பெர்சனல் பிரேக்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 ஆக
2015
00:00

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏன் இந்த மீடியா சென்டர் மற்றும் டிவிடி இயக்கம் ஆகியவற்றுக்கான வசதிகளைத் தன் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் எடுத்துவிட்டது என்று தெரியவில்லை. இவ்வளவு முன்னேற்றமடைந்த சிஸ்டத்தினை இலவசமாகத் தருகையில், நாம் பழகிய சில வசதிகளை ஏன் நீக்குகிறது. அவற்றின் இடத்தில், எந்த தர்ட் பார்ட்டி புரோகிராம்களைப் பயன்படுத்தலாம் என்ற தங்களின் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன.
எஸ். ராமானுஜம், திருப்பூர்.

அமெரிக்க நாட்டில், இன்டர்நெட், கம்ப்யூட்டர் மற்றும் சார்ந்த டிஜிட்டல் நிறுவனங்களில், இத்தனை தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் தலைமை இடத்தில் இருப்பதனை அறிகையில் மகிழ்ச்சியாக உள்ளது. இவர்கள், இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு வழி காட்டும் வகையில் நம் நாட்டில் எதனையேனும் தொடங்கி, இதே நிலையைத் தொடர வைக்க வேண்டும். நம் அரசும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
எஸ்.ஸ்ரீநிவாசன், தஞ்சாவூர்.

இந்தியாவில் இணையம் கொண்டு வர தொடக்கத்தில், விதேஷ் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்னும் பொதுத் துறை நிறுவனம் மிக அருமையாகச் செயல்பட்டு கட்டமைப்பினை ஏற்படுத்தி, சேவையையும் வழங்கி வந்தது. ஆனால், அது தனியார் துறைக்கு விற்பனை செய்யப்பட்டு, பல மாற்றங்களைச் சந்தித்து, இப்போது அந்த தனியார் நிறுவனமும், வாடிக்கையாளர்களைத் தங்கள் இஷ்டத்திற்கு மாற்றுவதற்காக, தங்களுக்குள்ளான நிறுவனத்திற்கு இணைய சேவை நிறுவனத்தை மாற்றிக் கொள்கிறது. இந்தக் குழப்பத்தில் சிக்குவது மக்கள் தான்.
என். நத்தர் பாட்சா, மதுரை.

நீங்கள் அறிவுரை தந்தபடி, ஜிம்ப் செயலியை, இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பார்த்தேன். அடோப் போட்டோ ஷாப்பிற்கு இணையாக அனைத்து வசதிகளையும் கொண்டதாக உள்ளது. இவ்வளவு வசதிகளைக் கொண்ட புரோகிராமினை இலவசமாகத் தரும், புரோகிராமினை உருவாக்கியவர்களுக்கு நாம் நன்றி கடன் பட்டுள்ளோம்.
கா. இறையரசன், திருவிடைமருதூர்.

இருபது ஆண்டுகளாக இந்தியாவில் இணையம் இருந்தாலும், அண்மைக் காலத்தில் தான், குறிப்பாக ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் தான், அதுஅதிகம் பேரைச் சென்றடைந்துள்ளது என்பது உண்மை. தொடக்க காலத்தில் என்ன நடந்தது என்பதைக் காட்டிலும், இந்த அரிய வசதியைத் தர நமக்காகப் பாடுபட்டவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.
எஸ். என். கமலாகரன், தாம்பரம்.

ஸ்டார்ட் மெனு மூலம் ஸ்டார்ட் அப் புரோகிராம்களின் இயக்கத்தை நிறுத்தி வைக்க நீங்கள் தந்துள்ள பதில் வழி செயல்பட்டேன். நிறைய புரோகிராம்களை நிறுத்திவிட்டேன். இன்னும் சிலவற்றை அன் இன்ஸ்டால் செய்திடப் போகிறேன். சரியான வழி காட்டலுக்கு நன்றி.
எஸ். ஆரோக்யநாதன், புதுச்சேரி.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை மட்டுமே பேட்ச் பைல் தந்து வந்த மைக்ரோசாப்ட் நிறுவனம், தற்போது வாடிக்கையாளர்களின் நலனை முன்னிட்டு, தேவைப்படும்போதெல்லாம் பேட்ச் பைல் தருவது, நல்ல முடிவாகும். தன் வாடிக்கையாளர்களைக் கைவிடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்காகவும், செயல்பாட்டிற்காகவும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பாராட்டலாம்.
ஆ. தியாகேசன், திருப்பூர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.