பெர்சனல் பிரேக்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2015
00:00

ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டம் பயன்பாட்டுக்கு வரும்போது நிச்சயமாக அனைவராலும் விரும்பப்படும். ஏனென்றால், நீங்கள் எடுத்துக் காட்டியுள்ள அனைத்து புதிய அம்சங்களும், அவை தரும் வசதிகளும் அனைவரும் விரும்ப்படுபவையாகும். மேலும், போன் பயன்பாட்டில் புதிய வேகத்தைத் தருவதாகவே அனைத்தும் வடிவமைக்கப்படுவது தெரிகிறது. குறிப்பாக, இணைய இணைப்பின் வேகம் குறைவாக இருக்கும்போது, படங்கள் ஆப்ஜெக்ட்கள் இல்லாமல் தரவிறக்கம் செய்வது சிறப்பான வழிமுறையாகும். இந்த சிஸ்டம் பல ஆண்டுகள் பாராட்டப்படும்.
டாக்டர் என். ஸ்ரீனிவாசன், கோவை.

பேஸ்புக் அக்கவுண்ட் நீக்கம் குறித்த தங்கள் பதில் மிகத் தெளிவாக இருந்தது. அப்படியே பின்பற்றி என் பழைய அக்கவுண்ட் ஒன்றை நீக்கினேன். தங்களுக்கு நன்றி.
எஸ். புகழேந்தி, திருவாரூர்.

ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்புகளைக் கோர்வையாக எடுத்து, குறிப்புகளோடு தந்த கட்டுரை அதிகம் தெரிந்து கொள்ள உதவியது. ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் எதனையும் நான் பயன்படுத்தவில்லை என்றாலும், அது பற்றி அறிந்து கொள்ள மிகவும் உதவியது.
எஸ்.கே. அண்ணாமலை, கோவை.

தானாக டாகுமெண்ட் சேவ் செய்யப்படுவதற்கான செட்டிங்ஸ் டிப்ஸ் அருமை. உடனே என் கம்ப்யூட்டரில் அமைத்துக் கொண்டேன். பயனுள்ள குறிப்பு.
ஆர். மேரி பொன்னுதங்கம், ராஜபாளையம்.

ஐ.ஓ.எஸ்.9 மற்றும் ஐபேட் சாதனத்திற்கான அப்டேட் எப்போது கிடைக்கும். நான் பல பணிகளுக்கு ஐபேட் மினி பயன்படுத்தி வருகிறேன். ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்கள் கட்டுரையிலிருந்து, ஐபேட் மினி சாதனத்திலும் சிஸ்டம் அப்டேட் தானாகக் கிடைக்கும் என நினைக்கிறேன்.
எஸ். கார்த்திக் ராஜன், சிவகாசி.

ஆண்ட்ராய்ட் சாதனங்கள் பயன்படுத்துவோரை, தன் ஐ.ஓ.எஸ்.9 மூலம் ஆப்பிள் இழுக்க நினைத்தாலும், அதன் சாதனங்கள் விலை மக்களின் கண்ணைக் கட்டுகிறது. எனவே, வளர்ந்து வரும் நாடுகளிலாவது, ஆப்பிள் தன் சாதனங்களின் விலையை மக்களுக்குக் கட்டுப்படியாகும் அளவில் அமைக்க வேண்டும்.
என். சுதந்திரா, காஞ்சிபுரம்.

இனி பவர் பேங்க் அனைவருக்கும் தேவைப்படும் ஒன்றாக மாறிவிடும். அனைவரும் வாங்கிப் பயன்படுத்த முயற்சிப்பார்கள். மின்சாரம் அடிக்கடி காணாமல் போகும் நிலை உள்ள நம் ஊருக்கு அது அவசியம் தேவை. எனவே, அனைத்து நிறுவனங்களின் பவர் பேங்க் குறித்து தகவல் தரவும்.
என். ரோஸ்மேரி, நாகூர்.

பேஸ்புக் டேகிங் பிரச்னைக்கு குரல் கொடுத்ததன் மூலம், பல்லாயிரக் கணக்கான வாசகர்களின் மனதில் இருப்பவற்றிற்கு வடிவம் கொடுத்துள்ளீர்கள். கட்டுரை எழுதியவருக்கு ஆயிரம் நன்றி. என்னை எதற்கெடுத்தாலும் டேக் செய்யும் என் 'சிறந்த' நண்பர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்றி உள்ளீர்கள். நன்றி.
இ. சுப்புராஜ் சேனாதிபதி, இராமேஸ்வரம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X