மொபைல் வழி இணையம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 ஆக
2015
00:00

அமெரிக்காவில், கலிபோர்னியா மாநிலத்தில் இயங்கும் குவெட்ரா ஆய்வு நிறுவனம், இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு குறித்து பல அரிய தகவல்களைத் தந்துள்ளது. இதன் சாப்ட்வேர் செயலிகள், இந்தியாவில் 80 லட்சம் ஆண்ட்ராய்ட் போன்களில் பதியப்பட்டுள்ளன. உலக அளவில் 13.5 கோடி போன்களில் இவை இயங்குகின்றன. ஆண்ட்ராய்ட் போன்கள் பயன்பாட்டில் இந்தியாவில் ஏற்பட்டு வரும் பல மாற்றங்கள் குறித்து, இந்நிறுவனம் முடிவுகளைத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இயங்கும் 23 கோடியே 20 லட்சம் இணையப் பயனாளர்களில், 65% பேர், மொபைல் போன்கள் வழியே இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். 2016ல், இந்த எண்ணிக்கை 23.6 கோடியாகவும், 2017ல் 31.4 கோடியாகவும் உயரும்.
அண்மைக் காலத்தில், மொபைல் போன் தயாரிப்பு பிரிவில் மிக அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. 2000 ஆண்டில், அமெரிக்காவில், கம்ப்யூட்டர் பிரிவில், சிலிகான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட அதே வேகமும், புத்துணர்வும், இந்தியாவில் மொபைல் போன் பிரிவில் ஏற்பட்டு வருகிறது.
நாள் ஒன்றில், இந்திய மொபைல் பயனாளர், மொபைல் போனில் செலவழிக்கும் நேரத்தில், தன் வாட்ஸ் அப் மெசஞ்சரில் 25% நேரத்தைச் செலவழிக்கிறார். நாள் ஒன்றுக்கு சராசரியாக 27 முறை வாட்ஸ் அப் மெசஞ்சரைக் கையாளுகிறார்.
மொபைல் போன்களை ரீ சார்ஜ் செய்திடும் பணியை 130 ரீ சார்ஜ் செயலிகள் மேற்கொள்கின்றன. இவற்றில், முதல் மூன்று இடத்தில் இயங்கும் நிறுவனங்கள் 50% சந்தைப் பங்கினைக் கொண்டுள்ளன. PayTM நிறுவனம் மட்டுமே 30%க்கும் மேலான பங்கினைக் கொண்டுள்ளது.
சராசரியாக, ஒரு மொபைல் போன் 10 மாதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அடுத்து, அவை பயன்படுத்தப்பட்ட போனாக விற்பனை செய்யப்படுகின்றன. இதற்குக் காரணம், மொபைல் போன் சந்தையில் தொடர்ந்து புதிய மாடல்களை அனைத்து நிறுவனங்களும் அறிமுகப்படுத்தி வருவதேயாகும். தங்கள் போன்களை அப்கிரேட் செய்திட வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில், மொபைல் போன் நிறுவனங்கள் தொடர்ந்து உருவாக்கி வருகின்றன. பல்வேறு விலை நிலைகளில், பல மாடல் போன்கள் கிடைப்பதால், மக்கள் தங்கள் மொபைல் போன்களை மாற்றிக் கொள்ளவும், தரம் உயர்த்திக் கொள்ளவும் விரும்புகின்றனர்.
மொபைல் போன்களில் பதியப்பட்டு இயக்கப்படும் செயலிகளில், முதல் 15 செயலிகள் பட்டியலில், இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட ஹைக் (Hike Messenger) மெசஞ்சர் முதலிடம் பெறுகிறது.
மொபைல் போன்களில் விளையாடப்படும் விளையாட்டுகளில், Clash of Clans என்ற கேம் முதல் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் இதனை விளையாடுபவர்களில், 28% நேரத்தை சராசரியாகப் பயன்படுத்துகிறார். Candy Crush Saga விளையாடுபவர்களின் எண்ணிக்கையில் 25% பேர் தான், Clash of Clans விளையாடுகிறார்கள். இருப்பினும் அதிக நேரம் இதற்கே பயன்படுத்தப்படுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X