சோனி எக்ஸ்பீரியா சி 5 அல்ட்ரா டூயல் போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 ஆக
2015
00:00

சோனி நிறுவனத்தின், Sony Xperia C5 Ultra Dual ஸ்மார்ட் போன், இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. செல்பி போட்டோ எடுப்போரை மையமாகக் கொண்டு இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் தடிமன் 0.6 மிமீ மட்டுமே. 1080p டிஸ்பிளே கொண்ட 6 அங்குல திரை இதில் தரப்பட்டுள்ளது. 1.7 ஆக்டா கோர் திறன் கொண்ட MediaTek MT6752 ப்ராசசர் இந்த ஸ்மார்ட் போனை இயக்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.0. லாலிபாப். இதன் பின்புறக் கேமரா Exmor RS சென்சார் கொண்டதாக, 13 எம்.பி. திறன் கொண்டதாக உள்ளது. எல்.இ.டி. ப்ளாஷ் தரப்பட்டுள்ளது. முன்புறக் கேமராவும் இதே திறனுடையதாக, அதெ சென்சார் வசதியுடன் செல்பி ப்ளாஷ் கொண்டதாக உள்ளது.
இந்த ஸ்மார்ட் போன் 4ஜி எல்.டி.இ. சப்போர்ட் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் 6 அங்குல திரை, 1920 x 1080 பிக்ஸெல் திறனுடன், Full HD IPS டிஸ்பிளே கொண்டதாக உள்ளது. இதன் செயல்பாட்டில் Mobile BRAVIA Engine 2 இணைக்கப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 200 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் 5 லாலி பாப் சிஸ்டம் இயங்குகிறது. இரண்டு சிம்களை இதில் இயக்கலாம்.
ஆர்.டி.எஸ். இணைந்த எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் இயங்குகின்றன. இதன் பரிமாணம் 164.2 x 79.6 x 8.2 மிமீ. எடை 187 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.1, ஜி.பி.எஸ். மற்றும் என்.எப்.சி. தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2930mAh திறன் கொண்டது. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் ஸ்மார்ட் போன், இந்தியாவில் சென்ற வாரம் முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 29,900 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X