எக்ஸெல் டிப்ஸ்...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 ஆக
2015
00:00

எக்ஸெல் புரோகிராமில் ஆட்டோ கரெக்ட்: அனைத்து ஆபீஸ் தொகுப்புகளிலும் உள்ள AutoCorrect என்னும் டூல் எக்ஸெல் புரோகிராமிலும் தரப்பட்டுள்ளது. இந்த டூலைப் பயன்படுத்துவதன் மூலம், நாம் ஆங்கிலச் சொற்களில் அடிக்கடி ஏற்படுத்தும் எழுத்துப் பிழைகளைத் திருத்திக் கொள்ளலாம். அதெப்படி? என நீங்கள் வியக்கலாம். ஆனால், இந்த டூலைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம், நாம் நம்மை அறியாமல் ஏற்படுத்தும் சொல் பிழைகளைக் கம்ப்யூட்டரே சரி செய்திடும்படி அமைக்கலாம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட சொல்லை டைப் செய்கையில், தவறாகவே டைப் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்ளலாம். ஆட்டோ கரெக்ட் டூல் மூலம், இந்த சொல்லில் உள்ள தவற்றினை, எக்ஸெல் புரிந்து கொண்டு, சரியாக உள்ள சொல்லை அதன் இடத்தில் தானாக அமைக்குமாறு செய்திடலாம். அதே போல, மிக நீளமான அளவில் சொல் தொகுதிகளை நீங்கள் அடிக்கடி அமைக்க வேண்டியதிருந்தால், அதனை சுருக்கு எழுத்துக்களை அமைக்கும்போது, டெக்ஸ்ட்டில் விரிவாக அமைக்குபடி செட்டிங்ஸ் அமைக்கலாம். இதற்கென இந்த டூலை எப்படி அமைப்பது என இங்கு பார்க்கலாம்.
AutoCorrect டூலில் கூடுதல் தகவல்களைச் சேர்க்க, முதலில் ஆட்டோ கரெக்ட் டூல் பாக்ஸைத் திறக்கவும். இதற்கு,
1. முதலில் Excel Options டயலாக் பாக்ஸைத் திறக்கவும். (எக்ஸெல் 2007ல், ஆபீஸ் பட்டனில் கிளிக் செய்து, பின் கீழாக உள்ள Excel Options என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2010 எனில், ரிப்பனில் File டேப் கிளிக் செய்து, பின்னர் Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. இந்த டயலாக் பாக்ஸில் இடது பக்கம் உள்ள Proofing என்பதில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து AutoCorrect என்னும் ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் இப்போது ஆட்டோ கரெக்ட் டயலாக் பாக்ஸினைத் திறக்கும்.
4. ஆட்டோ கரெக்ட் டயலாக் பாக்ஸின் கீழாக, AutoCorrect entries ஒரு பட்டியலாகக் கிடைக்கும். ஒவ்வொரு பதிவும் இரு பிரிவுகளாக இருக்கும். இதன் இடது புறத்தில் உள்ள பதிவு, நீங்கள் தவறாக டைப் செய்திடும் சொல். வலது புறம் அதற்கு இணையாக உள்ள சொல், தவறு நீக்கப்பட்ட சரியான சொல். இதனையே, எக்ஸெல் தானாக, உங்களின் தவறாக டைப் செய்யப்பட்ட சொல் உள்ள இடத்தில் அமைக்கும்.
5. இனி நீங்களாக, நீங்கள் தவறிழைக்கும் சொற்களைச் சேர்க்க, Replace and With பீல்டுகளைப் பயன்படுத்தவும். எக்ஸெல் எந்த தவறான சொல்லை உணர்ந்து கொள்ள வேண்டுமோ, அதனை Replace பீல்டில் அமைக்கவும். பின் அந்த இடத்தில், சரியான சொல்லாக எதனை அமைக்க வேண்டுமோ, அதனை With பீல்டில் அமைக்கவும். இதனையே சுருக்கு எழுத்துக்கள் இடத்தில் நீளமான சொற்களை அமைக்கும்படியும் அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, Tamilnadu Government Orders என்று மூன்று சொற்கள் அடங்கிய சொல் தொகுப்பினை நீங்கள் அடிக்கடி டைப் செய்திட வேண்டியதிருக்கலாம். இதற்கு நீங்கள் “TGO” என்ற சுருக்குச் சொல்லை Replace பீல்டிலும், Tamilnadu Government Orders என்பதை With பீல்டிலும் அமைக்கவும். இவற்றை அமைத்து விட்டு, மவுஸால் Add என்பதில் கிளிக் செய்திடவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X