குரோம் பிரவுசருக்கான உதவிக் குறிப்புகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2015
00:00

பெரும்பாலான இணையப் பயனாளர்களின் விருப்ப பிரவுசராக குரோம் மாறி வருகிறது. இதனைப் பயன்படுத்துவதில் தரப்படும் நம்பகத்தன்மையே இதற்குக் காரணம் ஆகும். மேலும் தகுந்த பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்தி, நம் கம்ப்யூட்டருக்குச் சரியான பாதுகாப்பினைத் தருகிறது. நம் விருப்பப்படி இதன் இடைமுகத்தினை அமைக்க நமக்குத் தரும் வசதிகள், இதன் அடிப்படை இயக்க செட்டிங்ஸ் அமைக்கும் எளிய வழிமுறைகள், பலரை இந்த பிரவுசருக்கு இழுக்கின்றன. இன்னும் இந்த பிரவுசர் தரும் வசதிகளுக்கான கூடுதல் குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.
1. நாம் காணும் இணைய தளத்தினை முழுமையாக, அது தரும் தகவல்களில் மட்டுமே கவனத்தைச் செலுத்திப் பார்க்க, F11 கீயை அழுத்தினால் போதும். பார்த்துக் கொண்டிருக்கும் தளம் முழுத் திரையிலும் காட்டப்படும். மற்ற தேவையற்ற ஐகான்கள் அனைத்தும் மறைந்துவிடும். பின் மீண்டும் பழைய நிலைக்கு வர, அதே F11 கீயை அழுத்த வேண்டும்.
2. பல இணைய தளங்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்துப் பயன்படுத்துபவரா? குறிப்பிட்ட இணைய தளம் செல்ல, அதன் டேப்பினை உற்றுப் பார்த்து அழுத்த வேண்டாம். இது பல முறை தவறாகவே முடியும். ஏனென்றால், இணைய தளத்தின் முழுப் பெயரும் டேப்பில் காட்டப்பட மாட்டாது. இந்த தளங்களுக்குச் செல்ல, கீ போர்ட் வழியாக ஒரு வழி உள்ளது. முதலில், நீங்கள் விரும்பும் இணைய தளம் காட்டப்படும் டேப் எந்த இடத்தில் (1,2,3,4...) உள்ளது எனப் பார்க்கவும். பின்னர், கண்ட்ரோல் கீ அழுத்தி, அதன் இடத்திற்கான எண்ணை (Ctrl+3) அழுத்தினால், அந்த குறிப்பிட்ட டேப் உள்ள தளம் திரையில் கிடைக்கும்.
3. தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், ஸ்பேஸ் பாரினை அழுத்தினால், எந்த இணைய தளத்திலும், தளமானது ஒரு பக்கம் கீழாகச் செல்லும். இதே போல, ஷிப்ட் கீ அழுத்தி ஸ்பேஸ் பார் அழுத்தினால், அதே போல பல பக்கங்களைத் தாண்டிச் செல்லலாம்.
4. குரோம் பிரவுசரில், நாம் பல ஷார்ட் கட் கீகள் மூலம் அதன் எக்ஸ்டன்ஷன்களுக்குச் செல்ல வழிகளை அமைக்கலாம். இதற்கான வசதிகள் தரப்ப்பட்டுள்ளன. இவற்றைப் பெற, chrome://settings/எனச் செல்லவும். இந்தப் பக்கத்தில், “Keyboard shortcuts” என்ற இடத்தில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் செயல்பாடுகளுக்கு, ஷார்ட் கட் கீகளை அமைக்கலாம்.
5. எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், நம் பிரவுசர் டூல்பாரில் அதிக இடம் எடுத்துக் கொள்கின்றன. இது தேவையற்ற ஒன்றாகும். இந்த புரோகிராம்கள், பின்னணியில் இயங்கி நமக்கு உதவினால் போதும். டூல் பாரில் அவை இடம் எடுத்துக் கொள்வதனை நாம் தடுக்கலாம். எந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களின் ஐகான்கள், டூல் பாரில் இருக்க வேண்டாம் என முடிவு செய்கிறீர்களோ, அவற்றின் ஐகானில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ்விரி மெனுவில், “Hide button” என்ற பட்டனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.
6. மேலே சுட்டிக் காட்டியபடி, சிலர் இணைய தளங்களுக்கான டேப்களை மறைக்க திட்டமிடுவார்கள். இந்த தளங்கள் திறந்திருக்க வேண்டும். ஆனால், அவை டேப்களாகக் காட்டப்பட வேண்டியதில்லை என்று எண்ணினால், அவற்றை மறைக்கலாம். பிரவுசரின் முகவரி விண்டோவில், chrome://flags என டைப் செய்திடவும். அங்கு Stacked Tabs என்பதனைத் தேடி அறியவும். அதனை இயக்கும் வகையில் enable செய்திடவும். இதனால், டேப்கள் அனைத்தும் சுருங்கி, சிறியதாகக் காட்சியளிப்பதற்குப் பதிலாக, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுக் காட்சி அளிக்கும்.
