இந்தியாவில் லெனோவா ஸ்மார்ட் போன் தொழிற்சாலை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2015
00:00

ஸ்மார்ட்போன் விற்பனைச் சந்தையில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும், தங்களின் பிடிப்பை இந்திய விற்பனைச் சந்தையில் இறுக்கமாக்கிட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அனைவரும் வாங்கும் விலையில் ஸ்மார்ட்போன்களைத் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வருவதில் முனைப்புடன் செயல்படுகின்றன. குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்களைக் கொண்டு வருவது மட்டுமின்றி, இந்தியாவில் தங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளையும் அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
மத்திய அரசு Make in India திட்டத்தினை அனைத்து வகைகளிலும் செயல்படுத்த திட்டமிட்டு வருவதால், இங்கு அமைக்கப்படும் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு இறக்குமதி மற்றும் சுங்க வரிச் சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த வாய்ப்பினை அனைத்து பெரிய நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிடுகின்றன.
லெனோவா, கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர் விற்பனையில், இந்தியாவில் முன்னணியில் இயங்கும் நிறுவனமாகும். 2014 ஆம் ஆண்டில், கூகுள் நிறுவனத்திடம் இருந்து, மோட்டாரோலா நிறுவனத்தினை வாங்கிய போது, ஸ்மார்ட் போன் வர்த்தகத்திலும் அதற்கிருந்த ஆர்வத்தை அறிய முடிந்தது.
லெனோவா ஸ்மார்ட் போன்கள், தற்போது அதன் விலைக்கேற்ற வகையில் செயல்பாடுகளை நிறைவுடன் அளிப்பதாக மக்களிடம் புகழ் பெற்றுள்ளது. குறிப்பாக, ரூ.10,000 க்கும் குறைவான விலையில் 4ஜி ஸ்மார்ட் போன்களை வழங்கியது, மக்களிடையே இந்நிறுவன ஸ்மார்ட் போன்களை அதிக அளவில் கொண்டு சென்றது. ''வரும் ஆண்டுகளில், 4ஜி/எல்.டி.இ. தொழில் நுட்பமே பெரும் அளவில் விரும்பப்படும் தொழில் நுட்பமாக இருக்கப் போகிறது. எனவே, இதில் அதிக ஆர்வம் காட்ட விரும்புகிறோம்'' என அண்மையில் இதன் இந்திய விற்பனைப் பிரிவு இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.
லெனோவா கம்ப்யூட்டர் தயாரிப்பிற்கென, புதுச்சேரியில் ஏற்கனவே ஒரு தொழிற்சாலை இயங்கி வருகிறது. தற்போது இந்நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பிற்கும் தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிடுகிறது.
தற்போது ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரிப்பு 30% ஆக உள்ளது. இது இன்னும் வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில், லெனோவா இந்தியாவில், மேலும் தன் தனிப்பட்ட விற்பனை மையங்களைத் திறந்திடும் செயல்பாடுகளில் இறங்கியுள்ளது.
இந்த வகையில், புதிய தொழிற்சாலைகளைத் திறக்க மற்ற நிறுவனங்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் மூலம், தங்கள் தயாரிப்புகளின் உற்பத்தி செலவினைக் குறைக்கலாம் என்று எண்ணுகின்றன. இதில் கொரிய நிறுவனமான எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ், இந்தியாவில் ரூ.1,000 கோடி முதலீடு செய்திட முடிவெடுத்துள்ளது.
ஏற்கனவே கம்ப்யூட்டர் மலரில் வெளியான தகவலின்படி, Foxconn நிறுவனம் தன் ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலையை இந்தியாவில் அமைக்கிறது. தற்போது வந்துள்ள தகவலின்படி, இந்நிறுவனம், தன் ஸியோமி போன் தயாரிப்பினையும் இந்தியாவிலேயே மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் சிரி நகரில் இது அமையலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X