பெர்சனல் பிரேக்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஆக
2015
00:00

விண்டோஸ் 10 சிஸ்டம் குறித்த எளிய பல சந்தேகங்களுக்கும் கூட, அவற்றை ஒதுக்கித் தள்ளாமல் பட்டியலிட்டு பதில் அளித்துள்ள தங்கள் அக்கறை எங்களுக்குக் கிடைத்திருக்கும் நல்ல வரமாகும். தொடர்ந்து இது போல புதிய விஷயங்களைத் தெளிவான குறிப்புகளுடன் நாங்கள் எதிர்பார்க்கிறோம். விண் 10 க்கு அறிமுகமாகும் கம்ப்யூட்டர் மாணவர்களுக்கும் உங்கள் குறிப்புகள் உதவிடும். நன்றி.
பேரா. தேவசகாயம், கோவை.

தாங்கள் குறிப்பிட்டுள்ள http:// www.urlvoid.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம், நாம் அனுப்பும் முகவரிகளில் உள்ள இணைய தளங்கள் குறித்து, பல்வேறு சோதனைகள் நடத்தி அவற்றின் அபாயம் குறித்து அறிவிப்பது நல்ல பயனுள்ள சேவை ஆகும். இதனைத் தெரிவித்த உங்களுக்கு என் நன்றி.
என். ராஜாராமன், கோவை.

விண்டோஸ் 10 சிஸ்டம் இயக்கம் நமக்கு பிடிக்கவில்லை எனில், விண்டோஸ் 8 அல்லது 7க்கு மாறிக் கொள்ளலாம் என்பது ஆறுதல் அளிக்கும் தகவல் தான். ஆனால், அதனை ஒரு மாதத்திற்குள் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் நெருக்கடியைத் தருகிறது. இந்த நிபந்தனையை மீறும் வழி ஏதாவது இருந்தால் கூறவும்.
பா. சிவராஜ் குமார், திண்டுக்கல்.

மொபைல் ஸ்மார்ட் போன் என்பது, இன்று அனைவரின் கரங்களில் இருக்கும் கம்ப்யூட்டராக மாறி வருகிறது. எனவே, இணையத்தையும், வர்த்தக தளங்கள் மற்றும் சமூக தளங்களையும் அணுக, இனி மொபைல் போன்களே சாதனங்களாக அமையும். பெருகி வரும் ஸ்மார்ட் போன் பயன்பாடு இதைத்தான் தெரிவிக்கிறது. நீங்கள் தரும் புள்ளி விபரங்களும் அதையே உறுதி செய்கின்றன.
எஸ். பிரியா தனசேகரன், தாம்பரம்.

கேள்வி பதில் பகுதியில் பைனரி, டெசிமல் குறித்த விளக்கம் மிக அருமை. எடுத்துக் காட்டுகளுடன் விளக்கியிருப்பது, மிக அழகாக அவற்றின் அடிப்படையைப் புரிய வைத்தது. இது ஏதோ கணக்கின் அடிப்படை என்று இருந்தேன். விளக்கத்திற்கு நன்றி.
என். பாண்டி, திருப்பூர்.

விண்டோஸ் 10ன் மிக முக்கிய அம்சங்கள் என நீங்கள் பட்டியலிட்டிருப்பவை, இன்று உலகெங்கும் உள்ள கம்ப்யூட்டர் பயனாளர்களை அதிகம் கவர்ந்தவை ஆகும். இவற்றை, விண் 10 சோதனைப் பதிப்பு வந்த போதே நீங்கள் அளித்திருந்தீர்கள். தற்போது இன்னும் தெளிவாகக் குறிப்பிடிருக்கிறீர்கள். இந்த வசதிகள் இயங்கும் திரைக் காட்சிகளையும் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எம். சிக்கந்தர், உத்தமபாளையம்.

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வந்துள்ள நிலையில், அனைத்து வசதிகளும் முழுமையாக அறியப்படாமலேயே உள்ளன. இந்த சிஸ்டத்தினைப் பதிந்து கொள்ளாதவர்களுக்கும் கூட, அது குறித்து பல ஐயங்கள் தொடர்ந்து பயமுறுத்தி வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களாக, நீங்கள் அளித்துள்ள விண் 10 குறித்த கட்டுரைகள் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் தருவதாக அமைந்துள்ளன. தொடர்ந்து விண் 10 குறித்து இன்னும் பல டிப்ஸ்களை எதிர்பார்க்கிறேன். அனைவருக்கும் அவை உதவுவதாக இருக்கும்.
டாக்டர் எம். சுரேஷ் குமார், மதுரை.

பிரவுசரில் சந்திக்கும் பிழைச் செய்திகள், பல காலமாய் இருப்பவை தான் என்றாலும், கம்ப்யூட்டருக்கும் இணையத்திற்கும் அறிமுகமாகும் புதியவர்களுக்கு, குறிப்பாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இந்த குறிப்புகள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன.
எஸ்.கே. உமா ராணி, திருச்சி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X