்டணம்.
ஐ ட்யூன் தளத்தில் வாங்கக் கூடியவற்றையும் இதில் சேமிப்பாக வைத்துப் பயன்படுத்தலாம். சிரி செயலியை இதில் பயன்படுத்தி, பாடகர் வாரியாக, இசை வகைப்படி, வெளியான ஆண்டின் அடிப்படையில் எனப் பல வகைகளில், இந்த திட்டத்தில் பாடல்களைத் தேடிப் பெறலாம். ஆப்பிள் மியூசிக் திட்டம் வரும் ஜூன் 30 அன்று தொடங்கப்பட உள்ளது. ஐ.ஓ.எஸ்., ஓ.எஸ். எக்ஸ் மற்றும் விண்டோஸ் இயக்கங்களில் இது செயல்படும் வகையில் தரப்படும். நூறு நாடுகளில் முதலில் அறிமுகம் ஆக இருக்கும் இந்த திட்டத்தினை முதல் மூன்று மாதங்களுக்குச் சோதனை முறையில் பயன்படுத்திப் பார்த்துவிட்டு, பின்னர் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தலாம். இதற்கு, பல கோடிக்கணக்கான ஆப்பிள் சாதனங்களில் இந்த செயலி பதியப்பட்டு, மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
ஆப்பிள் மியூசிக் திட்டத்தில், பீட்ஸ் 1 (Beats 1) என்ற ரேடியோ நிலையமும் உள்ளது. நியூ யார்க், லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் லண்டன் நகரங்களில், 24 மணி நேரமும் இது இயக்கப்படும். இதன் ஒரு சிறப்பம்சமாக Connect என்னும் பிரிவு செயல்படும். இதில் நேயர்கள் தங்களுக்குப் பிடித்தமான இசை வல்லுநர்களுடன் உரையாடலாம். நிகழ்ச்சி நிரலில் இல்லாத பாடல்களைக் கேட்டு மகிழ்ச்சியடையலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X