உலகைச் சுருக்கிய தகவல் தொழில் நுட்பம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2015
00:00

பன்னாட்டளவில் இயங்கும் தகவல் தொழில் நுட்ப மேம்பாடுகள் குறித்து கண்காணித்து வரும் International Telecommunication Union அமைப்பு, அண்மையில் 2015 ஆம் ஆண்டுக்கான தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம் குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இதில் கண்டுள்ள தகவல்களையும், தகவல் தொழில் நுட்ப முன்னேற்றத்தின் முக்கிய நிலைகளையும் இங்கு காணலாம்.
உலகின் பல மூலைகளில் வாழும் மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வது என்பது, தொலைபேசியை, குறிப்பாக மொபைல் தொலைபேசியை மக்களிடம் கொண்டு சென்ற போது சாத்தியமாயிற்று. ஆனால், இணைய வழி தொடர்பு வந்த போது, மக்கள் தொடர்பு கொள்வதில் மாபெரும் புரட்சியே ஏற்பட்டது. ஆண்டு 2000ல், இன்டர்நெட் என்பது, ஓர் ஆடம்பர வசதியாக, பண வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக, நகரங்களில் வாழ்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பிரசாதமாக இருந்தது.
ஆனால், இன்று 15 ஆண்டுகளுக்குப் பின், தொழில் நுட்ப உலகில் ஏற்பட்ட முன்னேற்றம், அடிப்படைக் கட்டமைப்பில் ஏற்பட்ட அதிரடி மாற்றம், தொலை தொடர்பு சாதனங்களின் விலை சரிவு ஆகியவற்றினால், மனிதனின் இந்த அற்புத கண்டுபிடிப்பு, ஒரு சிறந்த பயனுள்ள சாதனமாக மாறி, அனைவருக்கும் கிட்டக் கூடியதாக உருவெடுத்துள்ளது.
2000 ஆம் ஆண்டில், உலக அளவில், மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 73.8 கோடியாக இருந்தது. இன்று அது 700 கோடியாக உயர்ந்துள்ளது. அண்மையில் நடந்த ஐக்கிய நாடுகள் நூற்றாண்டு வளர்ச்சி இலக்குகள் கருத்தரங்கில் இந்த புள்ளி விபரங்கள் பெருமையுடன் வைக்கப்பட்டு, தொடர் முன்னேற்றத்திற்கான இலக்குகள் குறிக்கப்பட்டன.
2000 ஆம் ஆண்டில், உலகின் பல பாகங்களில், இணையம் பயன்படுத்தப்படாத, கிடைக்காத ஒரு வசதியாக இருந்தது. 40 கோடி பேர் மட்டுமே அதனைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது இது 320 கோடியாக இந்த ஆண்டின் இறுதியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பு கூட ஒரு குறைவான மதிப்பினையே கொண்டுள்ளது எனலாம். ஏனென்றால், 2000 ஆம் ஆண்டில் இது கிடைக்கவே கிடைக்காது என எண்ணிய, தற்போதைய வளரும் நாடுகளில், ஏறத்தாழ 200 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த உயர்வு, மொபைல் குறிப்பாக ஸ்மார்ட் போன் பயன்பாட்டினால் ஏற்பட்டது ஏற்பட்டது என உறுதியாகக் கூறலாம். தற்போது உலக அளவில், 200 கோடி ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டில் உள்ளன. உலக அளவில், மொபைல் பயன்படுத்துபவர்களில், 83% பேர், தங்கள் மொபைல் போன்கள் எந்த நேரமும் இணைய இணைப்பில் இருக்க வேண்டும் என விரும்பிச் செயல்படுகின்றனர்.
வயர் வழி இல்லாத இணைப்பு தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வேகமான மாறுதல்களும் இதற்கு ஒரு காரணமாகும். அதுவே, மிகக் குறைந்த அளவு வளர்ச்சி பெற்ற நாடுகளில், விளிம்பு நிலைகளில் வாழ்கின்ற மக்களை இணைக்க ஓர் அடிப்படையைத் தந்து வருகிறது.
இந்தியாவிலும் சீனாவிலும் தகவல் தொடர்பு துறையில் ஏற்பட்ட மாற்றங்களே, வளர்ந்த நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் ஒருவருக்கு இணையாக, இந்த இரண்டு நாடுகளிலும் இருவர் உள்ளனர். இருப்பினும், வளர்ந்த நாடுகளில் 200 கோடி பேர், இணைய இணைப்பின்றி இருக்கையில், வளர்ந்து வரும் சீனா, இந்தியா போன்ற நாடுகளில், 400 கோடி பேர் இணையத்தைத் தொடர்பு கொள்ளாமல் இருக்கின்றனர்.
