ஒரே நாளில் 100 கோடி பேர் பயன்படுத்திய பேஸ்புக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 செப்
2015
00:00

பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் இரு வாரங்களுக்கு முன்பு, அளவிடாத மகிழ்ச்சியில் இருந்தார். ஆகஸ்ட் 24 அன்று, பேஸ்புக்கினை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியது. இதனைத் தன் வலைமனைப் பக்கத்தில் (https://www.facebook.com/zuck/posts/10102329188394581?pnref=story) தெரிவித்துள்ளார். பூமியில் வாழும் மொத்த மக்களில் ஏழில் ஒருவர், அன்று பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இது அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கிற்கு ஒரு பெரிய வெற்றியாகும். உலக மக்கள் அனைவரையும், தன் பேஸ்புக் தளம் மூலம் இணைக்கும் இலக்கிற்கு, இது முதல் படியாகும் என்று மார்க் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், பேஸ்புக் இணைய தளத்தில் பதிந்தவர்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டியது. ஆனால், முழுமையாக ஒரு நாளில் பயன்படுத்தியவர் எண்ணிக்கை அந்த அளவினை எட்டியது, இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான்.
ஒரு மாதத்தில், பேஸ்புக் தளத்தினைப் பயன்படுத்தியவர் எண்ணிக்கை 100 கோடியை எட்டியது ஏப்ரல், 2014ல். இப்போது இந்த எண்ணிக்கை ஒரே நாளில் எட்டியுள்ளது.
“பேஸ்புக் சமுதாயத்தில், ஒவ்வொருவருக்கும் ஓர் இடம் தரப்பட்டுள்ளது. இந்த நவீன உலகில், சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்து ஒவ்வொருவரையும் இணைத்துக் கொள்ள அது இடம் தருகிறது” என்று மார்க் தன் குறிப்பில் எழுதியுள்ளார்.
தற்போது பேஸ்புக் பல நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ள இலவச இணைய இணைப்பின் (internet.org) மூலம், அடுத்த ஐநூறு கோடி என்ற இலக்கை பேஸ்புக் விரைவில் அடையும் வாய்ப்பு உள்ளதாக மார்க் கருதுகிறார்.
ஹார்வேர்ட் பல்கலைக் கழகத்தின் விடுதி அறையில் பேஸ்புக் தொடங்கப்பட்டது. முதலில், அது அந்த பல்கலைக் கழக மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. பின்னர், அது சமூக இணைய தளமாக மாற்றப்பட்டு, பொதுமக்களுக்கு பயன்படுத்த தரப்பட்டது. அதன் பின்னர், இத்தளத்தின் வளர்ச்சி எந்த கணிப்புக்கும் அடங்காமல் வளர்ந்து வந்தது. பல புதிய வசதிகள் அவ்வப்போது வழங்கப்பட்டன. செய்திகள் தகவல்களாகத் தரப்பட்டன. பேஸ்புக் மெசஞ்சர் வழி பணம் அனுப்பவும் வசதி தரப்பட்டுள்ளது.
தற்போது புதிய வசதி ஒன்று சோதனையில் இருந்து வருகிறது. அதனை, பேஸ்புக் எம் (Facebhook M) என அழைக்கின்றனர். பேஸ்புக் மெசஞ்சர் செயலியின் உள்ளாகப் பயனாளர்களுக்குக் கிடைக்கும் பெர்சனல் அசிஸ்டண்ட் இது. நமக்காக பணிகளை மேற்கொண்டு செய்திடும் உதவியாளர். தகவல்களைத் தேடித் தரும். செயற்கை நுண்ணறிவு எனப்படும் Artificial Intelligence தொழில் நுப்டம் மூலம் இது செயல்படும். பயனாளர் சார்பில், பொருட்களை இணைய தளத்தில் ஆர்டர் செய்திடும். நம் நண்பர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து அனுப்பும். பரிசுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பும். விடுதிகளில் நாம் சென்று உணவு உண்ண, இடங்களை முன் பதிவு செய்திடும். பயணங்களுக்கான ஏற்பாட்டினை மேற்கொள்ளும். இது போல நம் தனிப்பட்ட விருப்பங்களைத் தானாகவே முடிவு செய்து, நம் விருப்பத்தின் பேரில் மேற்கொள்ளும்.
பேஸ்புக் வளர்ச்சியில், இந்தியா சிறப்பான ஓர் இடத்தைக் கொண்டுள்ளது. சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, இணையம் பயன்படுத்துவோர் இங்கு தான் அதிகம். ஏறத்தாழ 23.4 கோடி பேர் உள்ளனர். இருப்பினும், மொத்த ஜனத்தொகையில் 19% பேர் தான் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இது, 46% ஆக இருக்கும் சீனாவுடன் ஒப்பிடுகையில், மிக மிகக் குறைவாகும்.
வளர்ந்த நாடுகளான, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில், பேஸ்புக் தளத்தினை அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். அதனால், வங்கிகளின் பணியான நிதி பரிமாற்றத்தினையும், பேஸ்புக் தன் தளத்தில் தருகிறது.
இவற்றுடன் தான் தற்போது தந்து கொண்டிருக்கும் வசதிகளை பேஸ்புக் அவ்வப்போது மேம்படுத்தி வருகிறது. இந்த சிறப்பான சேவைகள் தான், ஒரே நாளில், பேஸ்புக் தளத்தினை 100 கோடி பேர் பயன்படுத்தும் நிகழ்வை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாகவே, டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக்கினைப் பயன்படுத்துபவர்களைக் காட்டிலும், ஸ்மார்ட் போன்களின் வழியாகப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையே அதிகம் என்ற தகவலும் தரப்பட்டுள்ளது. ஒரே நாளில் 100 கோடி பேர் லாக் இன் செய்து இருந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும். மேலும், பேஸ்புக் டாட் ஓ.ஆர்.ஜி. திட்டத்தின் கீழும் பலர் புதியதாக இணையத்தை, குறிப்பாக, பேஸ்புக்கினைப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பார்கள். இந்த ஆண்டு இறுதியில், 320 கோடி பேர் இணைய இணைப்பில் இருப்பார்கள் என்று எதிர்பார்த்தாலும், 400 கோடி பேர் இணையத்திற்கான இணைப்பைப் பெறாதவர்களாகவே இருப்பார்கள் என்பதுவும் உண்மையே.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X