பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மைக்ரோமேக்ஸ் போல்ட் டி303
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2015
00:00

தன் போல்ட் (Bolt) வரிசையில், புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை பட்ஜெட் விலையில், மைக்ரோமேக்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 3,499 மட்டுமே. இதில் ஸ்வைப் கீ போர்ட் உள்ளது. பயனாளர்கள் தாங்கள் விரும்பும் மொழியில் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கீ போர்டில் தமிழ், தெலுன்க்கு, கன்னடம், ஒரியா, வங்காள மொழி, மராத்தி, குஜராத்தி, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளைப் பயன்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது.
இதில் 4 அங்குல அளவில் WVGA திரை உள்ளது. இதன் டூயல் கோர் ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. ஆண்ட்ராய்ட் 4.4. சிஸ்டம் தரப்படுகிறது. நிலைத்த போகஸ் உடைய 3.2 மெகா பிக்ஸெல் கேமரா, எல்.இ.டி. ப்ளாஷ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறமாக 0.3 எம்.பி. திறன் கொண்ட வி.ஜி.ஏ. கேமரா உள்ளது.
இதில் உள்ள App bazaar செயலியின் மூலம், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் Firsttouch launcher, Chatz, Clean Master, hotstar, Housing, NewHunt, Quikr, Scandid, Snapdeal மற்றும் பல அப்ளிகேஷன்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன.
இதன் ராம் மெமரி 512 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். இரண்டு சிம்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0, ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 1,300 mAh திறன் கொண்டது. நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்டு கிடைக்கும் இந்த ஸ்மார்ட் போன் விலை ரூ. 3,499.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X