இந்த வார டவுண்லோட் - பயர்பாக்ஸ் டேப் நகர்த்த ஷார்ட்கட் கீகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 நவ
2010
00:00

பயர்பாக்ஸ் பிரவுசரில் அதிகமான தளங்களைத் திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கையில், சில குறிப்பிட்ட டேப்கள்  அடுத்தடுத்து இருந்தால், நமக்கு வசதியாக இருக்கும் என எண்ணுவோம்.  எடுத்துக் காட்டாக, கூகுள் ரீடர் தளத்தில் ஒரு கட்டுரையைத் தேர்ந்தெடுத்துப் படித்துக் கொண்டிருக்கலாம். இதற்கான தளம் இடது மூலையில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதே நேரத்தில் நீங்கள் உங்களின் வலைமனை (பிளாக்) ஒன்றைத் திறந்து எழுதிக் கொண்டிருக்கலாம். இதற்கான டேப் வலது மூலையில் இருக்கலாம். ஆனால் நீங்கள் இந்த இரண்டு தளங்களும் அடுத்தடுத்து இருந்தால், பயன்படுத்த எளிது என்று எண்ணுகிறீர்கள். கூகுள் ரீடரில் விஷயத்தைப் படித்து, அதனை உங்கள் கருத்துக்களுடன், உங்கள் வலைமனையில் உடனுக்குடன் அமைக்க விரும்பலாம். இதற்கென டேப்களை மாற்றி அமைத்திட சில வழிகளை நாம் தெரிந்து வைத்திருக்கிறோம்.
பொதுவாக, எந்த டேப்பினை நகர்த்த விரும்புகிறோமோ, அதில் கிளிக் செய்து, இழுத்து நகர்த்தி வைக்கலாம். இன்னொரு வழியும் உள்ளது. எந்த டேப்பினை மாற்ற விரும்புகிறோமோ, அதன் இடத்தினை எண் அறிந்து, கண்ட்ரோல் + அந்த எண் அழுத்த, அது தேர்ந்தெடுக்கப்படும்.  ஆனால் ஒன்பதுக்கும் மேற்பட்ட டேப்கள் திறந்திருக்கையில், இது சற்று வேலை வாங்கும் விஷயமாக இருக்கும். மானிட்டரில், ஒரு பேனா அல்லது பென்சில் முனையைக் கொண்டு ஒன்று, இரண்டு என எண்ண வேண்டும். இது ஒரு பழைய முறை ஆகும்.
இதற்கான ஒரு எளிய வழியை புதியதாக வந்துள்ள ஆட் ஆன் தொகுப்பு தருகிறது. இதன் மூலம் பயர்பாக்ஸ் பிரவுசரில் உள்ள டேப்களை எளிதாக நகர்த்தலாம். இதன் பெயர் Move Tabs .  இதனைப் பெற https://addons.mozilla.org/en-US/firefox/addon/220875/  என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.  இந்த எக்ஸ்டென்ஷன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்த பின்னர், டேப்களின் இடத்தை எளிதாக மாற்றலாம். அதற்குக் கீழ்க்கண்ட ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்தலாம்.  டேப்களை முதலில் தேர்ந்தெடுக்கவும். பின்னர் இந்த கீகளைப் பயன்படுத்தவும். பயன்படுத்துகையில் அந்த டேப் எந்த இடத்திற்குச் செல்கிறது என்று கவனத்தில் கொள்ளவும்.
Control + Shift + Home: தேர்ந்தெடுக்கப்பட்ட டேப்பினை இடது ஓரத்திற்குக் கொண்டு செல்கிறது.
Control + Shift+ End:  தேர்ந்தெடுக்கப்பட்ட டேப்பினை வலது ஓரத்திற்குக் கொண்டு செல்கிறது.
Control + Shift+ Page Up:தேர்ந்தெடுக்கப் பட்ட டேப்பினை இடது பக்கம் ஒரு இடம் நகர்த்துகிறது.
