புதிய நிறுவனம் ஆல்பபெட் உருவானது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஆக
2015
00:00

ஆகஸ்ட் 10 அன்று, தான் புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்குவதாக கூகுள் அறிவித்தது. இந்த அறிவிப்பு, மொத்த தகவல் தொழில் நுட்ப உலகின் கவனத்தைத் திருப்பியது. Alphabet என்ற பெயரில், புதிய நிறுவனம் ஒன்றை அமைத்து, அதன் பிரிவுகளாக, கூகுள் நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனப் பிரிவின் தலைவராக, லாரி பேஜ் இருந்த இடத்தில், சுந்தர் பிச்சை இயங்குவார்.
A முதல் Z வரை, நம் வாழ்க்கையின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கி வசதிகளைத் தரும் பணிகளை மேற்கொள்வதற்காக, இந்நிறுவனத்திற்கு Alphabet எனப் பெயரிட்டிருக்கலாம். மேலும் இதன் இணைய தளத்தின் பெயரும் இதுவரை எவரும் முயற்சிக்காததாய் உள்ளது. அதன் பெயர் https://abc.xyz.
காண்டாக்ட் லென்ஸ் தயாரிக்கும் ஆய்வு நிறுவனமான Life Sciences மற்றும் மனித உயிர்நிலை நீட்டிப்பில் ஆய்வு மேற்கொண்டு வரும் Calico ஆகிய நிறுவனப் பிரிவுகள், கூகுள் நிறுவனத்தின் பிரிவுகளாக இனி இயங்காது. அவை, Alphabet நிறுவனத்தின் பிரிவுகளாக இயங்கும். Alphabet என்பது ஆங்கிலத்தில் எழுத்துத் தொகுதியைக் குறிக்கும் சொல்லாகும். மனித இனத்தின் ஆச்சரியத்தக்க கண்டுபிடிப்பு மொழிகளாகும். அதன் அடிப்படையில் தான், கூகுள் தன் தேடல் சாதனக் கட்டமைப்பினை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்தப் பெயரில் புதிய நிறுவனத்தைத் தொடங்குவதில், தானும், செர்ஜே பிரின்னும் மிக மகிழ்ச்சி அடைவதாக, லாரி பேஜ் தெரிவித்துள்ளார். ஆல்பாபெட் நிறுவனத்தின் கீழ் மற்ற நிறுவனப் பிரிவுகள் அனைத்தும் இயங்கும் என்றும், அவை ஒவ்வொன்றும் ஒரு தலைவரைக் கொண்டிருக்கும் என்றும் லாரி பேஜ் அறிவித்துள்ளார். இதனால், அவை முழுச் சுதந்திரத்துடன் ஆய்வு மற்றும் தயாரிப்பு பணியை மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தான் ஆளுமை கொண்டுள்ள தொழில் நுட்ப உலகின் மூலம், மனித இனத்திற்கும் அதன் வாழ்க்கைக்கும் இன்னும் பல சேவைகளைத் தந்து, மனித வாழ்க்கையை மகிழ்ச்சியான ஒன்றாக ஆல்பபெட் மாற்றும் என நாம் எதிர்பார்க்கலாம்.
'ஆல்பபெட்' நிறுவனம் தலைமை நிறுவனமாக, லாரி பேஜ் தலைமையில் இயங்கும். இதன் பிரிவு நிறுவனங்களாக, கூகுள் 2014ல் கையகப்படுத்திய, வீடுகளுக்கான டிஜிட்டல் சாதனங்களை உருவாக்கும் நிறுவனமான நெஸ்ட் (Nest-~ Tony Fadell (President), முதலீட்டு நிறுவனமான கூகுள் கேபிடல் (David Lawee), யு ட்யூப் (Susan Wojcicki), சர்ச், டெக்னிகல் இன்ப்ரா ஸ்ட்ரக்சர், விளம்பரங்கள் (Ads), மேப்ஸ், ஆப்ஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் பிரிவுகளை உள்ளடக்கிய கூகுள் (சுந்தர் பிச்சை), அதிவேக இணைய இணைப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பைபர் (Craig Barratt), சோதனை முறை முயற்சிகளில் முதலீடு குறித்து செயல்படும் கூகுள் வென்ச்சர்ஸ் (Bill Marris), நகரங்களை மேம்படுத்த உத்திகளை ஆய்வு செய்து கண்டறியும் சைட்வாக் லேப்ஸ் (Dan Doctoroff), கூகுள் கிளாஸ் போன்ற முற்றிலும் புதிய, கற்பனைக்கெட்டாத சாதனங்களை வடிவமைப்பதில் ஈடுபடும் கூகுள் எக்ஸ் (Astro Teller) மற்றும் மனிதனின் ஆயுளை நீட்டிப்பதில் ஆய்வு மேற்கொண்டு வரும் கலிகோ (Arthur Levinson) ஆகியவை இயங்கும். (அடைப்புக் குறிகளுக்குள் இந்த பிரிவுகளின் தலைவர்கள் பெயர்கள் தரப்பட்டுள்ளன). யு ட்யூப் நிறுவனப் பிரிவிற்கு தனியே தலைவர் இருந்தாலும், அது பிரிக்கப்படாமல், சுந்தர் பிச்சையின் தலைமையில் இயங்கும் கூகுள் நிறுவனத்தின் ஒரு பிரிவாகவே இயங்கும். கூகுள் ரோபோடிக்ஸ் நிறுவனம், ஆல்பபெட் நிறுவனத்தின் நேரடி கண்காணிப்பில் இருக்கும். இதன் தலைவர் யாரென இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஆல்பபெட் ஓர் அஷ்டாவதானியாக இந்த எட்டுப் பிரிவுகளுக்குத் தலைமை ஏற்று இயங்கும். விளம்பர வர்த்தகம் மூலம் வரும் அளப்பரிய வருமானம், நேராக ஆல்பபெட் தலைமையை அடையும். தலைமை, இந்த பிரிவுகளின் தேவைக்கேற்ப, நிதியை ஒதுக்கும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X