பெர்சனல் பிரேக்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2015
00:00

தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நூறு கோடி சாதனங்களில் கொண்டு செல்ல, மைக்ரோசாப்ட் எடுக்கும் நடவடிக்கைக்கு நாம் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். வீடுகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் இயங்கும் அனைத்து வகையான சாதனங்களிலும், ஒரே கட்டமைப்பில் உருவான ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குவது, டிஜிட்டல் உலகை இன்னும் விரைவாக மேலே கொண்டு செல்லும்.
சா. கயல்விழி ராஜன்,சென்னை.

பல்லாண்டுகளாக விண்டோஸ் பயனாளர்களால் பெரிதும் விரும்பப்பட்ட விளையாட்டு சாலிடெர் கேம். இதனை சிஸ்டத்துடன் தரும் மைக்ரோசாப்ட் செயல்பாடு பாராட்டத்தக்கது. இருப்பினும், இதில் நேரத்தை வீணாக்காமல் இருக்க பயனாளர்கள் பழகிக் கொள்ள வேண்டும். கேண்டி கிரஷ் சாகா விளையாட்டு போல ஆகிவிடக் கூடாது.
ஆ. இளங்குமரன், பழநி.

பேஸ்புக் லைட் பயன்பாடு, இணைய இணைப்பினை முழுமையாகப் பயன்படுத்த உதவும். வேகம் குறைவான இடங்களில் இது மிகவும் உதவும். விரைவில் இந்தியாவில் இதனை எதிர்பார்க்கிறோம்.
என். கண்மணி ராஜன், திருவாரூர்.

கேள்வி பதில் பகுதியில் கொடுத்துள்ள கேஷ் கிராமிங் குறித்த தகவல் இதுவரை கேள்விப்படாததாக உள்ளது. மால்வேர்கள் செயல்படும் விதத்தினையும் கூறுவதாக அமைந்துள்ளது. தகவலுக்கு நன்றி.
இரா. தமிழரசு, புதுச்சேரி.

என்னதான் 512 ஜி.பி. கொள்ளளவு கொண்ட மைக்ரோ எஸ்.டி. கார்ட் என்றாலும், விலை மிக அதிகமாக உள்ளது. கேமரா கலைஞர்களுக்கு இது உதவலாம். இருப்பினும் இதில் முதலீடு செய்திடத் தயங்குவார்கள். விலை என்று குறையும் என எதிர்பார்த்துக் காத்திருக்கலாம்.
சா. உத்தமராஜ், திண்டுக்கல்.

தொலைந்து போன குழந்தைகளைக் கண்டறிவது இந்தியாவில் சாத்தியப்படாத செயலாகக் கருதப்படும் இந்த கால கட்டத்தில், நீங்கள்
குறிப்பிடும் தளம் ஓரளவிற்கு பயன் அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.
எம். குழந்தைசாமி, கும்பகோணம்.

விண்டோஸ் மீடியா சென்டர், டிவிடி இயக்கும் செயலி ஆகியன அனைவருக்கும் தேவையான செயல்பாட்டு சாதனங்களாகும். இவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நீக்கி அமைத்திருப்பது சரியல்ல. மைக்ரோசாப்ட் இதனை உணர்ந்து இறுதி பதிப்பில் இவற்றைத் தர முன்வருமா?
எஸ். கலா ராணி, திருப்பூர்.

இணைய தளங்கள் அதிக எண்ணிக்கையில் பதியப்பட்டு செயல்பட வேண்டும். அப்போது தான் மக்களுக்கு தகவல்கள் சென்றடைய
வாய்ப்புகள் பெருகும். அந்த வகையில், அவற்றின் எண்ணிக்கை இந்தியாவில் இரு மடங்கு அதிகரித்துள்ளது என்பது வரவேற்கத்தக்க
விஷயமாகும்.
ஆர். சீத்தாபதி, கும்பகோணம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X