மைக்ரோசாப்ட் லூமியா 540 (டி.எஸ்.) ப்ளாக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஆக
2015
00:00

விண்டோஸ் இயக்கத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கி வரும் லூமியா வரிசை போன்களுக்கு மக்களிடையே பரவலான ஆதரவு கிடைத்து வருவதால், அண்மையில் அந்த வரிசையில் விற்பனைக்கு அறிமுகமான ஸ்மார்ட் போன் Microsoft Lumia 540 (DS) Black. இதன் விலை ரூ. 10,200 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் போனில், 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் Cortex-A7 சிப் (Qualcomm Snapdragon 200) இயங்குகிறது. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 128 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் போன் 8.1 லூமியா டெனிம் இணைந்து. இதன் திரை 5 அங்குல அளவில் தரப்பட்டுள்ளது.
எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., புஷ் மெயில், இமெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகள் உள்ளன. எச்.டி.எம்.எல். பிரவுசர் இயங்குகிறது. மல்ட்டிமீடியா பைல்களை இயக்க MP3/WAV/eAAC+ /MP4/H.264 ஆகிய பிளேயர்கள் உள்ளன. டாகுமெண்ட் வியூவர் மூலம் டாகுமெண்ட்களை உருவாக்கவும், எடிட் செய்திடவும் முடியும். போட்டோ மற்றும் விடியோ எடிட்டரும் நம் வசதிக்காக கிடைக்கின்றன. 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகளில் இரண்டு மைக்ரோ சிம்களை இயக்கலாம். இதன் பரிமாணம் 144 x 73.7 x 9.4 மிமீ. எடை 152 கிராம். பார் வடிவத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
பின்புறமாக இயங்கும் கேமரா 8 எம்.பி. திறன் கொண்டதாக உள்ளது. முன்புறத்தில், 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா கிடைக்கிறது. எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. அக்ஸிலரோ மீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் இயங்குகின்றன. இதன் லித்தியம் அயன் பேட்டரி 2200 mAh திறன் கொண்டதாக உள்ளது. 576 மணி நேரம் மின் சக்தியைத் தேக்கி வைக்கிறது. தொடர்ந்து 26 மணி நேரம் பேசலாம். பாடல்களை 81 மணி நேரம் கேட்கலாம். இதன் சந்தை விற்பனை விலை ரூ. 10,200.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X