கூகுள் மேற்கொண்ட அதிரடி மாற்றங்கள் தலைமைப் பதவியில் தமிழர் சுந்தர் பிச்சை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஆக
2015
00:00

டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், மொபைல் போன்களே தங்களுக்கு அதிக லாபம் ஈட்டித் தரும் என்று கணக்கிட்ட, கூகுள் நிறுவனர், லாரி பேஜ், தன் தலைமைப் பதவியில், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தை புதுமையாகவும் எளிமையாகவும் வடிவமைத்த, 43 வயதான சுந்தர் பிச்சையை அமர்த்தியுள்ளார். புதியதொரு நிறுவனமாக “ஆல்பபெட்” என்னும் தலைமை நிறுவனத்தை, கூகுளின் இடத்தில் உருவாக்கி தான் பொறுப்பேற்றுள்ளார்.
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினை உருவாக்கிய குழுவிற்குத் தலைமே ஏற்று நடத்திய சுந்தர் பிச்சை மட்டுமே, கூகுளின் எதிர்கால சேவை சாதனங்களச் சரியாகத் தர முடியும் என முடிவெடுத்து, இந்த மாற்றங்களை லாரி பேஜ் மேற்கொண்டுள்ளார் இனி அதிக லாபம் தரும் இஞ்சின் டெஸ்க்டாப் அல்ல, மொபைல் போன் தான் என்று உணர்ந்த கூகுள் நிறுவனர் லாரி பேஜ் இந்த முடிவைச் சரியான தருணத்தில் எடுத்திருக்கிறார்.
இந்திய பொறியாளர்கள், உலகளாவிய தொழில் நுட்ப நிறுவனங்களைத் தலைமை ஏற்று நடத்த முடியும் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சுந்தர் பிச்சையின் நியமனத்திற்காக, தமிழ்நாட்டு மக்கள் பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டுள்ளனர். ஏனென்றால், சுந்தர் பிச்சை தன் தொடக்கக் கல்வியை, சென்னையில் தான் மேற்கொண்டார். தொலைபேசி, கார், தொலைக்காட்சிப் பெட்டி என எதுவும் இல்லாத வீட்டில் இருந்தே தன் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்திருக்கிறார் சுந்தர் பிச்சை. பின்னர், கரக்பூர் இந்திய தொழில் நுட்பக் கழகத்தில், தன் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். எலக்ட்ரானிக்ஸ் பாடத்திற்கென தனியே பட்டப்படிப்பு அமையாத அந்தக் காலத்தில், எலக்ட்ரானிக்ஸ் நுட்பம் தெரிந்து கொள்வதில் மிக ஆர்வம் காட்டியவர் சுந்தர் பிச்சை என, அவரின் பேராசிரியர் கூறுவார். அப்போதே எல்லைகளைத் தாண்டி சிந்தித்த பொறியியல் வல்லுநராக, சுந்தர் பிச்சை இருந்துள்ளார்.
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலையில் மேற்படிப்பு (எம்.எஸ். பொறியியல்) படிக்க உதவித் தொகை பெற்று படிப்பதற்கு அமெரிக்கா சென்றார். அளவற்ற வேகத்துடன் கூடிய இணைய இணைப்புடன் கம்ப்யூட்டர் பயன்பாட்டு நேரம் கிடைக்க, அவற்றை சுந்தர் பிச்சை மிக அருமையாகப் பயன்படுத்தி முன்னேறினார்.
எம்.எஸ். பட்டம் பெற்ற பின்னர், Wharton School of Business என்னும் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார். அதன் பின் சில நிறுவனங்களில் (Applied Materials, மற்றும் McKinsey & Company) பணியாற்றி, கூகுள் நிறுவனத்தில் 2004 ஆம் ஆண்டு, அதன் துணைத் தலைவராக இணைந்தார்.
தொழில் நுட்பத் திட்பமும், தொழில் முனைவுத் திறனும் கொண்டவராக, உலகெங்கும் உள்ள வல்லுநர்களால் அறியப்பட்டவர் சுந்தர் பிச்சை. அமெரிக்க பத்திரிக்கைகள் இவரைப் பற்றிக் கூறுகையில், “அதிகம் வெளி உலகில் அறியப்படாத தொழில் நுட்ப வல்லுநர் சுந்தர் பிச்சை. மென்மையாகப் பேசும் இவர், லாரி பேஜ் செயல்பாடுகளில் துணையாக இயங்கியவர். அவரின் வலது கரம் என அனைவராலும் அழைக்கப்பட்டவர்” என்று குறிப்பிடுகின்றன.