இன்னும் மோசமான சூழ்நிலை, குறைவாக வளர்ந்த நாடுகளில் காணப்படுகிறது. இந்த நாடுகளில், 10ல் ஒருவருக்குத்தான் இணையத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நாடுகளின் ஜனத்தொகை 94 கோடிக்கும் சற்று அதிகமாக இருக்கும். ஆனால், இவர்களில் 9.5% பேர் மட்டுமே இணைய இணைப்பு பெற்று வருகின்றனர்.
தகவல் மற்றும் தொலை தொடர்பு தொழில் நுட்பத்தின் கடந்த 15 ஆண்டுகால வளர்ச்சி பல ஆச்சரியப்படத்தக்க சாதனைகளை வெளிப்படுத்துவதாய் உள்ளது.
உலக அளவிலான இன்டர்நெட் பயன்பாடு கடந்த 15 ஆண்டுகளில், 6.5% லிருந்து, 43% ஆக 7 மடங்கு உயர்ந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு வேகமாக உயரத் தொடங்கிய மொபைல் பிராட்பேண்ட் பயன்பாடு, தற்போது 47% ஐ எட்டியுள்ளது.
இணைய இணைப்பு பெற்ற வீடுகளின் எண்ணிக்கை 15% லிருந்து, 46% ஆக உயர்ந்துள்ளது.
2ஜி மொபைல் போன் இணைப்பு 2001ல் 58% ஆக இருந்தது, தற்போது 95% ஆக உள்ளது.
3ஜி தொழில் நுட்பம், முதன் முதலில் ஜப்பானில், என்.டி.டி. டொகோமோ நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின்னர், பல்வேறு நிறுவனங்களால், உலகெங்கும் உற்சாகத்தோடு இந்த தொழில் நுட்பம் வழங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில், 45% மக்களால் பயன்படுத்தப்பட்ட 3ஜி தொழில் நுட்பம், தற்போது 69% பேரால் பயன்படுத்தப்படுகிறது. கிராமப் புறங்களில் இது 29% ஆகவும், நகர்ப்புறங்களில், இது 89% ஆகவும் இன்று உள்ளது. இந்த தொழில் நுட்பம் இந்த அளவிற்கு வளர்ச்சி அடையக் காரணம் இந்தியாவிலும் சீனாவிலும் மக்கள் வாழ்வில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களே.
பிராட்பேண்ட் இணைய இணைப்பு என்று வருகையில், இணைப்பின் வேகம் ஒரு முக்கிய அம்சமாகிறது. உலக அளவில், பிராட்பேண்ட் இணைய இணைப்பு வளர்ந்து வந்தாலும், ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றில், பிராட்பேண்ட் இணைய இணைப்பு மிகவும் மெதுவாகவே மக்களுக்குக் கிடைத்து வருகிறது.
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சில ஆசிய நாடுகளில், குறைந்தது 10 Mbps வேகத்தில் இணைய இணைப்பு கிடைத்து வருகிறது.
பிராட்பேண்ட் இணைப்பு வேகத்தைப் பொறுத்தவரை, கொரியக் குடியரசு முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, பிரான்ஸ், ஸ்வீடன், டென்மார்க், ஸ்விட்சர்லாந்து மற்றும் பிரிட்டன் இடம் பெறுகின்றன. இவற்றைத் தொடர்ந்தே அமெரிக்காவும், கனடாவும் இடம் பெறுகின்றன.
சீனாவும் இந்தியாவும் இணைய இணைப்பு, மொபைல் போன் பயன்பாடு ஆகியவற்றில் உலக அளவில் முன்னணி இடத்தில் இருந்தாலும், பிராட்பேண்ட் இணைப்பில் பின் தங்கியே உள்ளன. சராசரி வேகம் இங்கு 2 Mbps தான். இந்த அறிக்கை முடிவாக, 2015 ஆம் ஆண்டின் இறுதியில், வளர்ந்த நாடுகளில் 80% வீடுகளிலும், வளர்ந்து வரும் நாடுகளில் 34% வீடுகளிலும், இணைய இணைப்பு ஏதேனும் ஒரு வடிவில் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
தகவல் மற்றும் தொலை தொடர்பு தொழில் நுட்பம், 2015க்குப் பின்னர் இன்னும் வேகமாக வளர்ந்து எண்ண முடியாத இலக்குகளை எட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X