ஒளிரும் டிஜிட்டல் இந்தியா
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 ஆக
2015
00:00

நாம் இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியின் நடுவே வாழ்கிறோம். அரசாங்கமும், இந்திய தொழில் பிரிவுகளும், தொழில் நுட்பத்தின் அதீத பயனை நன்கு அறிந்துள்ளன. தொழில் நுட்பம் என்பது, நம் முன்னேற்றத்தின் திறவு கோல் என்பதை உணர்ந்து அதனைப் பயன்படுத்துவதில் அனைவரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எப்படி நமக்கு தண்ணீர், கேஸ் மற்றும் மின்சாரம் என்பவை எல்லாம் அடிப்படையான அத்தியாவசியத் தேவைகளோ, அதே போல தொழில் நுட்பம், இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அடிப்படையாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதன் ஒரு பரிமாணம் தான், நம் வாழ்க்கையின் அனைத்து பிரிவுகளையும் டிஜிட்டல் மயமாக்குவதில் ஈடுபட்டு வருகிறோம். நமது பிரதமரும், தொலைநோக்குப் பார்வையுடன், டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதில் திட்டங்களைத் தந்து வருகிறார்.
இந்த வகையில், இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. முதல் ஒரு கோடி இணையப் பயனாளர்களைப் பெற, இந்தியாவிற்கு பத்து ஆண்டுகள் தேவைப்பட்டன. அடுத்த பத்து ஆண்டுகளில், இது பத்து கோடியாக மாறியது. ஆனால், அடுத்த பத்து கோடி பேர் 2010 முதல் 2013 ஆம் ஆண்டு இடைவெளியில் உருவானார்கள். பின்னர், அடுத்த 18 மாதங்களில், அடுத்த பத்துகோடி பேர் இணைய, 2013 டிசம்பரில், இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 30 கோடியாக உயர்ந்தது.
2014 முதல் 2019 ஆம் ஆண்டு இடைவெளியில், இந்தியாவின் இணைய பயன்பாடு ஆண்டுக்கு 33% உயர உள்ளது. இணையப் பயன்பாட்டிற்கான சாதனங்கள் பல வெளியாகி இதற்கு உதவி வருகின்றன.
டிஜிட்டல் மயமாகும் தொழிற்பிரிவுகள் எண்ணிக்கை தொடர்ந்து உயரும். இப்போது எப்படி போன்கள் குறித்து அதிகம் பேசுகிறோமோ, அதே போல விரைவில், நம் மக்கள், அனைத்து சாதனங்களும் இணையத்தில் இணைந்து செயல்படும் விதம் குறித்து பேசுவார்கள். ரோபோடிக்ஸ் என்னும் இயந்திர மனிதனின் செயல்பாடுகள் மற்றும் தேவைகள் குறித்து கருத்து தெரிவிப்பார்கள். முப்பரிமாண அச்சுத் திறனும், செயற்கை நுண்ணறிவுத் திறனும் மக்களுக்கு உதவிடும் இரு புலங்களாக இயங்கும் காலம் விரைவில் வரும்.
வர்த்தகத் துறை டிஜிட்டல் மயமாக மாறிவருவதால், வர்த்தகம் மேற்கொள்ளப்படும் வழிகளில் முற்றிலும் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். எனவே, மக்களின் ஒவ்வொரு வாழ்க்கைப் பிரிவும் டிஜிட்டல் மயமாக மாற வேண்டும் என அரசு எதிர்பார்க்கிறது. இதற்கான மக்களின் ஒத்துழைப்பினையும், மக்கள் இதனைப் புரிந்து கொள்ளும் வழிகளைத் தர தொழில் நுட்ப வல்லுநர்களின் செயல்திறனையும் அரசு வேண்டுகிறது.
அரசின் சேவைகள் அனைத்தும் மக்களுக்கும் டிஜிட்டல் பின்புலக் கட்டமைப்பு வழியாக, விரைவாகவும் எளிதாகவும் சென்று அடைய வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் ஒரு கட்டமாகவே, கிராமப்புறங்கள் அனைத்தும், அதிவேக இணைய இணைப்பால் கட்டப்பட வேண்டுமென திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.
அடிப்படை டிஜிட்டல் கட்டமைப்பு, டிஜிட்டல் வழி சேவைகள் வழங்கல் மற்றும் டிஜிட்டல் அமைப்பு குறித்து மக்கள் கற்று அறிந்து வைத்திருத்தல் என மூன்று இலக்குகளுடன் செயல்பட்டால், முழுமையான டிஜிட்டல் இந்தியா அமைவது வெகு தூரத்தில் இல்லை..

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X