எக்ஸெல் டிப்ஸ்...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2015
00:00

டேட்டாவின் கீழே கோடு
எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டாவைத் தேர்வு செய்து, பின்னர் அடிக்கோடுக்கான U ஐகான் மீது அழுத்தினால், அல்லது கண்ட்ரோல் + U அழுத்தினால், டேட்டாவின் கீழாக ஒரு கோடு அமைக்கப்படும். இது அடிக்கோடு அமைத்தலாகும். ஒரு அடிக்கோடுக்குப் பதிலாக, இரண்டு கோடுகள் அமைக்க வேண்டும் என்றால், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு Underline டூலை அழுத்தவும். இரு கோடுகள் அமைக்கப்படும். இதே போல பலவகைக் கோடுகள் அமைக்க, Format=>Cells கட்டளையை கொடுத்து, பின்பு Font டேபை அழுத்திப் பாருங்கள். பலவித அடிக்கோடுகளை Underline பகுதியில் காணலாம்.

டெக்ஸ்ட் டிசைன்
தாங்கள் அமைத்திடும் ஒர்க் ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டாவிட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஒரு அம்சத்தை இங்கு பார்ப்போம்.
எக்ஸெல் ஒர்க் ஷீட் லே அவுட் மற்றும் டிசைன் செய்வதில் அனைவரும் பொதுவான பிரச்னை ஒன்றைச் சந்திப்பார்கள். செல்களில் உள்ள டேட்டா டெக்ஸ்ட் உள்ள அளவிற்கு அதிகமான இடத்தை எடுத்திருக்காது. இதனால் டேட்டா உள்ள செல்களில் அதிகமான காலி இடம் இருக்கும். இது ஒர்க் ஷீட் டிசைனில் விரும்பாத தோற்றத்தினைத்தரும். இந்த பிரச்னையைத் தீர்க்க எக்ஸெல் இரண்டு வழிகளைத் தருகிறது. டெக்ஸ்ட்டை நெட்டாக அமைக்கலாம்; அல்லது சுழற்றி ஒரு கோணத்தில் வைக்கலாம். எந்த செல்களில் உள்ள டெக்ஸ்ட்டை மாற்றி அமைத்திட வேண்டுமோ அந்த செல்களைத் தேர்ந்தெடுக்கவும். பின் இதில் மவுஸ் ரைட் கிளிக் செய்தால் மெனு ஒன்று கிடைக்கும்.
இதில் Format Cells என்பதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள பல டேப்களில் அலைன்மெண்ட் என்பதனைத் தேர்ந்தெடுத்தால் நெட்டாக, படுக்கை வசமாக, குறிப்பிட்ட கோணத்தில் சாய்வாக டெக்ஸ்ட்டை அமைத்திட வழிகள் தரப்பட்டிருக்கும். உங்கள் டிசைன் கற்பனைக்கேற்ப டெக்ஸ்ட்டை அமைத்திட கட்டளை தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது காலி இடம் இல்லாமல் டெக்ஸ்ட் அமைக்கப்பட்டு அழகான தோற்றத்தில் இருக்கும்.
டெக்ஸ்ட்டுக்கு

அதிக இடம் வேண்டுமா?
நீங்கள் எம்.எஸ். வேர்ட் தொகுப்பினைப் பயன்படுத்துகையில் உங்கள் டெக்ஸ்ட்டுக்கு நிறைய இடம் வேண்டும் என எண்ணுபவரா? எதற்கு இந்த தேவையில்லாத மெனு மற்றும் பார்கள் இருக்கின்றன என்று எரிச்சல் படுபவரா? வேர்ட் செட் அப்பில் ஒரு சில டிக் அடையாளங்களை ஏற்படுத்துவதன் மூலமும் நீக்குவதன் மூலமும் இதனை மேற்கொள்ளலாம். அதே போல மீண்டும் வேண்டும் என்றாலும் அவற்றை மீட்டுக் கொள்ளலாம். இதற்கு முதலில் Tools மெனு செல்லவும்.
பின் அதில் Options என்னும் பிரிவைத் தேர்ந்தெடுத்து வரும் டேப் விண்டோவில் View டேபைக் கிளிக் செய்திடவும். இதில் Horizontal Scroll Bar, Status Bar, Vertical Scroll Bar என்ற மூன்று பார்களும் அவற்றின் எதிரே செக் பாக்ஸ்களும் இருக்கும்.
இதில் எது உங்களுக்குத் தேவை இல்லை என எண்ணுகிறீர்களோ அதில் டிக் அடையாளத்தை எடுத்துவிடுங்கள். பின் வேர்ட் தொகுப்பில் டெக்ஸ்ட் தயாரிக் கையில் அல்லது எடிட் செய்கையில் உங்கள் மானிட்டரில் நீங்கள் டிக் அடையாளம் எடுத்துவிட்ட பார்கள் இருக்காது. இதனால் டெக்ஸ்ட் அடிக்கச் சற்று கூடுதலாக இடம் கிடைக்கும். நீக்கிய இந்த பார்கள் மீண்டும் வேண்டும் என்றால் மீண்டும் இதே வழியில் சென்று வியூ டேப் அழுத்தித் தேவையான பார் களுக்கு முன்னால் உள்ள பாக்ஸ் களில் டிக் அடையாளம் ஏற்படுத்தினால் போதும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X