Control + Shift + Page Down:தேர்ந்தெடுக்கப் பட்ட டேப்பினை வலது பக்கம் ஒரு இடம் நகர்த்துகிறது.  இந்த ஷார்ட்கட் கீகள், டேப்களை நகர்த்த எளிய வழியைத் தருவதனை, இதனைப் பயன்படுத்து கையில் உணர்வீர்கள்.  இதில் ஒரு ட்ரிக் பார்ப்போமா! நீங்கள் 15 டேப்களைத் திறந்திருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் 3 ஆவது டேப்பில் இருக்கிறீர்கள். அதிலிருந்து 14 ஆவது டேப்பில் உள்ள தளத்திற்குச் செல்ல விரும்புகிறீர்கள். இது ஏறத்தாழ வலது மூலை அருகே  இருக்கலாம். டேப் பாரில் உள்ள அம்புக்குறி கீகளை அழுத்தி, ஒவ்வொரு தளமாகச் செல்லாமல், முதலில்  Control + Shift + End  அழுத்தவும். பின்னர், Control + Shift + Tab அழுத்தவும். இப்போது நீங்கள் விரும்பிய இடத்தில் இருப்பீர்கள்.
போனஸ் டிப்ஸ்:
சில கூடுதல் ஷார்ட்கட் கீகளை நினைவு படுத்திக் கொள்ளலாமா!
1. அனைத்து பிரவுசரிலும் செயல்படும் ஷார்ட்கட் கீகள்:
பின்னணியில் புதிய டேப்பில் தளங்களைத் திறக்க –– கண்ட்ரோல் + கிளிக் ctrl+click
2. முன்னணியில் புதிய டேப்பில் தளங்களைத் திறக்க –கண்ட்ரோல் + ஷிப்ட்+கிளிக் ctrl+shift+click
3. முன்னணியில் புதிய டேப் ஒன்றைத் திறக்க – கண்ட்ரோல் +  mi ctrl+t
4. டேப்களுக்கிடையே செல்ல: ctrl+tab/ctrl+shift+tab
5. அனைத்து டேப்களையும் மூட : ctrl+tab/ctrl+shift+tab
6.மற்ற டேப்களை மட்டும் மூட: ctrl+alt+f4 
பயர்பாக்ஸ் பிரவுசரில் மட்டும்:
1. குறிப்பிட்ட பிரவுசருக்குச் செல்ல: கண்ட்ரோல் + அந்த தளத்தின் டேப் உள்ள நிலை. கண்ட்ரோல் + அந்த எண். எடுத்துக்காட்டாக, நான்காவதாக உள்ள டேப்பிற்குச் செல்ல வேண்டும் எனில், ctrl+4.
இதில் ஒன்பது டேப்கள் இருந்தால் மட்டுமே இந்த ஷார்ட்கட் கீ செயல்படும்.    
2. அப்போதைய டேப்பினை மட்டும் மூடிட ctrl+w
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7க்கானவை:
1. அட்ரஸ் பாரிலிருந்து புதிய டேப் ஒன்றைத் திறக்க: ஆல்ட் + என்டர்
2.டூல் பார் சர்ச் பாக்ஸிலிருந்து புதிய டேப் ஒன்றைத் திறக்க: ஆல்ட் + என்டர்
3. டேப்களுக்கான தளங்களின் சிறிய படத் தோற்றம் பெற: கண்ட்ரோல் + க்யூ
4. இதிலும் கண்ட்ரோல் + டேப் எண் கொடுத்துத் திறக்கலாம். ஆனால் இதில் 8 தளங்களுக்கு மட்டுமே செயல்படும்.
மவுஸ் ஷார்ட்கட் கீகள்
லிங்க் ஒன்றில் நடுவே உள்ள மவுஸ் பட்டன் அல்லது ஸ்குரோல் வீல் கிளிக் செய்தால், பின்புலத்தில்  திறக்கப்படும். காலியாக உள்ள டேப் வரிசை காலி இடத்தில் கிளிக் செய்திட புதிய டேப் ஒன்று திறக்கப்படும்.
டேப்பில் நடுவே உள்ள பட்டனைக் கிளிக் செய்தால், டேப் மூடப்படும். 

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X