பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 ஆக
2015
00:00

அனைத்து பத்திரிக்கைகளும் சுந்தர் பிச்சை அவர்களின் புதிய தலைமைப் பதவி குறித்து எழுதினாலும், அதன் பின்னணி, கூகுள் நிறுவனத்திற்கான பங்களிப்பு, கூகுள் தற்போது எப்படி ஆல்பபெட் தலைமையில் இயங்கும் என்பது குறித்த மிக விரிவான தகவல்களை நீங்கள் தந்துள்ளீர்கள். எங்களின் பாராட்டுக்களும் நன்றியும்.
எஸ். சாமுவேல், விருதுநகர்.

கூகுள் நிறுவனத் தலைவர், இந்திய வம்சாவளி, குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை உயர் பதவிக்கு நியமித்ததற்காகப் பாராட்டியதுடன், “ஆல்பபெட்” என்ற பெயரினைத் தேர்ந்தெடுத்ததில் அவசரப்பட்டுவிட்டதனையும் குறிப்பிட்டு, ஒரு நல்ல தகவல் தொழில் நுட்ப பத்திரிக்கையாளராக செயல்பட்டு கட்டுரை தந்துள்ளீர்கள். தங்களுக்கு எங்கள் வணக்கங்கள்.
என். காயத்ரி, கோவை.

ஒவ்வொரு முறை புதிய வைரஸ் குறித்து தகவல் தரும்போதும், என்னைப் போன்ற கிராமங்களில் இருந்து கம்ப்யூட்டரை இயக்குபவர்களுக்கு அதிர்ச்சியாகவும் அச்சமாகவும் உள்ளது. இது போன்ற தகவல்களைத் தரும்போது, எந்த ஆண்ட்டி வைரஸ் இருந்தால், அந்த வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடலாம் என்பது போன்ற தகவல்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஆ. சிவராஜ், பொள்ளாச்சி.

தொடர்ந்து விண்டோஸ் 10 பயன்படுத்தி வரும் நம் வாசகர்களின் அனுபவங்களையும் பெற்று, மலரில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.
ஆர். சின்ன பாண்டி, உசிலம்பட்டி.

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏன் இந்த மீடியா சென்டர் மற்றும் டிவிடி இயக்கம் ஆகியவற்றுக்கான வசதிகளைத் தன் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் எடுத்துவிட்டது என்று தெரியவில்லை. இவ்வளவு முன்னேற்றமடைந்த சிஸ்டத்தினை இலவசமாகத் தருகையில், நாம் பழகிய சில வசதிகளை ஏன் நீக்குகிறது. அவற்றின் இடத்தில், எந்த தர்ட் பார்ட்டி புரோகிராம்களைப் பயன்படுத்தலாம் என்ற தங்களின் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன.
எஸ். ராமானுஜம், திருப்பூர்.

“விண்டோஸ் 10 உடனடி மாற்றங்கள்” என்ற தங்களின் கட்டுரையைப் பத்திரமாக அச்செடுத்து வைத்துள்ளேன். என்னுடைய கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்தவுடன் நீங்கள் குறிப்பிட்ட செயல்முறைகளை மேற்கொள்வேன். தகவல்களுக்கு நன்றி.
என். சுந்தர மூர்த்தி, புதுச்சேரி.

4ஜி அலைவரிசை இணைப்பைத் தருவதில் அனைத்து நிறுவனங்களும் இறங்க வேண்டும். அப்போதுதான், கட்டணத்தில் நியாயமான நிர்ணயம் இருக்கும். இதனைப் பற்றி எழுதும் நீங்கள், நிறுவனங்கள் தரும் கட்டணத் திட்டங்கள் குறித்த தகவல்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எஸ். இந்திரஜித், கரூர்.

கேள்வி பதில் பகுதியில், விண்டோஸ் 10 இன்ஸ்டலேஷன் டிஸ்க் குறித்து காண வேண்டிய தள முகவரியில் தரப்பட்டுள்ள தகவல்கள் மிகவும் பயனுள்ளதாகவும் தெளிவாகவும் உள்ளன. நீங்கள் தந்துள்ள சுருக்கமான சரியான தகவல்களே அந்த தளத்தில் ஆங்கிலத்தில் விரிவாகத் தரப்பட்டுள்ளன.
என். கோவிந்தராஜ், சிதம்பரம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X