ஆல்பபெட் நிறுவனப் பெயர் தப்புமா?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஆக
2015
00:00

கூகுள் குழுமத்தின் புதிய நிறுவனப் பெயரான ஆல்பபெட் என்னும் பெயர் ஏற்கனவே பல நிறுவனங்களின் பெயராக உள்ளது தெரியவந்துள்ளது. இதே Alphabet என்ற பெயரில் ஓர் இணைய தளம் ஒன்றும் இயங்கி வருகிறது.
தங்கள் புதிய நிறுவனத்திற்கு Alphabet என்ற பெயரினைத் தேர்ந்தெடுத்து சூட்டிய லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின், தங்களுடைய கூகுள் தேடு தளத்தில் இந்த பெயர் கொண்ட நிறுவனம் ஏதேனும் இருக்கிறதா என்று தேடி இருந்தால், பல நிறுவனங்கள் இந்தப் பெயரில் இயங்குவதைக் கண்டிருக்கலாம். ஒருவேளை தெரிந்தே இந்த பெயரைத் தேர்ந்தெடுத்தார்களா என்பதுவும் தெரியவில்லை.
ஜெர்மனியில் இயங்கும் பி.எம்.டபிள்யு கார் நிறுவனத்தின், துணை நிறுவனத்தின் வணிகப் பெயராக Alphabet உள்ளது. Alphabet.com என்ற இணைய தளத்தினையும் அது இயக்கி வருகிறது.
தங்கள் இணைய தளம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றும், இந்த இணைய தளப் பெயரினை விற்பனை செய்திடப் போவதில்லை என்றும் அந்நிறுவனச் செயலர் அறிவித்துள்ளா. (இந்த இணைய தளத்தினை அணுக முயற்சித்த போது, தொடர்ந்து அது கிடைக்காமலேயே இருந்தது. அந்த அளவிற்கு அதனைப் பலர் திறந்து பார்க்க முயற்சித்து வரலாம் என்று தெரிய வந்தது) அமெரிக்க பங்குச் சந்தையில் ஒரு நிறுவனம் Alphabet Funds என்ற பெயரில் இயங்கி வருகிறது. ஒரு நிறுவனம் குறிப்பிட்ட ஒரு பெயரினைப் பயன்படுத்துவதாலேயே, அதனை மற்றவர் யாரும் பயன்படுத்தக் கூடாது என சட்ட விதிமுறை இல்லை.
ஆனால், ஒரு பெயரை இரண்டாவதாக மற்றொரு நிறுவனம் பயன்படுத்தி, அதனால், முதல் நிறுவனத்தின் வர்த்தகத்திற்கு இடையூறு ஏற்பட்டாலே, பெயர் காப்புரிமை விதிகளின் கீழ் அது அத்துமீறலாகக் கருதப்படும்.
ஏற்கனவே Alphabet நிறுவனம் abc.xyz என்ற பெயரில் ஓர் இணைய தளத்தினைக் கொண்டுள்ளது. இது குறித்து கவலைப்பட வேண்டாம் என லாரி பேஜ் தன் வலைமனையில் தெரிவித்துள்ளார்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X