எச்.டி.சி. டிசையர் 326 ஜி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2015
00:00

புதியதாக ஸ்மார்ட் போன் ஒன்றை Desire 326 G (White) என்ற பெயரில், எச்.டி.சி. நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்கேட் சிஸ்டம் இயங்குகிறது. 8 எம்.பி. திறனுடன் கூடிய பின்புறக் கேமராவும், 2 எம்.பி. திறனுடன் கூடிய முன்புறக் கேமராவும் உள்ளன. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச சந்தை விலை ரூ. 9,590.
எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ்., இமெயில் மற்றும் புஷ் மெயில் வசதிகள் உள்ளன. HTML5 பிரவுசர் இயங்குகிறது. மல்ட்டி மீடியா வசதிகளைப் பொறுத்தவரை MP4/H.264 player/MP3/eAAC+/WAV player பிளேயர்கள் இயங்குகின்றன. டாகுமெண்ட் வியூவர் பயன்படுத்தலாம். போட்டோ மற்றும் விடீயோ எடிட்டர்களும் உள்ளன. இரண்டு மைக்ரோ சிம்களை இயக்கலாம். இதன் பரிமாணம் 139.7 x 69.6 x 9.7 மிமீ. எடை 146 கிராம். பார் வடிவ அமைப்பில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் கொண்டு இயங்குகிறது. மல்ட்டி டச் வசதியும் உள்ளது. எப்.எம். ரேடியோ இயங்குகிறது.
இதில் உள்ள மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட்டில், 32 ஜிபி வரையிலான கொள்ளளவு கொண்ட கார்ட்களைப் பயன்படுத்தலாம். இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி.
நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத், யு.எஸ்.பி, ஆகியவை இயங்குகின்றன. ஆட்டோ போகஸ், எல்.இ.டி. ப்ளாஷ் உடன் 8 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா உள்ளது. இதில் தரப்பட்டுள்ள ப்ராசசர் Spreadtrum SC7731G. குவாட் கோர் வகையைச் சேர்ந்தது. அக்சிலரோமீட்டர், ப்ராக்ஸிமிட்டி சென்சார்கள் உள்ளன.
இதன் பேட்டரி லித்தியம் அயன் பேட்டரி 2000 mAh திறன் கொண்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 524 மணி நேரம் தேக்கி வைக்கலாம். தொடர்ந்து 20 மணி நேரம் பேசலாம்.
ரூ. 10,000க்கும் குறைவான (ரூ.9590) விலையில் கிடைக்கும், கூடுதல் வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக இது உள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X