பெர்சனல் பிரேக்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 ஆக
2015
00:00

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கட்டாயமாக அப்டேட் செய்திடும் வகையில், மைக்ரோசாப்ட் நம் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்துவிடும் என்பது நல்ல தகவல். ஏனென்றால், நாம் அப்டேட் செய்வதனை ஒத்தி போடுகிறோம். அல்லது செய்வதே இல்லை. இது நமக்குப் பாதுகாப்பற்ற தன்மையைக் கொடுக்கும் என்று அறிந்த பின்னரும், அப்டேட் செய்திடாமல் இருப்பது நல்லதல்ல. எனவே, இதனைக் கட்டாயமாக்கிய மைக்ரோசாப்ட் நடவடிக்கை பாராட்டத்தக்கது.
என். இருதயராஜ், சிதம்பரம்.

“எந்த க்ளவ்ட் சிறந்தது?” என்ற கட்டுரை மிக அழகாக, தற்போது கிடைக்கும் க்ளவ்ட் சேமிப்பு தளங்களின் கூறுகளை ஒப்பிட்டு ஆய்வு செய்து முடிவுகளைத் தருவதாக அமைந்துள்ளது. இது ஒரு தெளிவான முடிவினை எடுக்க, பயனாளருக்கு உதவும். கட்டுரை ஆசிரியருக்கு நன்றி.
ஆ. சுலைமான், பொள்ளாச்சி.

“விண்டோஸ் 10 சார்ந்த கூடுதல் விளக்கங்கள்” என்ற தலைப்பின் கீழ் தரப்பட்டுள்ள விஷயங்கள், ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த அனைத்து செய்திகளையும் தரவில்லை. இன்னும் பல விஷயங்களில், எங்களுக்கு தொடர்ந்து சந்தேகங்கள் உள்ளன. இது குறித்து கடிதங்கள் அனுப்பி இருக்கிறேன். அவசியம் அவற்றுக்கும் பதில் தரவும்.
என். ஜெயஸ்ரீ பிரகாஷ், சென்னை.

வேர்ட் பகுதியில், எண்களுடன் பட்டியல் அமைப்பது குறித்த டிப்ஸ் மிக அருமையாகவும், எளிமையாகவும் உள்ளது. இது போலவே, சின்ன சின்ன விஷயங்களையும் தெளிவு படுத்தவும்.
என். மகாலட்சுமி சுவாமிநாதன், கும்பகோணம்.

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வந்த இந்நிலையில், அதன் முன்னோடி சிஸ்டங்கள் குறித்த வரலாற்றுப் பார்வை மிக அற்புதம்.
மைக்ரோசாப்ட் எப்படி எல்லாம், தன் விண்டோஸ் சிஸ்டத்தினை, குறிப்பிட்ட கால அவகாசத்தில் தந்தது. அதில் வெற்றி பெற்றவை, தோல்வியைச் சந்தித்தவை குறித்த குறிப்புகள் அனைத்தும் மிகச் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. ஒரு நல்ல பாடக் கட்டுரை போல அமைந்துள்ளது இதன் சிறப்பு.
ஆ. சுந்தரம், மதுரை.

பைல்களை காப்பி செய்வதில், யு.எஸ்.பி. ட்ரைவ்களின் வடிவமைப்பும், அவற்றின் செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களையும் படம் பிடித்துக் காட்டும் வகையில் படங்களுடன் கட்டுரை அழகாக அமைந்துள்ளது. பல விஷயங்களைப் புதியதாக அறிந்து கொண்டேன். நன்றி.
என். சிக்கந்தர், புதுச்சேரி.

கூகுள் மெயில் அக்கவுண்ட்டில் உள்ள அக்கவுண்ட்டினை மூடுவது குறித்த விளக்கங்களைப் பின்பற்றி என் பழைய கணக்கினை மூடினேன். இது போல சின்ன சின்ன விஷயங்களை டிப்ஸ்களாகத் தருவதில் கம்ப்யூட்டர் மலர் நல்ல பணியாற்றுகிறது.
என். சிதம்பர நாதன், ஆத்தூர்.

ஸ்பைடர் ஓக் மற்றும் ட்ரெ சோரிட் ஆகியவை குறித்து இப்போதுதான் கேள்விப் பட்டிருக்கிறேன். அவற்றின் இணைய தளங்களைச் சென்று பார்த்த போது, இவற்றையும் நாம் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. புதிய தகவல்களுக்கு நன்றி.
கே. கிறிஸ்டோபர், தூத்துக்குடி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X