கம்ப்யூட்டருக்கு புதியவரா - பிரவுசரில் சந்திக்கும் பிழைச் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 ஆக
2015
00:00

இணையத்தில் உலா வருகையில், நிச்சயமாக ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு பிழைச் செய்திகள் நமக்குக் காட்டப்படும். குறிப்பாக, நாம் இணைய தள முகவரியினைக் கொடுத்துவிட்டு, தளத்தினைக் காணக் காத்திருப்போம். அப்போது தளத்திற்குப் பதிலாக, பிழைச் செய்தி கட்டமிட்டுக் காட்டப்படும். பிழைச் செய்திகளைக் காட்டும் வகை வெவ்வேறாக இருந்தாலும், பிழைச் செய்திகள் சுட்டிக் காட்டும் தவறுகள் அல்லது சிக்கல்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இத்தகைய பிழைச் செய்திகளில் சில வகைகளை இங்கு காணலாம்.

சர்டிபிகேட் எர்ரர் (certificate error): பொதுவாக இவை SSL சர்டிபிகேட் எர்ரர் எனக் காட்டப்படும். இது பெரும்பாலும் HTTPS என்ற முன்னொட்டுடன் தொடங்கும் இணைய முகவரி கொண்ட தளத்தினை அணுக எண்ணுகையில் கிடைக்கும். HTTPS encryption குறித்த பிழைச் செய்தியாக இது இருக்கும். இந்த வகையில் தகவல்களை இணைய தளங்கள் சுருக்கி வழங்கும்போது, தாங்கள் உண்மையான இணைய தளங்கள் என்று காட்ட, அவை சான்றிதழ் ஒன்றை முதலில் காட்டும். எடுத்துக் காட்டாக, Google.com இணைய தளம், அதற்கான சான்றிதழை, சான்றிதழ் வழங்கும் அதிகாரபூர்வமான அமைப்பிடம் பெற்றிருக்கும். முதலில், இந்த தளத்தின் பெயரைக் கொண்டு, கூகுள் தான் அதன் உரிமையாளர் என்ற சான்றிதழ் தகவல் சரி பார்க்கப்படும். நாம் Google.com தளத்தினை அணுகுகையில், அந்த தளமானது இது குறித்து தனக்கு வழங்கப்பட்ட சான்றிதழைக் காட்டும். நாம் பயன்படுத்தும் பிரவுசர், அந்த சான்றிதழ் சரியான, அத்தாட்சி பெற்ற அமைப்பு வழங்கியுள்ளதா என்று சோதனை செய்திடும். இந்த அடிப்படையில், நீங்கள் சரியான கூகுள் தளத்தினைப் பெறுகிறீர்களா அல்லது அதே போன்ற பெயர் கொண்ட போலியான, மால்வேர் பரப்பும் ஹேக்கர் ஒருவரின் சர்வர் தரும் தளத்தினைப் பெறுகிறீர்களா என்பது தெரிந்துவிடும். எனவே, சான்றிதழ் குறித்த, பிழைச் செய்தி வந்தால், நீங்கள் தேடும் தளம் இன்றி, போலியான ஒரு சர்வருடன் இணைக்கப் பெறுகிறீர்கள் என்பது உண்மையாகிறது. எடுத்துக் காட்டாக, பொது இடத்தில், அங்கு கிடைக்கும் வை பி மூலம், பொதுவான நெட்வொர்க் ஒன்றில் நுழைந்து, வங்கியின் தளத்தை அணுக முயற்சிக்கும்போது இந்த பிழைச் செய்தி கிடைத்தால், நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க் ஹேக்கர்களால் கைப்பற்றப்பட்டு, போலியான ஒரு சர்வருக்கு உங்களை இழுக்கிறது என்று பொருள். இன்னொரு நிகழ்வும் இங்கு ஏற்பட வாய்ப்பு உண்டு. நீங்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் இணைய தளம் தனக்கான தகுதிச் சான்றிதழை, அதனை வழங்கிய அதிகாரபூர்வ அமைப்பிடம், புதுப்பிக்க தவறியிருந்தாலும், இந்த பிழைச் செய்தி கிடைக்கும். இருப்பினும், இந்த இரண்டின் போதும் நாம் நம் தனிப்பட்ட நிதி பரிமாற்றங்களை அல்லது தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.