2008 ஆம் ஆண்டு வெளியான குரோம் பிரவுசர் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வடிவமைப்பதில் இவரின் பணி தனித்து அறியப்பட்டது. குரோம் பிரவுசர் வெளியான போது, “எதற்கு இப்போது இன்னும் ஒரு பிரவுசர்?” என அனைவரும் ஆச்சரியப்பட்டனர். ஆனால், இன்று குரோம் பிரவுசர் தான், பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படும் பிரவுசராக இயங்கி வருகிறது. இணைந்து வெளியான, இணைய அடிப்படையில் இயங்கும் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் நெட்புக் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களின் இயக்கத்தில் சிறப்பான இடத்தைக் கொண்டது.
கூகுள் கியர்ஸ், கூகுள் டூல் பார், கேட்ஜட்ஸ், கூகுள் சர்ச், கூகுள் போட்டோஸ் மற்றும் கூகுள் நவ் என இவர் பங்கு கொண்டு செம்மைப் படுத்தாத, கூகுள் சேவை எதுவும் இல்லை என்று கூறலாம். 2013ல், கூகுள் குரோம், ஆண்ட்ராய்ட் மற்றும் கூகுள் அப்ளிகேஷன் ஆகிய பிரிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டன. அதன் துணைத் தலைவர் பொறுப்பு பிச்சைக்கு வழங்கப்பட்டது.
இவர் சீர் திருத்தி அமைத்த ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், உலகில் இயங்கும் ஸ்மார்ட் போன்களில், 78% போன்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூகுள் நிறுவனத்தின் சாதனங்களை பயன்படுத்த எளிமையானதாக மாற்றி அமைத்து, அவற்றை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியதுதான், சுந்தர் பிச்சையின் வெற்றியாகும்.
தற்போது கூகுள் நிறுவனத்தினைச் சீர்திருத்தி அமைக்கும் நிகழ்வில், கூகுள் நிறுவனப் பிரிவின் தலைவராக உயர்த்தப்பட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தில் சேர்ந்து 11 ஆண்டுகளிலேயே அதன் தலைமைப் பொறுப்பினை ஏற்று சாதனை படைத்துள்ளார். இவரால் கூகுள் இன்னும் வளம் பெறும் என அனைவரும் நம்புகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில், சுந்தர் பிச்சை பொறுப்பேற்றவுடன், கூகுள் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 7% அதிகரித்துள்ளது.
புதிய கண்டுபிடிப்புகள், சாதனங்களின் எல்லைகளை விரிவாக்கி புதிய பொருட்களை வடிவமைத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு சுந்தர் பிச்சை செயல்படுவார் என லாரி பேஜ் கூறியுள்ளார். “தொழில் நுட்பம் என்பது அனைத்து மனிதர்களையும் சமப்படுத்தும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட வேண்டும்; உலகெங்கும் வாழும் அனைவருக்கும் அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றி வசதிகளைத் தரும் ஒரு நட்பு சாதனமாக இருக்க வேண்டும். அதனால் தான், கூகுள், அனைவருக்கும் கம்ப்யூட்டர் பயன்பாட்டினையும், ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தரும் வழிகளில், அதிக முதலீடு செய்து, தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்” என சுந்தர் பிச்சை கூறுவார்.
கூகுள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் இயக்கக் கட்டமைப்பில், ஏற்கனவே சுந்தர் பிச்சையின் பங்கு அனைவரும் கூர்ந்து நோக்கி பாராட்டத்தக்கதாய் இருந்தது. நிலையில்லாமல் இயங்கிய ஆண்ட்ராய் 2.3 சிஸ்டத்தினை, நிலையாக, அனைத்து வசதிகளும் கொண்ட ஆண்ட்ராய்ட் 4.0. ஆக உருவாக்கினார் பிச்சை. விரைவில், கூகுள் ஆண்ட்ராய்ட் பதிப்பு 6 ஐ வெளியிட உள்ளது.
கூகுள் நிறுவனம் உலகின் மிகச் சிறந்த தேடல் சாதனத்தின் பிரம்மாவாகப் பெயர் பெற்று இயங்கி வருகிறது. விடியோ படங்களைத் தேக்கி வைத்துப் பயன்படுத்தத் தருவதில் முதல் இடத்தைக் கொண்டுள்ளது. மொபைல் போன்களுக்கான அப்ளிகேஷன்களை உருவாக்குவதில் அதிரடியாய் புகழ் பெற்றுள்ளது.
இந்த மூன்று பிரிவுகளும் இனி, சுந்தர் பிச்சை தலைமையில் புதிய இலக்குகளையும் பரிமாணங்களையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X