சாம்சங் காலக்ஸி ஏ 8 இந்தியாவில் அறிமுகம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 ஆக
2015
00:00

சாம்சங் நிறுவனம், தன் காலக்ஸி ஏ 8 என்ற புதிய ஸ்மார்ட் போனை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சந்தை விலை ரூ.32,500 என அறிவிக்கப்பட்டுள்ளது. தன் 'ஏ' (A) வரிசையில் இந்த புதிய ஸ்மார்ட் போன் வந்துள்ளது.
முதலில் சீனாவில் இது விற்பனைக்கு வந்தது. இதில் 5.7 அங்குல அளவில் AMOLED டிஸ்பிளே கொண்ட திரை, 1920 x 1080 பிக்ஸெல் திறனுடன் உள்ளது. ஆண்ட்ராய்ட் 5.1.1. லாலி பாப் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது.
இந்தியாவில் கிடைக்கும் இந்த மாடலில், Octa-Core Exynos 5430 ப்ராசசர் பயன்படுத்தப்படுகிறது. மற்ற நாடுகளில் விற்பனையாகும் இந்த மாடல் போனில் Snapdragon 615 SoC பயன்படுத்தப்படுகிறது. முழுவதுமாக மெல்லிய உலோகத் தகடு மூடியுள்ளது. இதன் தடிமன் 5,9 மிமீ. இதன் ஹோம் பட்டனில், விரல் ரேகை சென்சார் தரப்பட்டுள்ளது.
இதன் பின்புறக் கேமரா எல்.இ.டி.ப்ளாஷ் இணைக்கப்பட்டு 16 எம்.பி.திறன் கொண்டதாக உள்ளது. முன்புறமாக 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட் போன் 4G LTE வலைச் செயல்பாட்டினை சப்போர்ட் செய்கிறது. இதில் இரண்டு சிம்களை இயக்கும் வசதி தரப்பட்டுள்ளது.
இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 128 ஜி.பி. வரை உயர்த்தலாம்.
இந்த போனின் பரிமாணம் 158 x 76.8 x 5.9 மிமீ. எடை 151 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி எல்.டி.இ., வை பி, புளுடூத் 4.1 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
இதன் பேட்டரி 3050 mAh திறன் கொண்டதாக உள்ளது. கருப்பு, வெள்ளை மற்றும் தங்க வண்ணங்களில் இந்த மாடல் வந்துள்ளது. ஏர்டெல் தன் வாடிக்கையாளர்களுக்கு, இந்த போனை வாங்கும்போது, ஆறு மாதங்களுக்கு இரு மடங்கு டேட்டா பயன்படுத்த
அனுமதி கொடுக்கிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X