மால்வேர் குறித்த எச்சரிக்கை செய்தி: நீங்கள் எந்த பிரவுசர் பயன்படுத்தினாலும், அதன் வழியாக அதிக எண்ணிக்கையில் இணைய தளப் பக்கங்களைத் தரவிறக்கம் செய்கிறீர்கள். இவற்றில் ஆபத்து நிறைந்தவையாகவும் சில இருக்கலாம். இந்த அபாயகரமான தகவல்கள் அடங்கியுள்ள இணைய தளத்தினை நீங்கள் அணுக முயற்சிக்கையில், அதன் அபாயம் குறித்த பிழைச் செய்தி காட்டப்படலாம். குறிப்பிட்ட அந்த இணைய தளம், ஏற்கனவே அபாயம் நிறைந்ததாகக் கண்டறியப்பட்டு, அணுகக் கூடாத தளங்களின் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கலாம். ஏனென்றால், இந்த இணைய தளத்தில் நீங்கள் செல்கையில், போலியான ஒன்றைக் காட்டி, அதன் மூலம் உங்கள் பாஸ்வேர்ட், கிரெடிட் கார்ட் எண்கள் மற்றும் இது போன்ற ரகசிய தனி நபர் தகவல்கள் திருடப்பட்டு, பின்னர் சிலரால் பயன்படுத்தப் படலாம். இது போன்ற பிழைச் செய்திகள் கிடைக்கப்பட்டால், அதனுள் செல்லாமல், விலகிச் செல்வதே நல்லது.

404 காணப்படவில்லை (“404 Not Found,”): நாம் அடிக்கடி காணும் பிழைச் செய்தி இது. ”இல்லாத இணைய தளம் ஒன்றைக் காண நீங்கள் முயற்சிக்கிறீர்கள்” என்பதே இதன் பொருள். அந்த இணையதளம் நீக்கப்பட்டிருக்க வேண்டும்; அல்லது, நீங்கள் அதன் இணைய முகவரியைத் தவறாகத் தந்திருக்க வேண்டும். இந்த பிழைச் செய்தி, மிகத் தொலைவில் இருக்கும் ஒரு வெப் சர்வரால் அமைக்கப்பட்டு, உங்கள் பிரவுசரில் காட்டப்படுகிறது. பெரும்பாலும், நீங்கள் தவறாக இதன் முகவரியை அமைத்திருப்பீர்கள் அல்லது நீங்கள் இந்த இணைய தளம் செல்ல, கிளிக் செய்த லிங்க்கில் தவறு இருக்கலாம்.

சர்வர் இல்லையே! (“Server not found”): பிரவுசரில் இந்த பிழைச் செய்தி வந்தால், உங்கள் பிரவுசர் நீங்கள் அமைத்த முகவரியில், இணையதளம் எதனையும் காணவில்லை என்பதே பொருள். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நீங்கள் முகவரியைத் தவறாக அமைத்திருக்கலாம். இல்லாத ஓர் இணைய தளத்தினை அணுக நீங்கள் முயற்சிக்கலாம். உங்கள் பிரவுசருக்கு அடுத்த நிலையில் இயங்கும், இணைய சேவை தரும் நிறுவனத்தின் டி.என்.எஸ். சர்வர் இயங்காமல் இருக்கலாம். அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் அமைக்கப்பட்டுள்ள பயர்வால், இதனைத் தவறாகப் புரிந்து கொண்டு, இந்த பிழைச் செய்தியைத் தரலாம்.
தொடர்பு கொள்ள முடியவில்லை (“Unable to connect”) இதுவும் மேலே சொல்லப்பட்ட “Server not found” போன்றதுதான். இந்த பிழைச் செய்தி வருகையில், நீங்கள் அமைத்த முகவரி, உங்கள் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள டி.என்.எஸ். சர்வரைச் சரியாக அணுகி, அதற்கு மேல், நீங்கள் குறிப்பிட்ட இணைய தளத்தினைப் பெற முடியவில்லை என்பதே பொருள். அதாவது, நீங்கள் தொடர்பு கொள்ள முயன்ற இணைய தளம் உள்ள சர்வரிடமிருந்து, உங்கள் பிரவுசர் அனுப்பிய இணைப்பு தொடர்புக்குச் சரியான பதில் வரவில்லை என்பதே பொருள். இந்த பிழைச் செய்தி வரும்போது, நீங்கள் இணைய விரும்பிய இணைய தளம் இயங்காமல் இருக்கலாம்; அல்லது பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டு இயங்க முடியாமல் இருக்கலாம். அல்லது மேலே சுட்டிக் காட்டியபடி, பயர்வால் பிரச்னையாகவும் இருக்கலாம்.
மேலே காட்டப்பட்டுள்ள பிழைச் செய்திகள் போல, இன்னும் பல வகை பிழைச் செய்திகளை நீங்கள் இணையத்தைப் பயன்படுத்துகையில் பெறலாம். ஆனால், இவைதான் பொதுவாக அதிகம் பெறப்படும் பிழைச் செய்திகளாகும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X