7. இணைய தளம் எதனைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அதனை ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்க்கலாம். பின்னர் அவற்றைச் சுருக்கலாம். இதற்கு கண்ட்ரோல் கீ அழுத்திய நிலையில் “+” அல்லது “-” கீயினை அழுத்த வேண்டும். ஸூம் செய்யப்படும் அல்லது ஸூம் செய்த காட்சி சுருக்கப்படும். இந்த செயல்பாட்டினை மேற்கொண்டால், நாம் விருப்பப்பட்டு பார்க்கும் இணைய தளக் காட்சியினை, விரிவாக்கி அதன் டெக்ஸ்ட்டைத் தெளிவாகப் பார்க்கலாம்.
8. எப்போது கண்ட்ரோல் + ஸீரோ (Ctrl+-0) அழுத்தினாலும், நீங்கள் ஸும் செய்த ஸ்கிரீன், அல்லது சுருக்கிய திரை பழைய 100% நிலைக்குத் திரும்பும்.
9. இணையத்தில் எந்த தளத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், குரோம் பிரவுசரின் முகப்புப் பக்கத்திற்குச் (Home) செல்லலாம். Alt-+Home கீகளை அழுத்திப் பெறலாம். இதற்குப் பதிலாக ஹோம் பட்டன் இருந்தால், அதனை மட்டும் அழுத்திச் செல்லலாம் அல்லவா? இதனைப் பெற, chrome://settings தேர்ந்தெடுத்துச் செல்லவும். அங்கு, “Show Home button” என்று உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, இதற்கான பட்டன் ஒன்று ஸ்கீரினில் காட்டப்படும்.
10. செயலிகளுக்கு நாம் சுருக்கு வழி ஒன்றை அமைத்து டெஸ்க்டாப்பில் வைத்து, அதன் மீது கிளிக் செய்வதன் மூலம் இயக்குகிறோம். அதே போல, எந்த இணையதளத்திற்குமான ஷார்ட் கட் ஒன்றை, விண்டோஸ் டெஸ்க்டாப்பில் அமைக்கலாம். முகவரி கட்டத்தில் காட்டப்படும் முகவரியினை, மவுஸ் மூலம் அப்படியே இழுத்துச் சென்று, திரையில் அமைத்தால், அது, அந்த இணைய தளத்திற்கான ஷார்ட் கட் கீயாகச் செயல்படும். அப்ளிகேஷன்களுக்கு நாம் ஏற்படுத்தும் ஷார்ட் கட் கீ ஒன்றையும், இணையப் பக்கங்களுக்கு ஏற்படுத்தலாம். பிரவுசரின் மெயின் மெனுவிற்குச் செல்லவும். அங்கு Tools தேர்ந்தெடுக்கவும். இதில் “Create application shortcuts” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி, குறிப்பிட்ட பக்கமானது முழுமையாகத் திரை முழுவதும் காட்டப்படும். வழக்கமான பிரவுசர் சார்ந்த எதுவும் காட்டப்பட மாட்டாது.
11. நாம் தொடர்ந்து இணைய தளங்களைப் பார்த்து தகவல்களைத் தேர்ந்தெடுத்து தேக்கி வைக்கிறோம். இடையே, ஏதேனும் பணி இருந்தால், கம்ப்யூட்டரை நிறுத்திச் செல்கிறோம். பின்னர், சிறிய கால இடைவெளியில், மீண்டும் இணையம் செல்ல, கம்ப்யூட்டரை இயக்குகிறோம். அப்போது நாம் முன்பு பார்த்த அனைத்து தளங்களும் திறக்க முயற்சிக்கிறோம். ஒவ்வொன்றாகத் திறந்தால், அதிக நேரம் ஆகும். முன்பு திறக்கப்பட்ட தளங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டால் நன்றாக இருக்கும் அல்லவா? இதனை நாம் செட்டிங்ஸ் மூலம் அமைக்கலாம். இதற்கு, chrome://settings செல்லவும். அங்கு, “On startup” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் “Continue where I left off” என்பதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுத்து அமைக்கவும். அடுத்த முறை, குரோம் பிரவுசரை இயக்கும்போது, அதற்கு முன் இயக்கியபோது நீங்கள் பார்த்த அனைத்துஇணைய தளங்களுடன், பிரவுசர் திறக்கப்படும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X