லாவா செல்பி ஸ்மார்ட் போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 ஆக
2015
00:00

லாவா மொபைல் நிறுவனம், அண்மையில் Iris X1 Selfie என்ற பெயரில், புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை சந்தையில் அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் பெயர் குறிப்பிடுவது போல, செல்பி போட்டோ எடுப்போரை மையமாகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த நிறுவனம் Lava Iris X5 மற்றும் Lava Iris Selfie 50 ஆகிய செல்பி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி, மக்களிடையே அதிக வரவேற்பினைப் பெற்றது.
தற்போது வெளியாகியுள்ள Iris X1 Selfie ஸ்மார்ட்போனில் FWVGA டிஸ்பிளே உள்ள 4.5 அங்குல அளவிலான திரை (854 x 480 பிக்ஸெல்கள் திறன் கொண்ட) தரப்பட்டுள்ளது. இந்த திரைக்கு Asahi Dragontrail பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. இதில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படும் குவாட்கோர் மீடியா டெக் MT6580 ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.
இதன் ராம் மெமரி DDR3 வகை. 1 ஜி.பி. ராம் மெமரி இயங்குகிறது. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு, 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். இந்த போனில் இரண்டு சிம் இயக்க வசதி உண்டு. பின்புறக் கேமரா, எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டு 8 எம்.பி. திறனுடன் செயல்படுகிறது. இதில் கொரில்லா கிளாஸ் லென்ஸ் கவர் தரப்பட்டுள்ளது. செல்பி போட்டோ எடுப்பவரை மையப்படுத்தி, இந்த ஸ்மார்ட் போன் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இதன் முன்புறக் கேமரா 5 எம்.பி. திறன் உடையதாக, எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டுள்ளது. இதன் பரிமாணம் 133.5 x 66.0 x 8.5 மிமீ. எடை 140 கிராம்.
எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் இணைக்கப்பட்டு இயங்குகின்றன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் தரப்பட்டுள்ளன. இதன் பேட்டரி 2,000 mAh திறன் கொண்டதாகும். மூன்று வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் சந்தை விலை ரூ. 6,777.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X