சோனி எக்ஸ்பீரியா இ4 டூயல் பிளாக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2015
00:00

சோனி நிறுவனம், மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளைக் கண்டு, தானும் இரண்டு சிம்களை இயக்கும் மொபைல் போன்களைத் தயாரித்து வழங்கும் முறையைக் கடைப்பிடித்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் வெளியான ஸ்மார்ட் மொபைல் போன் சோனி எக்ஸ்பீரியா இ 4 ஆகும்.
இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட். எல்.இ.டி. ப்ளாஷ் மற்றும் ஆட்டோ போகஸ் வசதி கொண்ட 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாக இயங்குகிறது. இதன் திரை 5 அங்குல அளவில், ஐ.பி.எஸ்.கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரையாக உள்ளது. நான்கு விரல்களைக் கொண்ட மல்ட்டி டச் இயக்கத்தை இதில் மேற்கொள்ளலாம். இதில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படும் Cortex-A7 சிப் உள்ளது. Mediatek MT6582 சிப்செட் இயங்குகிறது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ் மெயில் வசதிகள் தரப்பட்டுள்ளன.
எச்.டி.எம்.எல்.பிரவுசர் இயங்குகிறது. டாகுமெண்ட் வியூவர் தரப்பட்டுள்ளது. இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இதில் இயக்கலாம். இதன் பரிமாணம் 137 x 74.6 x 10.5 மிமீ ஆகும். எடை 144 கிராம்.
லவுட் ஸ்பீக்கர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளன. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., வை- பி, A2DP இணைந்த புளுடூத் தரப்பட்டுள்ளன. இதன் பின்புறக் கேமரா 5 எம்.பி. திறன் கொண்டதாகவும், முன்புறக் கேமரா 2 எம்.பி. திறன் கொண்டதாகவும் உள்ளன. எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது. பலவகையான சென்சார்கள் இயங்குகின்றன. வெளியே எடுக்க இயலாத இதன் லித்தியம் அயன் பேட்டரி 2,300 mAh திறன் கொண்டதாக உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 552 மணி நேரம் தங்குகிறது. தொடர்ந்து 12 மணி நேரம் வரை பேசுவதற்கான மின் சக்தியை அளிக்கிறது.
இதன் சந்தை விலை ரூ. 11,611.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X